பழனியாண்டவரும் ஆங்கிலமும்

தமிழுக்கு மூலதனக் கடவுள் முருகன். அப்படிப்பட்ட முருகனின் ஒரு படை வீட்டினது இணையதளம் உள்ளது. அது www.palani.org என்பதாகும். அந்த இணையதளம் ஆங்கிலத்தில் உள்ளது என்பது வருத்தமான செய்தியாகும். நான், அந்த இணையம் ஆங்கிலத்தில் இருப்பதை குறைகூறவில்லை. ஆனால் தமிழில் இல்லையே என்று வருந்திகிறேன்.

சிறு வயதில் எனது தாயார் முருகன் பாடல்களை கற்றுக்கொடுத்துள்ளார். அதில் கொஞ்சம் ஞாபகம் இருப்பது கந்த சஷ்டி கவசப்பாடல்கள் தான். மற்றும் நிறைய முருகக்கடவுளை மையமாகக்கொண்ட திரைப்படங்களை பார்த்திருகிறேன். அதிலெல்லாம் முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை உணர்ந்துள்ளேன். நான் இந்தப்பதிவை பார்க்கும் பொழுது, அதில் உள்ள புகைப்படங்கள் பழனி.ஆர்க் என்ற இணையத்திலுருந்து எடுக்கப்பட்டன.

உடனே பழனி.ஆர்க்கு சென்று அதிர்ச்சிக்குள்ளானேன். எனென்றால் இணையம் ஆங்கிலத்தில் இருந்தது. தமிழுக்கே உரிய கடவுளான முருகனது பழனிக்திருகோயிலின் இணையம் தமிழில் இல்லை. ஏன் என்றுத்தெரியவில்லை.

இதனைப் படிப்பவர்கள் யாராவது பழனியிலுருந்தால், அருள்மிகு தண்டாயித பாணி சாமிகளின் தேவஸ்த்தானத்திற்கு தெரிவிக்கவும்.

Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...