பெங்களூர் - வாடகை விடும் வீட்டுக்காரர்கள்....

இந்தியாவின் சிலிக்கான் வேலி எனக்கூறப்படும் பெங்களூர். அந்த ஊரில் நடக்கும் அநியாயங்கள் ஏராலம். அவை என்னவென்றால் திருட்டு,கொலை, கொள்ளை, வீட்டு வாடகைப் பிரச்சனை. சமிபத்தில் நாங்கள்(நான், எனது மாமா குடும்பத்தினர்) வீட்டு வாடகைப் பிரச்சனையை சந்தித்தோம்.

வீட்டுக்கு குடி போய் இரண்டு வருடம் ஆனது. வாடகையாக Agreement'ல் கூறப்பட்டுள்ள தொகையை(5ஆயிரம் மேல்) எனது மாமா ஒவ்வொரு மாதமும்(போன மாதம் வரை) கொடுத்து வந்தார். தண்ணீர் வரி, மின்சாரம் போன்ற வற்றையும் சரியாகக் கொடுத்து வந்தார். எல்லாம் சரியாகத்தான் சென்றிருந்தது.

கடந்த மாதம் வீட்டுக்காரர் வீட்டை காலி பன்ன சொன்னார். அதன் படி வேறு வீட்டை பார்த்தனர் எனது மாமாவும், அத்தையும். சென்ற வெள்ளிக்கிழமையன்று நாங்கள் வீட்டை காலி செய்தோம். அப்போது தான் பிரச்சனை ஆரம்பித்தது. வீட்டுக்காரர் வீட்டுற்கு பெயின்ட் அடிச்சுத்தர சொன்னார். ஆனால் இது Agreement'ல் கூறப்படவில்லை. நாங்கள் முடியாது என்றோம். வீட்டுக்காரர் ஒரே புடியாக (முயலுக்கு மூன்று கால் சொல்வதைப்போல) பெயின்ட் அடிச்சேத்தரவேண்டும் எனது உருதியாக கூறினார். அப்போது தான் நாங்கள் தண்ணீர் பிரச்சனையை பற்றி எடுத்துக்கூறினோம். "தண்ணீர் வரியை அந்த வளாகத்தில் உள்ள அத்தனை குடும்பமும் பங்கிட்டு செலுத்தும்" என்று Agreement'ல் கூறப்பட்டுள்ளன. ஆனால் வீட்டுக்காரர் அப்படிச் செய்யவில்லை. ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள நபரின் கணக்கின் படி, தண்ணீர் வரியை வசூளித்தார்.

அவ்வாறு, நாங்கள் மாதம் நூறு ரூபாய்க்கு மேல் வரியை அதிகமாக கட்டியிருக்கிறோம். அதனை கணக்கிடும் போது, நாங்கள் பெயின்ட் அடிக்க காசு கொடுக்க மாட்டோம் என்றோம். அதனையும் அவர்கள் மறுத்துவிட்டனர். "Agreement'ல் எல்லாத்தையும் போட முடியாது." என்றனர். பஞ்சாயத்து பன்னவந்த பிரோக்கரிடம் நாங்கள் பணத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்று வாதாடினர்.

பிறகு சண்டை உச்சக்கட்டத்திற்கு போனது. இரண்டாயிரம் ரூபாய் கொடுத்த பின் ஒற்றுக்கொண்டனர். பிரோக்கரின் முன்னிலையில் வீட்டை காலி செய்தோம். இவ்வாறு, பணத்தைெ அநியாயமாக எங்களிடமிருந்து வாங்கிவிட்டனர். நாங்களும் வேறுவழியின்றி கொடுத்துவிட்டோம்.

இதேபோல், பெங்களூரில் நிறையபேர்க்கு இந்த சம்பவம் நடந்திருக்கு. இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,வீட்டுக்காரரின் மனைவி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர்கள் பேசியதை கேட்க முடியாது. திரும்பத்திரும்ப ஒரேப்பேச்சுதான். இப்படி பட்ட வீட்டுகாரரை என்ன செய்யலாம்?

Comments

நாங்க ஒரு

நாங்க ஒரு எட்டு வருஷம் முன்னால பெங்களுர் முருகேஷ் பாளையாவில இருந்தோம். வீடு காலி பண்ணிட்டு வீட்டுகாரர் இடமிருந்து அட்வான்ஸ் திருப்பி வாங்க 2 வருஷம் ஆச்சு. இத்தனைக்கும் அவர் ஒரு பேங்க் மானேஜர். வசதியான குடும்பம்தான். ஆனால் பணம் திருப்பி கொடுக்கவே அவருக்கு மனசில்லை. ஒவ்வொரு தடவை திருப்பி கேட்க அவர் வீட்டுக்கு போனாலும் வெவ்வேறு காரணம் சொல்லுவார்.

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...