பெங்களூர் - போக்குவரத்து நெரிசல்

பெங்களூர் என்றாலே நமக்கு ஒரு காலத்தில் தோட்டம் மற்றும் குளூரான ஊர் என்று நம் மனதுக்கு தோன்றும். கடந்த சில ஆண்டுகளில், பெங்களூர் என்றாலே தகவல் தொழில் நுட்ப நகரம் என்று மாறிவிட்டது. சிறிது காலமாக, பெங்களூர் என்றாலே அதிகம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரமாக உருவெடுத்துள்ளது.

எம்.ஜி. சாலை, மெஜஸ்டிக்( கெம்பகெளடா வட்டம் ), கோரமங்களா, சில்க் போர்டு, ஒசூர் சாலை, ஜயநகர் போன்ற இடங்களில் அளவிற்கு மிகுந்த சாலை நெரிசலாகிறது. நான் எனது ஜெ.பி.நகர் வீட்டிலிருந்து ஏர்போர்ட் சாலையில் உள்ள அலுவலகத்திற்கு காலையில் செல்வதற்கு சராசரியாக 1 1/2 மணி நேரமாகும். பயனம் தூரம் 14 கி.மி.

சாலை நெரிசலுக்கு காரணம் என்னவென்றால்
1. நகரத்தில் அதிகம் (ஐ.டி)மக்கள் தொகை
2. அதிகம் கார்கள், இரு சக்கர வாகணங்கள்
3. சாலை போக்குவரத்து காவலரின் கவனக்குறைவு
4. சரியான திட்டம் தீட்டி கட்டப்படாத பாலங்கள்
5. நல்ல சாலை கிடையாது (சாலைகள் குண்டும் குழியுமாக இருத்தல்)

சிறிய கூகிள் வீடியோ

எனது அனுபவம்
நான் நேற்று சென்னைக்கு பொறப்பட்டேன். 8.15ந்துகு பஸ் கிடைத்தது. எனது ரயில் 9.30க்கு பொறப்பட்டுவிடும். சராசரியாக 30 நிமிடங்கள் தான் ஆகும் எனக்கு மெஜஸ்டிக்கு பேருந்தில் செல்வதற்க்கு. ஆனால் 9 மணி யாகியும் நான் மெஜஸ்டிக்கு செல்லமுடியவில்லை.எனது மாமா, கைபேசியில், உடனே ஆட்டோ பிடித்து பெங்களூர் கண்டொன்மண்ட் செல்ல ஐடியா கூறினார். பதறிப்போய், மைசூர் வங்கியருகில் இறங்கி வேகமாக நடந்தேன். ஒரு ஆட்டோ கிடைத்தது. 9.20க்கு ரயில் நிலைய வாசலில் இறங்கினேன். 20 ரூபாய் கொடுத்தேன்.

ஓடினேன் வேகமாக. என்னுடன் எனது மடிமேல் மற்றும் ஒரு பெரிய பெட்டி இருந்தது. எப்படியோ 9.25 ரயிலில் ஏறிவிட்டேன். பின்னர தாகத்தை தவிர்க்க தண்ணீரும், லேஸையும் வாங்கி 9.29க்கு ஏறிட்னேன்.

சிறிது நேரத்தில் ரயில் பொறப்பட்டது. எப்போவாவது நான் சீக்கிரம் வந்தால் ரயில் தாமதமாக கிலம்பும். ஆனால் எனது போறாது கால்ம், உடனே பொறப்பட்டு விட்டது. பின்னர் லேஸ் அருந்திவிட்டு, அங்கு விலையாடிக் கொண்டிருந்த சிறுவுள்ளங்களை பார்த்து மகிழ்ந்தேன். பின்னர் உறங்கினேன். இன்று காலை எவ்வாறு வீடு வந்து சேர்ந்தேன். சிறிது நேரம் கணிணி உபயோகித்து, பின்னர் உறங்கினேன்.

Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...