
நான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரிலிருந்து 13ஆம் தேதி அன்று சென்னைக்கு பிறப்பட்டேன். எந்த வித முன் பதிவும் செய்யவில்லை. நான் சரியாக மதியம் 1.30 மணியளவில் பயணத்தை தொடர்ந்தேன்.
பெங்களூர் கெம்பகவுடா பஸ் நிலையத்திற்கு 3 மணிக்கு சென்றேன். சென்னைக்கு போவதற்க்காக காத்திருந்தேன். காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை. பசி தாங்க முடியலைன்னு இரண்டு முட்டை புப் சாப்பிட்டேன்.
வேலூர் போய் சென்னை போய்விடலாம் என்று என்னினேன். ஆனால் வேலூர் பஸ்ஸில் எல்லாம் அதிகமான கூட்டம். நிற்கத்தான் இடமிருந்தது. நேரம் ஆக ஆக அதுக்கும் இடமில்லை. பின்னர் சென்னை பஸ் ஒன்று வந்தது. விரைவாக சென்று ஏறிவிட்டேன். பின்னர் அது பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தான் என்று தெரியவந்தது. அப்பொழுது நேரம் 4.30.
கை, கால் வலியேடுக்க ஆரம்பித்தது. கையில் லேப்டாப் மற்றும் அழுக்கு துணி மூட்டை. இங்கேயும் அங்கேயும் நடந்து, சென்னை போவதற்காக பஸ்களை தேடிக்கொண்டிருந்தேன். ஒரு பஸ் வந்தது. அது கோலார் மற்றும் சித்தூர் வழியாக சென்னை செல்லும் என்று நடத்துனர் சொன்னார். டிக்கட் விலை ரூ.250. கொடுத்த டிக்கடோ ரூ.150 மட்டும் தான். என்ன பன்றது இப்படித்தான் போயாகவேண்டும் என்று என்னினேன். இதற்கிடையில் ஒரு சிறுவன் என்னை வந்து கேட்டான்.
சிறுவன்: சார், சென்னை! சென்னை!
நான்: எவ்வுளவு?
சிறுவன்: 750 ரூ சார். ஒரு பெரிய கம்பேணியின் வண்டியாகும். அது 8.30 கிளம்பி, 4.30 சென்னை செல்லும் சார்
நான்: வேண்டாம் விடுப்பா!
பின்னர் நான் தமிழ்நாடு பேருந்தில் உட்கார்ந்துருக்கும் போது அச்சிறுவனைப்பார்த்தேன். அவனும் என்னை பார்த்தான். நான் என் மனதில் "அப்பாடா! 500 ரூ சேமித்தேன்" என்று நினைத்து அம்ர்ந்திருந்தேன்.
ஒரு வியாபாரி, லெமன் மற்றும் சாத்துகொடி சாறு பிழியும் சிறு இயந்திரத்தின் செய்முறையை காட்டினான். அது நன்றாக இருந்தது. அதனை ரூ.20 கொடுத்து வாங்கினேன். பின்னர் 6.30 மணியளவில் பஸ் கிளம்பியது.
வழக்கம் போல் பெங்களூர் சாலை நெரிசளில் சிக்கி முக்கி சென்னை நோக்கி சென்றது.
Comments
Post new comment