பெங்களூர் - சென்னை பயணம் - பாகம் 2

சென்னை செல்லும் வழியில் சித்தூரில் உள்ள உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டன. அங்கு பசியார உணவை உண்டேன். ஒரு மசாலா தோசை மற்றும் சப்பாட்டி. 27 ரூபாய் ஆனது. மசாலா தோசை மட்டும் 17 ரூபாயாம். வாயடைத்து போனேன். பின்னர் ஒரு இளநீர் அருந்தினேன். பின்னர் கேட்பரீஸ் பைட்ஸ் மற்றும் டைகர் பிஸ்கேட் ஆகியவை வாங்கி பேருந்தில் ஏறினேன்.

இரவு 1 மணிக்கு சென்னை சென்றேன். பேருந்து போரூர் தாண்டியுள்ள சென்னை வணிக வளாகத்தில் அருகே நின்றது. பேருந்து ஓடாது என்று நடத்துனர் கூறிவிட்டார். பின்னர் அதிலிருந்து இறங்கன உடனே, 4.30 மணிக்கு பெங்களூரில் பிறப்பட்ட பேருந்து ஒன்று வந்தது. அதில் ஏறி, கிண்டி வந்து சேர்ந்தேன். அங்கே ஆட்டோ நண்பர் ஒருவர் 75 ரூபாய் கொடுத்தால் நான் உங்களை அடையாரில் விடுரேன் சார் என்றார். நான் 30 ரூபாய்க்கு கேட்டேன். 40 வரை கேட்டால் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.

இதெல்லாம் சரி வறாதுனு நடக்க ஆரம்பித்தேன். கிண்டி கத்திப்பெர ஜன்க்ஷனிலிருந்து ராஜ் பவன் வரை நடந்தேன். நடக்கையில் ஒரு கேப் வந்தது. அதிலிருந்த டிரைவர் 150ரூபாய் கொடுத்தால் நான் உங்களை அடையாரில் விடுரேன் சார் என்றார். ஷாக் அடிச்ச மாதிரி ஆனது. வேண்டாம் என்று சொல்லி நடந்தேன்.

ராஜ் பவன் சென்ற பிறகு,ஒரு நண்பர் மத்திய கைலாஸ் கோயில் வரை லிப்ட் கொடுத்தார். அவருக்கு எனது நன்றி. பின்னர், அங்கிருந்து நடக்கையில், எனது கல்லூரியில் படித்த நண்பன் வந்தான். அவன் என்னை வீட்டருகில் இறக்கி விட்டான். அவன் ஒரு கால் சென்டரில் வேலை பார்க்கிறான் என்று சொன்னான். பின்னர் ஒரு சோகமான விஷயத்தை சொன்னான். அதாவது அவனுக்கு கல்யாணம் ஆகி பின்னர் விவாகரத்து ஆகிவிட்டது என்று. பின்னர் அவன் கிளம்பி வட்டான், நான் வீட்டிற்கு சென்றேன்.

பெங்களூர் சென்னை பயணம் பற்றிய பதிவில் என்ன இருக்கிறது என்று என்னலாம். நீங்கள் அதில் கிடக்கும் விஷயத்தை யோசித்து பார்க்க வேண்டும்.

கெட்ட விஷயங்கள்:
1. பண்டிகைகளின் போது பேருந்துகள் அதிகமாக இயங்கவில்லை.
2. அதிகமான கூட்டம், அதனால் நெரிசல் ஏற்படுகின்றன
3. தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அநியாயமான பேருந்து கட்டணம்
4. மீட்டரில்லா சென்னை ஆட்டோ கட்டணம்

நல்ல விஷயங்கள்:
1. லிப்ட் கொடுத்த நபர் மற்றும் எனது நண்பன்

Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...