மென்பொருள் நிருவனத்தின் மனித வளமேம்பாட்டுத் துறையினரின் கீழ்த்தனமான செயல்

அச்சுக்கருவியை தயாரிக்கும் ஒரு பெரிய கம்பெனியில், ராமு(சித்தரிக்கப்ட்டவை) என்ற ஒருவர் நேர்முகத்தேர்வுக்காக சென்றிருந்தார். அந்த கம்பென்யில் மென்பொருள் பிரிவும் உள்ளது. அதற்க்காகத்தான் ராமு சென்றிருந்தார். நேர்முகத்தேர்வு எல்லாம் நடந்தது. எல்லாம் முடிந்தது. ராமு, தான் தேர்ச்சிப்பெறுவார் என்று மிகவும் நம்பிக்கையாக இருந்தார்.

அச்சுக்கம்பெனியின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி நேர்முகத்தேர்வின் முடிவை ராமுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பதாக கூறினார். ராமுவும் நம்பிக்கையோடு காற்றிருந்தார். அன்று எதுவும் வரவில்லை. ஆனால் ராமு தேர்ச்சிப்பெறுவார் என்று தெரிந்தது. அச்சுக்கம்பெனியின் அதிகாரி, ராமுவிற்க்கு வேலை வழங்குவதற்கான சான்றிதழையும் அனுப்புவதாக கூறினாராம். ராமுவிடம் இதனை உறுதிசெய்ய எந்த ஒரு சாட்சியும் இல்லை.

மறுநாள் தான் பிரச்சனை ஆயிற்று. ராமு தற்பொழுது வேலை செய்யும் கம்பெனியின் மனித வளமேம்பாட்டு அதிகாரி, முன்னர் அச்சுக்கம்பெனியில் வேலை பார்த்தவர். அச்சுக்கம்பெனியில், வேலைக்காக ராமு தேர்ச்சிப்பெற்றார் என்று, ராமுவின் கம்பெனியின் மனித வளமேம்பாட்டு அதிகாரிக்கு தெரிய வந்தது . எப்படி என்றால், அச்சுக்கம்பெனியில் ஒருவர், ராமு வேலை செய்யும் கம்பெனியின் மனித வளமேம்பாட்டு அதிகாரியிடம் கூறிவிட்டார்.

ஒவ்வொரு கம்பெனியிலும் நேர்முகத்தேர்வுக்காக வருபவரைப்பற்றிய எந்த ஒரு செய்தியும் ரகசியமாக பாதுகாக்கப்படும். ஆனால், அச்சுக்கம்பெனியின் மனித வளமேம்பாட்டு துறையில் வேலை செய்யும் ஒருவர் அதனை வெளியிட்டுவிட்டார். இதனால் ராமுவின் கம்பெனியில் அவருக்குப் பிரச்சனை ஏற்ப்பட்டது.

பிரச்சனை எவ்வாறாயின், ராமு தனது தற்போதைய கம்பெனியில் உள்ள ஊழியர்களையெல்லாம் கம்பெனியைவிட்டு செல்லுமாரு தூண்டிவிடுகிறாராம் என்ற குற்றச்சாற்று எழுந்தது. ராமுவால் எதையும் தாங்க முடியவில்லை. இதனையும் தாண்டி, ராமுக்கு கொடுக்க இருந்த வேலைக்கானச் சான்றிதழும் கிடைக்கவில்லை. பின்னர் ராமுக்கு எந்த ஒரு வேலையையும் கிடைக்கவில்லை. தற்போதைய கம்பெனியில் ராமு இன்னமும் வேலை பார்க்கின்றார்.

ராமு, அச்சுக்கம்பெனியில் சேருவதாக மிகவும் ஆவலாக இருந்தார். ஏன்? ராமுவிற்க்கு நல்ல சம்பலம்(2 லட்சம் அதிகம்) அச்சுக்கம்பெனி தருவதாக இருந்தது. எப்படியென்றால், ராமு சம்பலத்தை பற்றி நேர்முகத்தேர்வில் பேசும் பொழுது எந்த ஒரு எதிர்ப்பும், மனித வளமேம்பாட்டு அதிகாரியிடமிருந்து இல்லை.

ஒரு பெரிய மென்பொருள் நிருவனத்தின் மனித வளமேம்பாட்டுத் துறையினரின் கீழ்த்தனமானச் செயலை என்ன சொல்வது....?

Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...