
கடந்த வெள்ளியன்று நான் சென்னைக்கு செல்ல யோசித்தேன். கையில் 150 ரூபாய் மற்றும் சில சில்லரை தான் இருந்தது. இதனை மட்டும் வைத்துக்கொண்டு சென்னைக்கு செல்ல ஆசைப்பட்டேன். போய் தான் பார்க்கலாமே என்று என்னினேன். இருந்தாலும் மனதில் ஒருவித பயம் இருந்தது. ஆனால் அந்த அனுபவத்தை அனுபவிக்க ஆசைப்பட்டேன்.
மாரத்தல்லியில் உள்ள எனது வீட்டிற்கு 9.50 மணியளவில் சென்றென். அது வரை அலுவலகத்தில் வேலை இருந்தது. உடனே ரூமில் உள்ள சீனியை அனுகி வண்டியின் சாவியை கொடுத்து பின்பு பயணத்தை தொடங்கினேன்.
பசித்ததால் அருகேயிருந்த சப்பாத்தி கடையில் நான்கு சப்பாத்தியை பார்செல் செய்ய சொல்லி எடுத்துச்சென்றேன். நேரம் 10.15 வேற ஆகிவிட்டது. மாரத்தல்லி பாலம் அருகே சென்று பேருந்த்துக்காக காத்துக்கிடந்தேன். ஒரு டாடா சுமொ வந்தது. அதில் பயணத்தை தொடங்கினென். வழியில் சென்று கொண்டிருக்கும் பொழுது, போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
நான் சென்ற சுமொ அருகில் இன்னொரு சுமொ இருந்தது. அந்த ஓட்டுனர் உடனே வேகமாக வண்டியை திருப்பி எதிரில் வரும் வாகணங்களில் சாலைக்கு திருப்பிவிட்டான். முன் இருந்த சக்கரம் அந்த சாலையிலும், பின் இருந்த சக்கரம் இந்த பக்கமும் இருந்தது. மிகவும் கடினமாக முயற்சித்து வண்டியை ஏற்றி பின்பு எடுத்துச்சென்றான். அவன் மட்டும் செல்லாமலிருந்தால், நிச்சயமாக விபத்து ஏற்பட்டிருக்கும். எந்த ஜன்மத்தி செய்த புன்னியமோ தெரியல, பொழச்சிக்கினான். இப்படி ஒரு சம்பவம் சுமோவில் செல்லும் பொழுது. 11 மணியளவில் மடிவாள சில்க் போர்டுக்கு சென்றேன்.
பசி வேற எடுத்தது. பஸ்க்காக காத்துகிடந்தேன். இன்னொரு சுமோ வந்தது. ஒசூர் போகும் என்று ஒட்டுநனர் சொன்னதை நம்பி ஏறினேன். பின்னர் சுமோவில் இருந்த படியே சப்பாத்தியை மெதுவாக் சாப்பிட ஆரம்பித்தேன். தண்ணீர் எதுவுமே இல்லை. எங்கடா தொண்டை அடைத்த்க்கொள்ள போகுதோ என்னியபடிய அஞ்சி சப்பாத்தியை உட்கொண்டேன்.
எலக்டாரானிக் சிட்டி செல்வதற்கு முன் உள்ள ஒரு இடத்தில் என்னை அந்த சுமோ ஓட்டுனர் இறக்கிவிட்டான். "ஒசூர் எல்லாம் போகாது சார்."....
பின்னர் ஒசூர் செல்லும் எதாவது பேருந்து வருமா என்று என்னி காத்திக்கொண்டிருந்தேன். எதுவும் வரவில்லை. நான் எனது முயற்சியின் பலனாக உடனே எனக்கு ஒரு லிப்ட் கிடைத்தது. அவர் பொம்மசந்திரா சென்றார். என்னை அங்கே இறக்கிவிட்டார். அங்கு ஒரு சிலர் தான் இருந்ததனர். இரவு 11.30 ஆயிற்று. எந்த பேருந்துகளும் நிறுத்தவில்லை. பயந்து போய்விட்டேன். இருந்தாலும் மனதில் எதோ கொஞ்சம் தைரியம் தான். எப்படியாவது போய்விடலாமென்று.
பின்னர் இன்னொருவர் லிப்டுக் கொடுத்தார். அவர் சந்தாபுராவில் இறக்கிவிட்டார். அந்த வாகணம் TVS 50. அவருடன் செல்லுபொழுது உடனே எங்கேயோ வண்டியை திருப்பி விட்டார். ஒரு சிறு வேலை உள்ளது என்று சொல்லி சாலை ஓரத்தில் உள்ள கடையருகிலிருந்து எதோ பொருளை எடுத்து வண்டியில் உள்ள பையில் வைத்து பின்னர் பயணத்தை தொடங்கினார். அந்த சில நிமிடத்தில் நான் பயந்து நடுங்கி போய்விட்டேன். பின்னர் சந்தாபுரா வந்து இறங்கினேன். அவர் சொன்னது "இங்கே எல்ல பஸ்களும் நிற்கும் சார். இங்கிருந்து நீங்கள் ஒசூர் போய்விடாலாம்."
"சரி சார். ரொம்ப நன்றி" என்று சொல்லி விட்டு, பேருந்துக்காக காற்று கொண்டிருந்தேன்.
பின்னர் பேருந்து வந்தது. ஏறினேன். வடிவேலு கமெடி சின்னத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது. அதனை ரசித்தப்படி ஒசூர் நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். ஒசூர் போகும் பேருந்தில் எறியதன் மூலமாக நிம்மதி அடைந்தேன்.ஏன் ஒசூர் போகத்துடித்தேன் என்றால், அங்கு ஐசிஐசிஐ ஏடிஎம் உள்ளது. விளையாட்டு விபரிதமாக ஆகிவிடபோகுது என்று என்னி எதுக்கும் கையில் பணம் இருக்க வேண்டும்; ஒசூர் சென்றால், ஏடிஎமில் பணம் எடுத்துவிடலாம் என்று என்னினேன்.
ஒசூரை நோக்கி சென்று கொண்டிருந்தேன்.
Comments
Post new comment