தமிழ்நாடு அரசுப்பேருந்தும் துடிப்புள்ள நேர்மையான இளைஞனும்

நான் கடந்த ஞாயிறு அன்று பெங்களூருக்கு ஒரு வேலையாக சென்றேன். தமிழ்நாடு அரசுப்பேருந்தில் முன்பதிவு செய்யப்படாத பேருந்தில் இடம் கிடைத்தது. எனது பக்கத்து சீட்டில் ஒரு இளைஞன் அமர்ந்தான். நடத்துனர்(கண்டக்டர்) பயணச்சீட்டு(டிக்கட்) கொடுக்க ஆரம்பித்தார். அந்த இளைஞனிடம் சரக்கு(மைக்ரோவெவ் ஓவன்) ஒன்று இருந்தது. அதற்கு நடத்துனர் ஒரு நபர் டிக்கட் விலையைக்கூறினார்.
அதாவது, ஒரு ஆளுக்கு எவ்வுளவு டிக்கடோ, அதே விலைதான். சென்னையில் இருந்து பெங்களூர் வருவதற்கு 250 ரூபாய் ஆகும். அந்த இளைஞன் 500 ரூபாய்க்கு மேல் கொடுத்தான்(தனக்கும், சரக்குக்கும், நடத்துனருக்கும்). ஆனால் நடத்துனர் கொடுத்தது 350 மதிப்புள்ள டிக்கிட்தான்.
அந்த உரையாடலை கீழே காண்போம்
இளைஞன் : "என்ன சார் இது, 350 மதிப்புள்ள டிக்கட் தான் கொடுத்திருக்கீர்களே! ஆனால் டிக்கட் விலை 500னு சொன்னீங்களே!"
நடத்துனர் : வைப்பா! அவ்வுளவுதான்.
இளைஞன் : என்னங்க அநியாயமா இருக்கு!!! 500னு சொல்லி ஏத்திட்டு இப்போ 350ரூபாய்க்கு மட்டும் தான் டிக்கட் கொடுக்குரீஙக!
நடத்துனர் : கண்ணா, அதேல்லாம் கண்டுக்கிடாத! அப்படிதான். உள்ள டிக்கட்ட வைப்பா!
இளைஞன் : நான் பஸ்ல ஏறும்பொழுதே சொல்ல வேண்டியதுதானே. எனக்கு இவ்வுளவு. பஸ்கு இவ்வுளவு என்று. இந்த மாதிரி இருக்கிறதால தான் இந்தியா இன்னும் முன்னேறாமல் இருக்கு, ச்சச....
நடத்துனர் : கண்ணா! உனக்கு இஷ்டம் இல்லனா இறங்கிடு. நான் வேணாங்கல.
இளைஞன்: என்னிக்கு தான் இந்த லஞ்சம் வாங்குரத நிறுத்தப்போறிங்களோ தெரியல.

ஓட்டுனர் நடுவில் புகுந்து..

ஓட்டுனர்: நாலு செவுத்துகுள்ள நடக்கிறதுலாம் கேட்ட மாட்டீங்க! இங்கதான் எங்ககிட்ட சண்ட போடுவீங்க! ஊர்ல எல்லாம் நடக்கிறதுதானப்பா!
இளைஞன் : ஊர்ல நடக்கிறது! ஊர்ல நடக்கிறது! சொல்லி ஏங்க நீங்க யோகியமா இருக்க மாட்டுரீங்க! கஷ்டப்பட்டு சம்மாதிக்கிறது நாங்க தான் சார். எங்க காசுதான் போகுது. இந்த மாதிரி அநியாயமா போகும் போது எப்படி சார் சும்மா இருக்க முடியும்.
நடத்துனர் : கண்ணா, விடுப்பா!

முனுமுனுத்தபடியே, அந்த இளைஞன் அப்படியே அமர்ந்தான். தான் வைத்திருந்த கைபேசியிலிருந்து பாட்டு கேட்டபடியே தனது ஆதங்கத்தை தனித்துக்கொண்டான்.

என்னடா இவ்வுளவு நடந்திருக்கு. இதெல்லாம் பார்த்துக்கொண்டு ஏண்டா நீ சும்மா இருந்தனு என்ன நீங்க கேட்கலாம். எனது மனமும் கொதித்து போனது. ஆனால் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. ஏனென்றுத் தெரியவில்லை. அது என்னமோ தெரியல. எனக்கு துணிச்சல் இல்லை. கோழையாக இருந்துவிட்டேன். எந்த வம்பு தும்புக்கும் போககூடாதுனு சொல்லி என்னை வளர்த்துவிட்டார்கள்.

எனக்கு பதிலாக நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

Comments

நடத்துனர் வேலைக்கு ஆப்பு வைத்திருப்ப

நான் கண்டிப்பாக, அந்த நடத்துனர் வேலைக்கு ஆப்பு வைத்திருப்ப , வண்டி என், அவரது புகைப்படம், பெயர், முகவரியுடன் எங்கெல்லாம் அனுப்பினால் நடவடிக்கை எடுத்தாக வேண்டுமோ அங்கெல்லாம் ஒரு காப்பி அனுப்ப்ிருப்பேன். இப்படி ஏதாவது நடந்தால் அந்த உரையாடளையும் நமது மொபைல் போணில் பதிவுசெய்து வைத்துக்கொள்ளுங்கள், தேவைப்படலாம். நான் அங்கு இருந்திருந்தால் அதைத்தான் செய்திருப்பேன்.

நானும்

நானும் சும்மா தான் இருந்திருப்பேன்.
என் குணம் அப்படி.
ஆமாம் அந்த இளைஞன் "சங்கரா"?

Nanbane

Naanum ange oru kozhayagathaan kattayam irundhiruppen enbadhai dhairiyamaga inge oppukkozhgiren. Aanaal kozhaigal dhushprayagom seiyyapada vendiyavargal enbadhayum bagirangama theriviththukkolgiren. Naam namadhu veerathai nam petroridamum,sagodhara sagodhariyidamum matrum namadhu nanbargalidamum mattumdhan kaanbippom. Varuththap padavendiya visiyam.

Ippadiku,
Unadhu pudhiya nanban,
Sankar...

கேட்டிருப

கேட்டிருப்பேன்.. அவனுக்குத் துணையிருந்திருப்பேன்.
பழக்கமா போன ஒன்னு! எல்லா ..
நல்ல பேரு கிடைக்குதோ இல்லையோ நாலு பேரு தப்பா பேசிடக் கூடாதுன்னு நாம இருக்கரதுனாலத் தான் இவ்ளோவும்!
நல்லது மட்டும் செஞ்சா பத்தாது! தீயதை ஓட்டணுமே!

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...