வாழ்க்கையில், இன்று தான் ஒரு சிறப்பானச் செயலை செய்தேன்!!!

இரத்த தானம் செய்தேன். எனது வாழ்க்கையில், இன்று தான் நான் முதன் முறையாக இரத்த தானம் செய்தேன். கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்து இரத்த தானம் செய்தேன். அனுபவம் எல்லாம் புதுமையாக இருந்தது.

முதன் முறை என்பதால் சிறிது பயந்தேன். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் பயம் இல்லை என்று ரூம் நண்பர்கள் கூறினார்கள். தானம் கொடுக்கும் முன் நன்றாக சப்பிட்டிருக்க வேண்டும். அது நாலு மணி நேரத்திற்குல் இருக்க வேண்டும்.

முதலில், ஏய்ட்ஸ், பின்னர் இரத்த கொதிப்பு பரிசோதனை செய்வார்கள். பின்னர் இரத்ததை நமது உடலில்லிருந்து எடுப்பார்கள். ஒரு குழாய் வழியாக பிளாஸ்டிக் பைக்குள் இரத்தம் செல்லும். அது முடிந்தவுடன், பஞ்சை வைத்து இரத்ததை நிருத்துவார்கள். பின்னர் ஜூஸ் கொடுப்பார்கள்.

நிங்கள் மிகவும் சோர்வு அடைவீர்கள். ஆதலால் நன்றாக சாப்பிடவேண்டும். மாதுலம், ஆப்பிள் ஜூஸ் அருந்த வேண்டும்.
நான் சற்று சோர்வுடைந்தேன். பின்னர் பல ஜூஸ்களை அருந்தினேன்.

நீங்களும் இரத்த கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். சோர்வுடைவதை தவிர எந்த வித பாதிப்பும் இருக்காது. இதனை தவிர்க்க நன்றாக உணவு உட்கொண்டு செல்லவேண்டும்.

Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...