பெங்களூரைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்

இது மாதிரியான பதிவினை பார்த்திருப்பீர்கள். நானும் கூட்டத்தில ஐக்கியமாகிவிட்டேன். நானும் பெங்களூரை பற்றி சொல்லபோரேன்.
பெங்களூரில் தான் கடந்த 2 ஆண்டுகளாக எதோ காலத்தை தள்ளுகிறேன். இங்க எப்ப பார்த்தாலும் ஒரே போக்குவரத்து நெரிசல் தான். வேலைக்கு (அப்படி ஒன்னிருந்தா) சீக்கிரமா போக முடியாது, சினிமாவுக்கு சீக்கிரமா போக முடியாது , வெள்ளிக்கிழமையன்று இரவு சென்னை ரயிலினை பிடிக்க முடியாது. அப்பப்பா.. எவனும் ஒழுங்காகவே போகமாட்டான்(நானும் கூட:) )

ரொம்ப கவணமாக இல்லையெனில், பேருந்தில் போகும் போது கைபேசியை(செல்போன்) ஆட்டைய போட்டுடுவானுங்க. ஒரு தடவை என் குழாய்(பேண்ட்) பாக்கேட்டில் கையை விட முயன்றான் ஒரு பிக்(சாரி சைடு)பாக்கேட்காரன். நான் பார்த்த உடனே, பேருந்தை விட்டு இறங்கி ஓடிட்டான். ஏன்டா அவன பிடிக்கலேனு நீங்க நினைக்கலாம்? ஏனா அவன் ரொம்ப நல்லவங்க. எப்படினு யோசிக்கிரீங்களா..அவன் என்னுடைய பர்ஸ எடுக்கல... நாங்க உசார்ல... திருடர்கள் இங்கு அதிகமாக இருக்கிறார்கள்.

பேருந்துகளில் எல்லாம் அதிக கட்டணம். சிறிய டிக்கடே 3ரூபாய் தான். ஆனால் சில நடத்துனர்களிடம் 2 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும். அடுத்த நிருத்தத்தில் நமக்காக நிருத்துவார்கள். ஒரு நல்ல விசம் என்னானா, 30 ரூபாய் கொடுத்து டெய்லி பாஸ் வாங்கினால் ஒரு நாள் முழுக்க எத்தனை பேருந்துகளில் வேண்டுமானலும் செல்லலாம். நாங்க சனி, ஞாயறு வந்தால் இதனை வைத்து தான் ஊரை சுத்துவோம்.

எங்கலாம் ஊரை சுத்துவோம்னா, அது லால்பாகு பார்க், பிரிகேடு சாலை, எம்.ஜி. சாலை. இங்கே சென்றால் மனம் நிம்மதி அடையும். வண்ண விலக்குகள், அழகிய பெண்கள், பெரிய பெரிய கடைகள் எல்லாம் இருக்கிறது. ஆனா, நாஙக ஒன்னும் வாங்க மாட்டோம். நாஙக யாரு தெரியும்லெ...

இன்னும் சொல்ற....நாளைக்கு வந்து பாருங்க...

Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...