உலகம்.net      

பெங்களூரைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள் (பாகம் 2)

பெங்களூர் நடைப்பாதை மக்கள் நடப்பதர்க்காக இல்லை. இரு வாகண ஓட்டுபவர்களுக்கான தனி பாதை. (நானும் சில நேரத்தில டயம் ஆகிடுச்சினா, நடைப்பாதைல ஓட்டி போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிவிடுவேன்.) போக்குவரத்துக் காவலர்களை அதிகம் காண இயலாது. நிறைய காவலர்கள் அரசு உழியர்கள் அல்ல. டெம்பரவரியாக(தற்காலிகமாக) ஆட்களை சேர்த்து சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துகிறார்கள்.

சிறப்பான விசயம் என்று சொன்னால், எப்பொழுதுமே வேற்காது. தண்ணீர் தாகம் எடுக்காது. எப்பொழுதுமே குளிராக இருக்கும். ஜூன், ஜூலை மாதத்திலிருந்து மழை பொழியும். எப்பொழுதும் மேக மூட்டத்துடன் வானம் இருக்கும் டிசம்பரிலிருந்து பிப்ரவரி வரை அதிக குளிராக இருக்கும். ஒரு காலத்தில் பெங்களூர் பசுமையாக இருந்தது. வாயைத்திரந்தால், புகையாக வரும்(இது புகையிலையினால் இல்லை. புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு). ஆனால் இப்பொழுது, போக்குவரத்து நெரிசல் அதிகம், சுற்றுச்சூழல் பாதிக்கபட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள் தொகை அதிகமாகிவிட்டது. பெங்களூரில் வசிக்கும் கண்ணட மொழியை சேர்ந்தவர்கள் மிகவும் குறைவே. இந்தியாவில் உள்ள பல மாநில மக்களை கொண்டுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

உலகில் உள்ள முன்னனி தகவல் தொழில்நுட்ப நிருவணங்கள் இங்குள்ளது. குறுகிய காலத்தில் உலகிலுள்ள நகரத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஐ.டி. நிருவணங்கள் தான். மேலும், பெங்களூரை, இந்தியாவின் ”சிலிக்கான் வேலி” என்று கூறுவார்கள். இதுக்கு முன்,
தென் இந்திய இராணுவத்தின் பயிர்யளிக்கும் இடமாக பெங்களூர் திகழ்ந்தது. அந்த புகழ் ஐ.டி நிருவணங்கள் வந்த பிறகு மறைந்தது. எங்கு பார்த்தாலும் இராணுவத்தின் கட்டங்களையும், பயிர்ச்சியளிக்கும் முகாம்களையும் காணலாம். இது தவிற HAL (ஹிந்துஸ்டான் ஏரோனாடிக் லிமிடெட்), ISRO (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்), BEML(பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்) போன்ற நிருவணங்கள் பெங்களூருக்கு பெருமை சேர்க்கின்றன.

Comments

பெங்களூரைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள் (பாகம் 2)

I like your post.

I love your narrating style.

But still I am finding some spelling mistakes. Please avoid it.

Thanks

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

To combat spam, please enter the code in the image.

அமேசானில் வாங்க...