உலகம்.net      

ஜெயம் கொண்டான் - 8/10 - படங்களுடன் முழுமையான திரை விமர்சனம்

என்னவென்று சொல்வேன். படம் படு சூப்பர். எதார்த்தமானப் படம். அண்ணன் தங்கைக்கு இடையே நடக்கும் சண்டை. சொத்து விவகாரத்தால் இந்த அவர்களது சண்டையின் விலைவால், ஒரு ரவுடியிடம் பிரச்சனையாகி விடுகிறது. அந்த ரவுடியிடம் எதிர்த்து சண்டை போடாமல் ஒதுங்கிப்போகும் ஹீரோ. இது ரொம்பவும் எதார்த்தமான கதைதான். ஏனென்றால், ஹீரோ பிரச்சனையை சந்திக்க மாட்டார். சுழந்து சுழந்து சண்டை போடமாட்டார்(கிளைமேக்ஸில் மட்டும் கொஞ்சம் இருக்கு).

அண்ணன் அர்ஜுன்(வினய்), தங்கை பூரணி (லெகா வாசிங்டன்), காதலி கொடைமுளகாய்(பாவனா), அர்ஜுனின் நண்பர்கள் (விவேக் மற்றும் சிலர்). அர்ஜுன் லண்டனில் வேலை பார்த்துக்கொணடு இந்தியாவில் இருக்கும் தனது அப்பாவுக்கு பணம் அனுப்புவார். அப்பா இறந்துவிடுகிறார். ஆகையால், லண்டனிலிருந்து மீண்டும் இந்தியாவுக்கு வருகிறார் நம்ம அர்ஜுன். தான் அனுப்பிய பணத்தினை வைத்து கட்டிட தொழிலை ஆரம்பிக்க ஆசை. அதர்க்காக தி.நகரில் இடமெல்லாம் பார்க்கிறார். ஒரு இடம் அமைய, அதனை வாங்க வங்கியிலிருந்து பணம் எடுக்கச்சென்றால், வங்கியில் வெறும் பதினைந்து ஆயிரத்தி சொச்சம் தான் உள்ளது. அதிர்ச்சியடைந்த அர்ஜுன் அப்பாவின் நண்பர்களிடம் சொத்து பற்றி கேட்கிறார். யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்கின்றனர். ஆனால் ஒருவர் மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால், அவருக்கு மட்டும் தெரிந்த விசயம். அது என்னவென்றால், அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் உள்ளதாகவும், குடும்பத்தில் ஒரு பெண் உள்ளதாகவும் அர்ஜுனுக்கு தெரிய வந்தது. மேலும் அதிர்ச்சியடைந்து விட்டன் அர்ஜுன். தனக்கும் தனது அம்மாவுக்கும் அப்பா திரோகம் செய்து விட்டதாக என்னி கவலையடைந்தார். அனைத்து சொத்துகளும் இரண்டாவது மனைவிடம் உள்ளது என்று தெரியவந்தது. இதர்கிடையில் ஒரு காட்சியில், அர்ஜுன், பூரனிக்கு லிப்ட் கொடுப்பார். பேனாவும் கொடுத்து உதவி புரிவார். அப்பொழுது தான் பூரனியின் கணவு(அமேரிக்கா சென்று MIT யில் படிக்க வேண்டும் என்பது) அவருக்கும் தெரியவரும். இந்த சம்பவத்தில் பூரனி தனது தங்கை என அவருக்கு தெரியாது.


சொத்து பற்றிய உண்மைகள் புலப்பட, தனது சித்தியிடம் சென்று கேட்கிறார். சித்தியிம் ஞாயத்தை உணர்ந்து சொத்துக்காண பத்திரத்தை அர்ஜுனிடம் ஒப்படைக்கிறார். தனது அப்பா தான் கொடுத்த 60-65 லட்சத்தை வைத்து திருமங்கலத்தில் ஒரு வீட்டினை வாங்கியிருந்தார். அதனை விற்று அந்த பணத்தில் கட்டிட தொழிலை ஆரம்பிக்கலாம் என்று அர்ஜுன் திருமங்கலத்திற்கு செல்கிறார். அங்கு தான் கொடைமுளகாய்யை சந்திக்கிறார். இங்கு தான் சந்தானத்தின் காமெடியும் உள்ளது. காமெடிக்கு சென்னையில் விவேக், கிராமத்தில் சந்தானம் என்று வைத்துருக்கிறார்கள். கொடைமுளகாவுக்கும் அர்ஜுக்கும் காதல் பிறக்கிறது. அந்த வீட்டின் ஒரு ஓரத்தில் சிலர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கின்றனர். அந்த ஆக்கிரமித்த நிலத்தை சட்ட ரீதியாக அனுகி நிலத்தை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுகிறார். குணா என்ற தாதாவின் அறிமுகம் இங்கு தான். மதுரை மாவட்டத்தில் அவன் வைத்ததுதான் சட்டம். கட்ட பஞ்சாயத்துக்காரன். அவனையும் காதலிக்கும் ஒரு பெண். அந்த பெண் ஏன் இந்த தாதாவை காதலிக்கிறாள் என்று ஒரு காரணத்தை கூறியுள்ளனர். அதாவது, அந்த தாதாவிடம் எல்லொரும் பயப்படுகிறார்கள். அதுதானம் அவளுக்கு பிடித்த விசயம். இப்படியும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். குணாவின் வீரத்தினையும் அவனது அராஜகத்தினையும் இயக்குனர் நன்றாக காட்டியுள்ளார்.

பிரச்சனை ஆரம்பிக்கிறது. பூரணி திருமங்கலம் வர, நிலத்தையும் வீட்டையும் விற்க முற்படுகிறார். இதற்கு குணாவின் உதவியை நாடுகிறார். வீட்டின் ஒரு ஓரத்தில் ஆக்கிரமித்தவனும் உதவி செய்கிறான். போலி பத்திரத்தினை உருவாக்கி அதனை பதிவாளர் முன்னிலையில் பதிவு செய்ய முற்படுகிறார். அங்கு அர்ஜுன் எவ்வளவு சொல்லியும் அதனை பொருட்படுத்தாமல் கையப்பம் இடுகிறாள். அந்த பத்திரத்தினை அர்ஜுன் கிழிக்க, சண்டை ஆரம்பிக்க, குணா ஒரு பெரிய சுத்தியலைக்கொண்டு அடிக்க வர, அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள கீழே குனிய, சுத்தியலில் இருந்த இரும்பு தனியாக கழன்று காரில் உள்ள குணாவின் காதலியை தாக்கியது. அந்த இடத்திலேயே குணாவின் காதலி உயிரிழந்தார். தனது காதலியின் சாவுக்கு அர்ஜுன் தான் காரணம் என்று என்னு அவரை துரத்துகிறார். அந்த கிராமத்தில் உள்ளவர்களும், காவல் துறை அதிகாரிகளும் அர்ஜுனை உடனடியாக ஊரை விட்டு போகும் படியாக அறிவுரை சொல்கின்றனர். அதன்படி சென்னை வருகிறார். குணா அங்கேயும் பி்ன் தொடர்ந்து வந்து விடுகிறார்.

சென்னையில் அர்ஜுனின் சித்தி இறந்து விடுகின்றனர். பூரணி தனியாக் நிற்கிறாள். தனது சித்தி ஒரு கடிதம் மூலம் எல்லா விவரத்தையும், பூரணி பற்றியும் அர்ஜுனுக்கு தெரிவிக்கிறார். அர்ஜுன் மனம் மாறியது. உடனே வீட்டை காலி செய்து, தனது தங்கையின் வீட்டில் சென்று தங்குகிறார். தனது தங்கையின் ஆசையை நிறைவேற்ற முயர்ச்சி செய்கிறார். வீட்டை விற்க இது சரியான சந்தர்ப்பம் இல்லை என்று உணர்ந்து, தான் வேலை செய்த லண்டன் கம்பெனியில் மீண்டும் வேலை செய்ய ஒப்புக்கொள்கிறார். அதற்கு முன்பணமாக 20 லட்சம் கிடைக்கும். அந்த பணத்தை வைத்து தனது தங்கையின் கனவினை நிறைவேற்ற முடியும். ஆனால் பணத்தை தங்கை வாங்க மாட்டாள். அதனால் சென்னை வந்திருந்த கொடைமுளகாயிடம் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தி பணத்தினை பூரணியிடம் சேர்த்தார். நாடகம் என்னவென்றால், கொடைமுளகாய் தமிழ் நாடு கைப்பந்து விளையாடும் ஒரு கைப்பந்து வீரர். அவரது அணி வென்றதாகவும், அவருக்கு டி.வி.எஸ் ஸ்பான்சர் பன்றதாகவும் சொன்னார். 20 லட்சம் வரை பணம் தருவதாக பூரணியிடம் சொன்னார். பூரணி, இந்த செய்தி உண்மை என்று நம்பி, அதனை தன்னிடம் கொடுத்து உதவுமாறு சொன்னார். கொடைமுளகாயும் ஒப்புக்கொண்டார். அந்த இடத்தில் ஒரு செண்டிமெண்ட் சீன் உள்ளது. தங்கைகள் இருக்கும் அண்ணமார்களுக்கு புரியும்.

ஒரு காட்சியில், குணாவிடம் அர்ஜுன் தனது நண்பனுடன் மாட்டிக்கொள்கிறான். குணாவின் ஆட்கள் நண்பனை தொரத்த, அரிவால், கத்தி குத்திலிருந்து உயிர் தப்பினார். இதற்கு காரணம் அர்ஜுன் தான் என்று சொல்லி உனது நட்பே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். மணமுடைந்த அர்ஜுன் சென்று விட்டர். அங்கே நண்பர்களிடையே நடக்கும் எதார்த்தமான நிகழ்வுகள் காட்டியது நன்று. சில இடங்களில் விவேக் ஜோக்ஸ் பரவாயில்லை. சென்னை வந்ததால் சந்தானம் காணமல் போய்விட்டார்.

கிளைமேக்ஸ்
லண்டன் செல்ல புரப்படுகிறார் அர்ஜுன். சென்னை மீனம்பாக்கத்தில் செல்வதற்கு முன் நண்பர்களை பார்த்து சொல்லிவிட்டு செல்கின்றனர். இங்கே, தன்னை வெளியில் செல் என்று சொன்ன நண்பன் விட்டில் உள்ள் கூட போகாமல் வெளியில் இருந்த படியே சொல்லிவிட்டு சென்றார். சென்னை மீனம்பாக்கத்தில் கொடைமுளகாய் தான் வழியனுப்புகிறாள். அர்ஜுன் நண்பர்கள் அவர்களும் வழியனுப்ப சென்னை மீனம்பாக்கத்தில் கூடுகிறார்கள். பூரணியும் தனது அண்ணனின் பாசத்தை புரிந்து கொண்டு அண்ணனை வழியனுப்ப புரப்படுகிறாள். குணாவும் மற்ற ரவுடிகளும் பூரணியை கடத்திச் சென்று, அர்ஜுனுக்கு கால் செய்கின்றனர். கோபமடைந்த அர்ஜுன் குணாவினை பார்க்க செல்கிறான். தன்னை எடுத்துக்கொண்டு தனது தங்கையை விட்டுவிடு மாறு சொல்கிறான். குணா அர்ஜுனை அடிக்கிறான். அர்ஜுன் அடிவாங்கிக்கொண்டு எதுவும் செய்யாமல் இருந்து விடுகிறான். குணா, தடுக்க வந்த பூரணியை தள்ளி விட்டதால் அவளது நெற்றியில் குருதி வழிந்தது. அதனை பார்த்த அர்ஜுன் கோபமடைந்தான். குணாவை ஒரு அடி உட்டான் பாருங்க... அவ்வுளவு தான். எகிறி போய் விழுந்தான். குணாவிற்கும் அர்ஜுனுக்கும் சண்டை ஆரம்பமாகிறது. குணாவின் கூட்டாளிகள் யாரும் இதில் நுழையவில்லை. ரன் மற்றும் சண்ட கோழி போன்றா படங்களில் இருக்கும் கிளைமேக்ஸ் சண்ட காட்சிப்போல இதுவும் இருக்கும். அர்ஜுன் குணாவை நன்றாக் உதைத்து விடுகிறான். அர்ஜுன் நண்பர்கள் மக்களை திரட்டினர். குணா அர்ஜுனை கொலை செய்ய முயல்கிறான். அர்ஜுன் தன்னிடம் கிடைத்த துப்பாக்கியை சுடும் படியாக வைத்திருந்தான். குணா கொல்லப்பட்டன். குணாவை கொண்றது அர்ஜுன் அல்ல. அங்கு வந்த காவல் துறை அதிகாரி (லிவிங்ஸ்டன்). அர்ஜுனும், பூரணியும், கொடைமுளகாயும் இணைந்தனர்.

பிரச்சனையிலிருந்து ஒதுங்கி போகு ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உண்டு. ஒதுங்கிப் போகின்றவர்கள் கோழைகள் அல்ல. இந்த கருத்தினை உணர்த்திய அர்ஜுன் இறுதியில் ஜெயம் கொண்டான். இயக்குனர் இரா.கண்ணன்னும் தயாரிப்பாலரும் ஜெயம் கொண்டார்கள். படத்தில் பாடல்கள் பரவாயில்லை. திரைக்கதை நன்றாக உள்ளது. வசனமும் எதார்த்தமாக உள்ளது. முற்றிலும் எனக்கு பிடித்திருக்கிறது.

எனது மார்க் 8/10

முன்காட்சி

சில தகவல்கள்
தயாரிப்பாளர்: டி.ஜி. தியாகராஜன், சத்திய ஜோதி பிலிம்ஸ்
நடிகர்கள்: வினய், பாவனா, லேகா வாசிங்டன், விவேக், சந்தானம், நிழல்கள் ரவி, கொச்சின் ஹனீபா
இழை: வித்யாசாகர்
இயக்குனர்: இரா. கண்ணன்

Comments

thangalin vimarsanam

thangalin vimarsanam padipargalai padam parka thoondum vidhamaga ullathu.... kaivasam niraya thozil vaithullergal.... thangalin cinema pani thodarattum....manamaarntha vaazthukal.

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

To combat spam, please enter the code in the image.

அமேசானில் வாங்க...