உலகம்.net      

எப்படி தான் பதிவு எழுதுறீங்களோ!

நானும் எதாச்சும் பன்னி நம்ம தமிழ் வலைபதிவர்களில் பிரபலமாகனும்னு நினைக்கிறன். ஒன்னும் வேலைக்கு ஆக மாட்டேங்கறது. நம்ம வலைப்பதிவர்களில் பிரபலமானவர்கள்(எனக்கு தெரிந்த) இட்லி வடை, லக்கிலுக், பத்ரி எண்ணங்கள், பாஸ்டன் பாலா, , அதிஷா, டோண்டு, வால்பையன் ஆவர்கள். இன்னும் நிறைய பேர் இருக்கின்றார்கள். இவர்களுக்கெல்லாம் எப்படித்தான் பதிவு எழுத தோனுதோ.... ரூம் போட்டு யோசிப்பாங்களோ...

கொஞ்சம் டிப்ஸ் எனக்கு கொடுங்கப்பா... நானும் நிறைய எழுதனும்னு நினைக்கிறன். ஆனால் எனது சோம்பல் என்னை தடுக்குது... அதுவும் இல்லாமல் என்னத்த எழுதனும்னு யோசிச்சி யோசிச்சி சோர்ந்து விடுகிறேன். அப்படியே யோசிச்சாலும் ஒரு பத்தி அல்லது இரண்டு பத்தி மட்டுமே எழுத முடிகிறது இந்த பதிவினைப் போல....

அரசியல் பற்றிய பதிவுகள் நிறைய படிக்கிறேன். ஆனால் அரசியல் பற்றி எழுதலாம் என்று என்னினால் நமக்கு ஒன்றுமே தெரியல. சிம்பில்லா சொல்லனும்னா நமக்கும் அரசியலுக்கும் ஏணி வெச்சாக்கூட எட்டாது. அட கவிதை, கட்டுரை அது மாதிரி எதாச்சும் எழுத ஒன்றும் தோன்றவில்லை. எனக்கு தெரிந்த கணிப்பொறி சம்பந்தமாக எதையாவது எழுத நினைத்தால், நமக்கு தமிழ் கணினி அறிவு பத்தலை.. இப்படியே யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.

உங்களுக்கு தெரிந்த யோசனையை சொல்லிட்டுப்போங்க...சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் நானும் இருப்பேன் என்று நினைக்கிறேன். அங்கே நிறைய விசயங்களை பேசலாம்.. அங்கே பார்க்கலாம்...

Comments

கண்ணுக்கு,

கண்ணுக்கு, சிந்தைக்கு புலப்படுவதை எழுதுங்கள். ஆனால் பதில் தாக்குதலுக்கு தயாராயிருங்கள். எதுவேணா எழுதுங்கள். படிக்க நாங்கள் இருக்கோம்.

நன்றி

பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி.

கணேஷ்,
நமக்கும் நிறைய பார்வேர்டுகள் வருகிறது. என்ன பன்றது....

செந்தழல் ரவி,
பாலச்சந்தர் தாங்க வெச்சிருக்கேன். எங்க பாலா வருதுனு தெரியல...

அதிஷா,
சென்னைல சந்திப்போம்.

லக்கிலுக்,
கலக்கிடுவோம்.

கும்மி

அட யாராவது நல்ல யோசனை சொல்லுவாய்ங்க, அத நம்மளும் எடுத்துக்கலாம்னு பார்த்தா ஒருத்தரும் ஒன்னும் சொல்லமாட்டேன்ங்குராய்ங்களே....

நீங்களாவது பரவாயில்லை.... நாங்க வெறும் forwarded இ-மெயில்ல வச்சி ஓட்டிட்டு இருக்கோம்.... (அசிங்கமாத்தான் இருக்கு... என்ன செய்ய யாவாரம் செஞ்சாகனும்ல)

நண்பா

நண்பா சென்னை பதிவர் சந்திப்புக்கு வாங்க அங்க தனியா டியூசன் எடுத்திருவோம்...

பாலா

பாலா அப்படீன்னு பார்த்தாலே மக்கள் பிச்சிக்கிட்டு ஓடுவாங்கன்னு நினைக்கிறேன்...

ஏன்னா ஐ.எஸ்.ஓ 2000 பாலா என்று ஒரு டாபர் எல்லா பதிவிலும் சென்று கழிந்தது...

அதனால் உங்கள் பெயரை பாலச்சந்தர் என்று நேமாலஜி படி மாற்றவும்

தோன்றியதை

தோன்றியதை எழுதவும். சித்திரம் மட்டுமல்ல எழுத்தும் கைப்பழக்கம் தான்.

கலக்க வாழ்த்துக்கள்!

அன்புடன்
லக்கி

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

To combat spam, please enter the code in the image.

அமேசானில் வாங்க...