
இன்று முதல் நமது நாட்டில் புகைப்பதற்கு தடை. அதாவது, தம் அடிக்கக்கூடாது. அப்படி பொது இடங்களில் அடித்தால், ரூ.200 அபராதம் கட்ட வேண்டியது வரும். இது உணவகங்கள், பார்கள், அலுவலகங்கள் மற்றும் விமான நிலையம் போன்ற பொது இடங்களில் இன்று முதல அமலுக்கு வருகிறது. இதனை அமல் படுத்தியது இந்திய சுகாதாரத் துறை.

தம் அடிப்போர்க்கு இனி சுதந்திரம் இல்லையப்பா. எனக்கு தம் அடிக்கிற பழக்கம் கிடையாது. ஆனால் ஒரு தடவை சிறு வயதில் முயன்று இருக்கிறேன். நாட்காட்டிய்ன் காகிதத்தை வைத்துக்கொண்டு சுருட்டி, வாயில் வைத்து பத்த வைத்தேன். அவ்வுளவு தான், டமால்னு
பத்திகிச்சு...வாயிலேயும் சுட்டுக்கிடேன். அன்றைக்கு முடிவு பன்னதது தான். இன்னும் செம வலுவாக உள்ளேன்.
தம் அடிப்போரிடம் சில கேள்விகள்
1. ஏன் தம் அடிக்கிரீர்கள்?
2. மழை அல்லது குளிர்காலத்தில் தம் அடிப்பது சரி. அது குளிரினை போக்க அடிக்கிரீர்கள். ஆனால் வெயில் காலத்திலும் கூட ஏன் அடிக்கிரீர்கள்?
தம் அடிப்பதால் வரும் கேடுகள்
தம் அடித்தால் எனக்கு தெரிந்தவரை புற்று நோய் வரும். ஈரல் கெட்டுப்போகும். இவையாவும் தெரிந்தவையே. வாயில் கெட்ட வாடை வரும். உதடு கறுப்பாக மாறும். சிகரெட் பிடிக்கும் விரல்களில் சில மாறுதல்கள் ஏற்படும். இன்னொரு விசயம் என்னவென்றால், புகைக்க ஆரம்பித்து விட்டால், அதனை நிறுத்தக்கூடாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உடனே நிருத்தினால் உடலுக்கும் கேடு ஏற்படும்.
தம் அடிப்போரின் பொருளாதாரம் உயரமா?
ஒரு சிகரெடின் விலை ரூ2.50லிருந்து ரூ10 அல்லது ரூ50(உயரிய பிராண்ட்) வரை இருக்கிறது. சராசரியாக ஒருவர் ரூ2.50காசு சிகரெட்டை ஒரு நாளுக்கு 4 அல்லது 5 வரை குடிக்கிறார்கள். கணக்கு போட்டு பார்த்தால், 2.50 x 4 = 10 ரூ வருது. தினமும் 10 ரூபாய் என்றால், ஒரு மாதத்திற்கு ரூ300 ஆகிறது. சில நாட்களில் உயரிய பிராண்ட் பிடித்தல், பார்களுக்கு போனால் இன்னமும் நிறைய சிகரெட் குடித்தல் ஆக மொத்தம் எல்லாத்தையும் கூட்டி கழித்து பார்த்தால் ரூ.500 வரை செலவு ஆகிறது. வருடத்திற்கு ரூ.6000 வரை செலவு செய்கிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள ஆறு கோடிகளில், ஒரு 10 லட்சம் பேர் புகை குடிக்கிறார்கள் என்றால், 10,00,000 x 6,000 = 6,000 000 000. அதாவது 600 கோடிகள் என்று நினைக்கிறேன்(கணக்கு தவறு என்றால் சுட்டிக்காட்டவும்). இதனால் நாடு முன்னேரும் என்று என்னுகிறேன்.

இந்திய சுற்றுச்சூழல்களில் பாதிப்பு ஏற்படுமா?
இந்தியா முழுவதும் இந்த தடையை அந்தந்த மாநில அரசு சரியான முறையில் அமல்படுத்தினால், இந்தியா ஒரு புகையில்லாத நாடாக மாறிவிடும். சுற்றுச்சுழல், மாசு அடைவதிலிருந்த்து ஓரளவுக்கு காப்பாற்றலாம். சிகரெட் செய்வதற்கான காகிதம், பஞ்சு ஆகியவை வேறு நல்ல விசயத்துக்கு பயன்படுத்தலாம். மேலும் அதற்காக வெட்டப்படும் மரங்களை காப்பாற்றலாம்.
இதையும் மீறி தம் அடிக்க என்னினால்...
எனக்கு என்ன வந்துச்சு.. எனக்கு அந்த பழக்கம் இல்லை.ஆகையால் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. ஒரே ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் எனது நண்பர்கள்(புகைப்பவர்கள்) விட்டு விடுவார்கள் என்று நம்புகிறேன். தம் அடிக்கும் பழக்கத்தினை விட்டுவிட மருத்துவரை அனுக்கி ஆலோசனை பெறுங்கள். உங்க வீட்டு பக்கத்தில அண்ணாச்சிக் கடையில் சிகரெட் மிட்டாய் இருக்கும். அதனை வாங்கி ஸ்டைலாக வைத்துக்கொள்ளலாம்.
புகை சம்மந்தமான வாசகங்கள்
சில தொடுப்புகள்
புகைப் பழக்கத்தை எளிதில் விரட்டலாம்
Comments
//மழை
//மழை அல்லது குளிர்காலத்தில் தம் அடிப்பது சரி.//
ohh is it??
Well said.
Well said Bala.
Post new comment