உலகம்.net      

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - ஒரு ரிப்போர்ட்

பெரும் எதிர்ப்பார்புகளோடு சென்றேன். சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலையில் சந்திப்பு நடந்தது. பொட்டீக்கடையார் வருவார் வருவார் என்று சொல்லிகொண்டு ஒரு பக்கம் இருக்கையில், பொது இடங்களில் புகைப்பது சரியா தவறா என்ற வாதத்திலிருந்து தொடங்கியது சென்னை வலைப்பதிவர் சந்திப்பு. பொது இடங்கள் என்றால் அது என்ன. பூங்காவில் புகைக்கலாம் ஆனால் ஓட்டல்கள், நடைபாதைகள், பார்கள் போன்ற இடங்களில் புகைக்க கூடாத என்ற வாதம் அனல் பறக்க நடந்தது. எழுத்தாளர் ஞாநியும் வந்திருந்தார். சில வினாடிகள் கழித்துவிட்டுச் சென்றார். அவர் எதுவும் பேசவில்லை.

ஞாநி சார் எனக்கு முன்னரே தெரியும். இருந்தாலும் நான் பேசவில்லை. நான் இராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனியில் குடியிருந்த போது அவர் எனது கீழ் வீட்டில் குடியிருந்தார். அவரது மகனும் நானும் நண்பர்கள். பிறகு நாங்கள் அடையார் வந்ததால், நட்பு பிரிந்தது... அவரிடம் என்னை அறிமுகபடுத்திக்கொள்ள வில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

பிறகு அறிமுக படலம் நடந்தது. டோண்டு இராகவன் சார் அனைவரது பெயரையும் தனது டைரியில் எழுதி வைத்திருக்கிறார். அவரது பதிவில்
அனைவரது பெயரும் வரும் என எதிர் பார்க்கலாம். எனக்கு தெரிந்த வரையில் வந்திருந்தவர்களின் பட்டியல்
1. லக்கிலுக்
2. அதிஷா
3. யெஸ்.பாலபாரதி
4. டோண்டு இராகவன்
5. சுரேஷ்
6. வினோத்
7. பொட்டிக்கடையார் மற்றும் அவரது நண்பர்
8. முரளிகண்ணன்
9. குமுதம் கார்ட்டூனிஸ்ட்
10. மருத்துவர்
11. மக்கள் சட்டம்

இன்னும் நிறைய நண்பர்கள் வந்திருந்தனர். நான் சந்திப்பில் பங்களிப்பது இதுவே முதல் முறை என்பதால் ஒரு வெட்கம். யாரிடமும் சரியாக பேசவில்லை. சில புகைப்படங்கள் எடுத்தேன் (கேமிரா என்னுடையது இல்லை). சினிமா பற்றி நிறைய கருத்துக்கள் முரளிகண்ணன் அவர்கள் பரிமாறிக்கொண்டார். அவரவர் அவர்களுக்கு தெரிந்த விசயத்தை பகிர்ந்து கொண்டனர்.

சந்திப்பில் குச்சி ஐஸ் அனைவருக்கும் வழங்கப்பட்டது. நண்றாக இருந்தது. எந்த புன்னியவான் இதற்கு ஸ்பான்சர் பன்னாரோ அவருக்கு நன்றி. அப்படியே குழுமங்களாக பிரிந்து, சந்திப்பில் இடம்பெற்ற மக்கள் உறையாடினர். பின்னர், சில குழுமங்கள் ஸ்பெஷல் டீ’யும், நார்மல் டீ’யும் குடிக்க சென்று விட்டனர். சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 2 மணி நேரத்திற்கு பிறகு முடிவுற்றது.

Comments

செம்ம

செம்ம ஸ்பீடுதான் நீங்க.. முதலில் நாளைக்குதான் என்று முடிவுசெய்திருந்தேன். வீடு வருவதற்குள் மூட் மாறி இப்போவே போட்டு விட்டேன். பார்க்கவும். மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அவர் சினிமா நிருபர் அல்ல, முரளிகண்ணன்.

திருத்திவிட்டேன்

தாமிரா,
திருத்திவிட்டேன். நன்றி.
- பாலச்சந்தர் முருகானந்தம்

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

To combat spam, please enter the code in the image.

அமேசானில் வாங்க...