1,47,197 கோடி வருமான வரி வசூல். என்ன அதிசயம்....! ஆனால் உண்மை.

அடேங்கப்பா... நமது இந்தியாவில் என்ன அதிசயம். 2008-2009 வது ஆண்டின் மொத்த வருமான வரி வசூல் கடந்த நிதி ஆண்டை விட 32.54 சதவிதமாக உயர்ந்துள்ளது. மக்கள் அனைவரும் வரியை கட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்று இதன் மூலம் நாம் அறியலாம். வரியினை கட்டும் மக்கள் அவர்களுக்குரிய வசதிகளை இந்திய அரசு செய்து தருகிறதா என்பது கேள்விக்குறி(எனக்குத் தெரிந்தவரை).

சரியான சாலைகள், மருத்துவமனைகள் கிடையாது. சர்க்காரில் இருக்கும் பணத்தை சூரையாடும் சில அரசியல் வாதிகள், வருமையில் வாடும் மக்கள் ... இன்னும் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ பிரச்சனைகள். நான் என்ன செய்ய முடியும்? எனது வேலையை மட்டும் பார்த்துவிட்டு, நான் வாங்கும் வருமானத்துக்கு வரியை கட்டுகிறேன். அதனால் நான் என்ன பயன் அடைகிறேன் என்று எனக்கு விலங்கவில்லை. தமிழ் நாட்டில் எனது இரு சக்கர வாகனத்திற்கு ”வாழ்வு நாள் சாலை வரி(Life Time Road Tax)” எனப்படும் வரியினை கட்டினால் கூட, அண்டை மாநிலத்தில் பயன்படுத்த, சாலை வரி தனியாக கட்டவேண்டும். கேட்டாள், அது தமிழ் நாட்டுக்கு மட்டும் தான். இந்தியாவுக்கே கிடையாது என்கிறார்கள். ஏன் இது இந்தியா முழுவது செல்லாதா? இது தவிற, நான் பயன்படுத்தும் தேசிய நெடுஞ்சாலையையும் இப்பொழுதெல்லாம் கட்டன(Toll Highways) நெடுஞ்சாலைகளாக மாறிவிட்டது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்ல வேண்டும் என்றால், குறைந்தது 150 வரை Toll கட்டனமாக நாம் செலுத்த வேண்டியது இருக்கும். இது என்று கேட்டால், அது இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (National Highways Authority of India) என்னும் நிறுவனத்தின் கீழ் உள்ளது. அவர்கள் சாலைகளை பராமரிப்பதற்காக கட்டம் வசூல் செய்கிறார்கள். அப்படியென்றால், வருமான வரியால் வசூலான பணம் என்னவாயிற்று? வருடா வருடம், வசூலாகும் பணம் எங்கு செல்கிறது? மேலும் சாலைகள் மழை வந்தால் அவ்வுளவு தான். தண்ணீர் சாலைகளில் தேங்கி, சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கும். வாகனங்கள் சரியாக ஓட்ட முடியாது. இது தேசிய நெடுஞ்ச்சலையில் மட்டுமல்ல... உள்ளூர் சாலைகளிலும் கூட...

பணம் எங்கே செலவாகிறது?
நமது நாட்டின் பாதுகாப்பிற்கும், மத்திய அரசு ஊழியர்களுக்கும் செலவிடப்படுகிறது. பாதுகாப்பு என்பதனை நமக்கு தருவது இராணுவம், கப்பற்படை போன்றவையாகும். இந்தியாவின் தலையிலும், தோள்பட்டையிலும் நமது இராணுவ வீரர்கள் நமது நாட்டை காக்கின்றனர். கடல் சூழ்ந்திருக்கும் பகுதிகள் அனைத்தும் கப்பற்படை காக்கின்றனர். மத்திய அரசின் ஆராய்ச்சிகளான ISRO, HAL போன்றவற்றைக்கு நாம் கட்டும் பணம் தான் பயன்படுத்தப்படுகிறது. இரயில்வே துறைகளும் மத்திய அரசின் கீழ் உள்ள துறையாகும். அதனுடைய மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது போன்ற துறைகளிலும் பணம் திரும்ப வருகிறது. உதாரணத்துக்கு, இரயில்வேத் துறை தற்பொழுது நல்ல லாபம் ஈட்டுகிறது. அதனுடைய வளர்ச்சிகளை தானே சரி செய்து கொள்ள முடியும் என்று நான் நினைக்கின்றேன். ISRO போன்ற ஆராய்ச்சியின் விலைவாக நமக்கு செயற்கைக்கோள் உருவாக்கும் திறன், மற்றும் அந்த தொழில் நுட்பத்தை வைத்து சம்பாதிக்கும் திறனும் வளர்ந்து வருகின்றது. இதிலும் பணம் வரும் என்று நம்புகிறேன். எடுத்துக்காட்டாக நமது ஊர்களில் உள்ள தனியார் தொலைக்காட்சிகள் அலைவரிசைகளின் உரிமம் வாங்க அரசுக்கு சந்தா முறையில் பணம் செலுத்துகிறது. இந்த பணமும் அரசிடம் சென்றடைகிறது. இது தவிற மத்திய வங்கிளுக்கும் பணத்தினை தருகிறது. அவர்களும் மக்களுக்கும் பணத்தினை தந்து வட்டி வசூலித்து பணம் திரும்பப் பெருகிறார்கள். கச்சா எண்ணேய், உணவு தானியங்கள், பழங்கள் இறக்குமதி ஆகியவை போன்று இன்னமும் நிறைய இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் பணம் திரும்ப அரசிடம் வந்தடைகிறது. அப்படியென்றால் ஏன் இன்னமும் அடிப்படை வசதிகள் இந்தியாவில் குறைவாக உள்ளது என்பது எனக்குப் புரியவில்லை.

இந்தியாவின் வளர்ச்சி...
9.2 சதவிதமாக எதிர்பார்க்கப்பட்ட GDP வளர்ச்சி இப்பொழுது 7.9 சதவிதமாக உள்ளது. என்னதான் கணக்கு முறையில் நாம் சொன்னாலும், இன்னமும் பஞ்சத்தால் இறக்கும் மக்கள் அதிகம். பணம் ஏற்கனவே இருக்கும் மக்களிடையே தான் இன்னமும் அதிக பணம் செல்கிறது. ஆனால் ஒரு நிலை மாறி யிருக்கிறது எனக்குத் தெரிந்தவரை. அது என்னவென்றால், தகவல் தொழில்நுட்பம் வந்ததற்குப் பிறகு நிறையமாற்றங்கள் வந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். இது மட்டுமே என்று நான் கூறவில்லை. மற்ற துறைகளில் கூட நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். ஆனால் அது போதுமானதாக இல்லை என்று தான் நாம் கருத வேண்டும். கல்விகளுக்கு, அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு நாம் ஒதுக்கும் பணம் இன்னமு அதிகமாக வேண்டும். ஏன்னென்றால், கல்வியால் அறிவு வளரும். அறிவால் ஆற்றல் வளரும். ஆற்றல் வளந்தால் கண்டுபிடிப்புகள் உருவாகும். அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். மக்களும் பொருள் ஈட்டுவர். இந்தியா வளம் பெரும். ஆகையால் நாம் செலுத்தும் வருமான வரிகள் நல்ல முறையில் பயன் படுத்துவார்கள் என நம்புகிறேன்.

பி.கு: தவறான செய்திகள்/கருத்துக்கள் எதேனும் சொல்லியிருந்தால் சுட்டிக்காட்டவும். உங்களுடைய கருத்தினை பின்னூட்டமாக அனுப்புங்கள்.

Comments

நல்ல கருத்துக்கள்

பெரும்பான்மையான தொகை, petrol, electricity வகையராக்களை subsidize செய்வதால் செலவழிகிறது. ஆனா, அது தேவையான செலவுதான்.

ஒரு 100 ரூவாய் செலவு செய்ய வேண்டிய இடத்தில், 15ரூவாய் (குற்றைந்த பட்சம்) லஞ்சமாகவும், திருட்டுத்தனமாகவும் அபேஸ் செய்யப் படுகிறது.

உள்ளூர் சாலை இடுவதில், வைக்கப்படாச் சட்டமாக, ஒவ்வொரு லெவலுக்கும் 3% கமிஷன் வெட்டப் படுகிறதாம்.

சரியா சொன்னீங்க

//ஒரு 100 ரூவாய் செலவு செய்ய வேண்டிய இடத்தில், 15ரூவாய் (குறைந்த பட்சம்) லஞ்சமாகவும், திருட்டுத்தனமாகவும் அபேஸ் செய்யப் படுகிறது.//
இது உண்மை தான்.

//உள்ளூர் சாலை இடுவதில், வைக்கப்படாச் சட்டமாக, ஒவ்வொரு லெவலுக்கும் 3% கமிஷன் வெட்டப் படுகிறதாம்.//
அப்படியா?

Hi Bala you better mind your

Hi Bala

you better mind your spelling. I dont know how many mistakes you have. I started to read. But I couldnt continue to read bcs of the spelling. That is realy botherting me.... I couldnt read further.

Language is important than writing something......

சரிங்க

கெஸ்ட் அவர்களே!,

//you better mind your spelling. I dont know how many mistakes you have. I started to read. But I couldnt continue to read bcs of the spelling. That is realy botherting me.... I couldnt read further.//
எழுத்துப்பிழைகளை நான் சரி பார்க்கிறேன். நான் ஒரு தமிழ் இலக்கணப் புத்தகத்தை வாங்கி பிழையில்லாமல் எழுத முயல்கிறேன். நிச்சயமாக பிழையின்றி எழுதுவேன் அய்யா.

//Language is important than writing something......//
நீங்கள் சொன்னது 100/100 உண்மை. விரைவில் மாற்றிக்கொள்கிறேன்.

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...