
அதிக ஹைப்புடன் வெளிவந்துள்ள வெங்கட் பிரபுவின் படம் ”சரோஜா”. சென்னை 600028 படம் எதிர்பாராத பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றி நியாயமானது தான். ஏன்னென்றால், அது ஒரு வித்தியாசமான படம். எந்த படத்தினையும் காப்பியடிக்கப்படாத படம் அது. சாதாரணமான கதை, கிரிக்கெட், நண்பர்கள், மொக்கை, காதல், தோரகம் போன்வை அமைந்தவை. அதனால் தான் அது மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. ஆனால் அவர் அதை வைத்துக்கொண்டு சரோஜா என்ற ஒரு மொக்கை படத்தை எடுத்திருக்கிறார். இது ஒரு ஆங்கில படத்தின் அட்டை காப்பியாகும். அந்த படத்தின் பெயர் ஜட்ஜ்மெண்ட் நைட்(Judgement Night) ஆகும்.

இரு படத்துக்கும் உள்ள 6 வித்தியாசம் இங்கு காணலாம்
| வித்தியாசம் | ஜட்ஜ்மெண்ட் நைட்(Judgement Night) | சரோஜா (Saroja) |
|---|---|---|
| நண்பர்கள் | Ray Cochran (Jeremy Piven), Mike Peterson (Cuba Gooding Jr.), and brothers Frank (Emilio Estevez) and John Wyatt (Stephen Dorff) | அஜெய் (’மிர்ச்சி’ சிவா), கணேஷ் (பிரெம்ஜி அமரன்), ஜகப்பதி பாபு(SPB சரன்) மற்றும் தம்பி இராம் பாபு(வைபவ்), |
| விளையாட்டுப் போட்டி | Boxing | கிரிக்கெட் |
| ஊர் | Chicago | அந்திரா மாநிலம் |
| வண்டி | Lavish RV | கேரவன் |
| கதைக்கரு | நாலு நண்பர்கள் கொலையை பார்த்து விடுகிறார்கள் | நாலு நண்பர்கள் கடத்தப்பட்ட சரோஜாவை பார்த்து விடுகிறார்கள் |
| வேறு என்ன | அதிரடி மற்றும் திகில் நிறைந்தது | மொக்கை காமெடி மற்றும் திகில் நிறைந்தது. |
கதை சுருக்கம்:
இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ஜெயராம் போன்றோர் நடித்திருக்கின்றனர். ஜெயராம் தான் இந்த படத்தின் வில்லன். பணத்திற்காக தனது நண்பனின்(பிரகாஷ்ராஜ்) பெண்ணை சம்பத் மூலம் கடத்துகிறார். மாஸ்டர் பிளேன் போட்டு 20 கோடி ரூபாய் கேட்கிறார். கிரிக்கெட் பொட்டியைக் காண வரும் நாலு நண்பர்கள் நெடுஞ்சாலையில் நடந்த ஒரு விபத்தின் காரணமாக குறுக்கு வழியாக செல்கின்றனர். அங்கு செல்லும் பொழுது பாதை மாறி எங்கோ ஒரு பழைய பங்களாக்கில் சிக்கிக்கொண்டனர். அங்கு கடத்தி வைக்கப்பட்டிருந்த சரோஜாவை நண்பர்கள் நால்வரும் காக்கின்றனர். இதனை சுற்றி சம்பவங்கள் நடக்கின்றன. கடைசியில் ஜெயராம் தான் வில்லன் என்று தெரிய வருகிறது. வில்லனை அழித்துவிடுகிறார்கள் பிரகாஷ்ராஜும் மற்றும் இந்த நால்வரும். படம் முடிந்தது.
சரோஜா முன்விழி
Judgement Night Trailer
எனக்குத் தெரிந்த வரை, அங்காங்கே சில இடங்களில் நம்ம ஊர் மக்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையை மாற்றியுள்ளார் வெங்கட் பிரபு. பிரெம்ஜியின் “எவ்வளவோ பன்னிட்டோம். இதன் பன்னமாட்டோமா?” என்ற விஜயின் வசனம் சகிக்க வில்லை. அவரது “என்ன கொடுமை சரவணன் இது” என்ற காமெடி வசனத்திற்கு நான் ரசிகன். மேலும் சென்னை 28ல் நடித்தவர்கள் எல்லாம் ஒரு காட்சிகளில் வருவது நேரத்தினை கடத்துவதுபோல் இருக்கு.
படத்தின் பாடல்கள் பரவாயில்லை. நிமிர்ந்து நில்., செக்ஸியான் கோடான கோடி பாடல்கள் நல்லயிருக்கு. மற்றதெல்லாம் ஒ.கே. மொத்ததில் ஒரு வாட்டி பார்க்கலாம். எனது மதிப்பெண் 5/10
Comments
சூர்யா
சூர்யா அண்ணனின் லிஸ்ட் சூப்பர்...
உங்க பதிவும் நல்லா இருக்கு
தமிழ் அட்ட காப்பி லிஸ்ட்..
இது ஒன்று மட்டுமா...
இந்தாருங்க்ள் லிஸ்ட்..
எவ்வளவோ யோசித்தும் "மணிரத்னத்தை யாரும் Beat பண்ண முடியாது...
நாயகன் - காட்பாதர்
நாயகன் - ஒரு பத்து பதினைந்து நிமிட sequence அப்படியே
காட்பாதரில் சுட்டது. காட்பாதரின் மகனை எதிராளிகள் கொன்றுவிடுவார்கள்.
பேரனின் பேப்டிசம் நடக்கும்போது இந்த கும்பல் சென்று பழிவாங்கும். தமிழில் பேப்டிசத்துக்கு பதிலாக திவசம். அவ்வளவுதான். ஆங்கில படத்தில் கதவில் எட்டி பார்ப்பவரின் கண்ணில சுடுவார்கள். தமிழிலும் அதே. கொஞ்சமாவது மாற்ற வேண்டுமென்றுகூட கவலைப்படாமல் சுடுபவர்
அக்னி நட்சத்திரம் படத்தில் மகன்கள் அப்பாவை கட்டிலோடு இடம் மாற்றுவது கூட ஃகாட்பாதரில் இருந்து சுட்டது தான்.
திருடா திருடா - கிளிப்ஹேங்கர்
ரோஜா - ஒருமாதிரியாக ராமாயணத்தை உல்டா செய்தது.
தளபதி - மகாபாரத உல்டா
கன்னத்தில் முத்தமிட்டால் கதை "stuart little" கதையை ஒத்து இருக்கும்.
ஆயத எழுத்து - Amerros perros {நிறைய ஒத்து இருக்கும்}
'குரு' - ஆர்சன் வெல்ஸ் என்னும் இயக்குனரால் எடுக்கப்பட்ட 'சிட்டிசன் கேன்' என்னும் படத்தின் அதே கதைதான்
ரித்விக் கட்டக் இயக்கிய "மேகதாரா" (1962 என்று ஞாபகம்) பாலச்சந்தர் இயக்கிய "அவள் ஒரு தொடர்கதை"யின் கதையும் காட்சியமைப்புகளும் மேற்சொன்ன படத்தை பெருவாரியாக ஒத்திருந்ததது.
கண்ணெதிரே தொன்றினாள்.---- உயிரா? மானமா{ஜெய்சங்கர் & முத்துராமன் } அப்ப்டியே காப்பி..
மே மாதம் - Roman Holiday
கஜினி---- Memento
ஜெஜெ ---- Serendipity
பட்டியல் - Bangkok Dangerous ஓட தமிழ் பதிப்பு
அவ்வை ஷண்முகி - Mrs Doubtfire
தெனாலி - What about bob
வெற்றி விழா - Bourne identity
12B - Sliding Doors
ருத்ரா - பஃபூன் வேஷம் போட்டு கொள்ளையடிக்கும் காட்சி சீன் பை சீன் பில் முர்ரெயின் quick change படத்திலேருந்து சுட்டது
சூரியன் - Point of impact by stephen king
நான் சிகப்பு மனிதன் - Death wish
காதல் கோட்டை - Shop around the corner
தோஸ்த் :சரத் குமார் ரகுவரன் படம். - Double jeapordy
யுவா - Amerros perros
அருணாச்சலம் - Brewster's Millions
மைடியர் மார்த்தாண்டன்- Coming to America
ஆத்மா .- The Miracle
வசூல்ராஜா - Patch Adams
காதல் கொண்டேன் - Klassenfahrt
சதி லீலாவதி - She Devil
மகளிர் மட்டும் - Nine to Five
பச்சைக்கிளி முத்துச்சரம் - Derailed
இன்னும் இருக்க்கு.. டைப்பணண கை வலிக்குது..
சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com
WOW. That's amazing. Bala
WOW. That's amazing. Bala ippa enna solringa.
Gross Injustice
Bala,
This is gross injustice to the movie. By now, probably a lot of people know that it's a copy. For a second, forget that it's a copy and watch the movie. I truly enjoyed it. Probably you'll too. It's not the story that hooked me to the seat. It was the awesome dialogue delivery and the mokkai. It took me back to my college days. The entire crowd came out happy and delighted (at night 1 o' clock). That way it's way ahead of the rest. I love it.
BTW, run a check on all the recent movies you'll find 75% is copied, 24% is inspired and the rest 1% rejected by our audience.
Your own super-star Rajini sir copies from Malayalam, Dr. Vijay from Telugu. And my own Kamal from Hollywood. Miskin from Korean. Deva from anywhere in the world. GV Prakash Kumar, Yuvan, Vijay Antony, ... everyone copies or may be "get inspired". Would you believe music greats Ilayaraja and MSV got inspired too.
It's all in the game dude. Get on with life. This review is biased and more of "it's my opinion why do you care".
vakat is very worst director
intha paya "Venkat Prabhu".. vijay tv... "coffe with anuv"il...
told " world first comedy thriller we only given"....
How you accept? it is totaly based on "judgement night".. even total sequence..
How you accept? Vankat is good director and Saroja is world first "comedy thriller"?
Venkat is very worst compare other directors.. others .. mimimum just copy english film only..
but he copy and telling himself "he is only world first comedy thriller director".
(last 1000 years .. this is best comedy ..)
//என்ன
//என்ன கொடுமை சரவணன் இது//
இது சந்திரமுகியில் பிரபு பேசும் வசனம்... ப்ரேம்ஜி உல்டா” என்ன கொடுமை சார் இது” இவனுங்களுக்கு சொந்தமா ஒரு மண்ணும் யோசிக்கத் தெரி்யாது போல.. :)
இதை போன்ற ஒரு கேவலமான படத்தை நான் சமீபத்தில் பர்த்ததில்லை.. மேலும் விவரங்களுக்கு http://podian.blogspot.com/2008/09/blog-post_28.html :))
dhool
// பிரெம்ஜியின் “எவ்வளவோ பன்னிட்டோம். இதன் பன்னமாட்டோமா?” என்ற விஜயின் வசனம் சகிக்க வில்லை //
அது விஜய் படத்தோட வசனம் என்பதால் பிடிக்கவில்லையா ? நான் அதை மிகவும் ரசித்தேன். ரஜினியையும் விட்டுவைக்கவில்லை. அவருடைய சிவாஜி வசனங்களை போட்டு பிரித்து மேய்ந்திருந்தனர்.
"என்னை கொடுமை சரவணன்" வசனத்துக்கு கொஞ்சமும் சளைக்காத காமெடி வசனம் விஜயோட அழகியதமிழ் மகன் வசனமான "எவ்வளவோ பண்ணி விட்டோமே இதை பண்ண மாட்டோமா ?" என்னும் வசனம்.
அழகியதமிழ் மகன் பார்த்திருந்தா நீங்க இப்படி பேச மாட்டீங்க. டாக்டர் டயலாக் தனி தான் ! :-)
தூள்
//அழகியதமிழ் மகன் பார்த்திருந்தா நீங்க இப்படி பேச மாட்டீங்க. டாக்டர் டயலாக் தனி தான்//
அந்த கொடுமைய ஏன் கேக்குரீங்க... அதனை பார்த்து தொலைத்தேன். அதுவும் எனது குடும்பத்துடன். சென்னை 28ல் பிரெம் சொன்னது புதுமையானதாக இருந்தது. இதிலும் அதே போல் இருந்தது, மொக்கையாக எனக்குத் தெரிந்தது.
- பாலச்சந்தர் முருகானந்தம்
This is the worst comment i
This is the worst comment i ever heard for this good movie. Hope if vijay or ajith would have acted with vadivelu/vivek, i think it would have been appreciated by people.
பரவாயில்லை
ஆனா, வெளிவந்த படங்களுக்கு இது ஓரளவுக்கு பரவாயில்லை என்று தான் நான் கூறுவேன்.
- பாலச்சந்தர் முருகானந்தம்
Post new comment