இந்தியாவுக்கு சந்திராயன் தேவைதானா?

நிலவு எப்படி உருவானது என்பது பற்றி ஆராய்ச்சி செய்ய, சந்திராயன்-I என்னும் விண்கலத்தை இந்திய விண்வெளி அராய்ச்சிக் கழகம் நிலவுக்கு அனுப்ப இருக்கிறது. இது வருகின்ற அக்டோபர் மாதம் 22 - 26 இடை பட்ட நாட்களில் அனுப்பபடும். இதன் பொருட்செலவு 386 கோடிகள் ஆகும். மேலும் இந்த விண்கலத்தால் எந்த ஒரு வர்த்தக ரீதியிலான லாபம் கிடையாது. ஏன் இதனை நாம் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நிலவு பற்றி தெரிந்து நாம் என்ன செய்ய போகிறோம்? அதற்கு பூமி சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் நமது பூமிக்கு புண்ணியமாய் போகும்.

சந்திராயன்-I
என்னை பொருத்த வரை, இந்த 386 கோடிகளை வேறு ஏதாவது வர்த்தக ரீதியிலான ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்திருக்கலாம். அப்படி இல்லையெனில், நாட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திருக்கலாம். சுனாமி வறாமல் தடுப்பது மற்றும் அதன் வரவை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பயன்படுத்திருக்கலாம். அதாவது, நம்மை விட கீழே இருக்கும் நாடுகளுக்கு விண்கலம் ஏவும் வசதி செய்து தரலாம். அவர்களுக்கு நாமே ஒரு விண்கலத்தினை தயாரித்து விற்கலாம். அதாவது தொழில்நுட்ப ரீதியாக நாம் முன்னேற வேண்டும். அமேரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் முன்னேறியது அவர்களின் தொழில் நுட்பத்தினால் தான். ஜப்பான் என்றால் அது எலக்டிரானிக்ஸ் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். அந்த ஆராய்ச்சிகளில் அது எங்கேயோ சென்றுக்கொண்டிருக்கிறது. அது போல் நாமும் நமது ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும்.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் மென்பொருள் ஏற்றுமதி வழியாக இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் நிறைய வருமானம் வருகிறது. ஆனால் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் அண்டை நாடுகளின் மென்பொருளைத்தான் பயன்படுத்தி வருகிறோம். நாமே உருவாக்கும் மென்பொருட்கள் மிக சிறிதளவே! தற்பொழுது தான் கட்டற்ற மென்பொருளின் மோகம் நமது பொறியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அது போதாது. அதிலும் கட்டற்ற மென்பொருளை பயன்பாட்டில் தான் நமது கவனம் உள்ளது. உருவாக்கும் எண்ணமே இல்லை. இலவசமாக கிடைப்பதை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. ஆனால் அதன் வேகம் ஆமை நடப்பது போல இருக்கிறது. நமது மூளைகளை பயன்படுத்தி நாமே நமது தேவைகளுக்கு மென்பொருளை உருவாக்கினால், அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நிறைய வருமானம் ஈட்ட முடியும். இந்த மாதிரியான முன்னேற்றதிற்கு ஆராய்ச்சிகள் மிக முக்கியம். அதற்கு இந்திய அரசு தனது நிதியை ஒதுக்க வேண்டும். எந்த ஒரு ஆராய்ச்சிகளை அரசு மேற்கொண்டால், அதில் வர்த்தக ரீதியான லாபமும், மக்களுக்கு உதவும் நோக்காக இருக்கவேண்டும். என்னடா இவன் ஐ.டி துறையை மட்டும் சார்ந்து பேசுகிறானே என்று பார்க்கிரீர்களா? நான் ஐ.டி துறையில் வேலை செய்வது தான் காரணம்.

ஆராய்ச்சிகள் செய்வதர்க்கு இந்தியர்கள் இருக்கிறார்கள். மருத்துவம், இணையம், விஞ்ஞனம், அறிவியல், சமுகவியல், விவசாயம் போன்ற வற்றில் ஆராய்ச்சிகளை செய்ய இந்தியாவில் படித்த இளைஞர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கும் முன் அதனை நன்கு ஆராய்ந்து அதன் பலன் என்னவென்று கண்டறிந்து அதிகமான நிதியை ஒதுக்க வேண்டும். தேவையில்லாமல் எந்த ஒரு ஆராய்ச்சிக்கும் நிதியை ஒதுக்க கூடாது. அப்பொழுது தான் இந்தியாவின் அறிவு பெரும். வளம் பெரும். வல்லரசாக இருக்க வேண்டாம். இந்தியா நல்ல நாடாக இருக்கட்டும். அதில் வாழும் மக்களை மகிழ்ச்சியாக வைக்கவேண்டும். அது தான் முக்கியம். அது தான் தற்போதைய இந்தியாவுக்கு தேவை.

நான் சந்திராயனுக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திற்கும் எதிரி இல்லை. உண்மையில் ஒவ்வொரு முறை எதாவது விண்கலம் ஏவப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பேன். நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் முன்னேறுகிறது என்று... ஆனால் இப்பொழுது அது இல்லை.

மேலே உள்ள கருத்துக்கள் எனது சொந்த கருத்தாக இருப்பினும், சந்திராயன் - I ஏவுதலுக்கு வேலை புரிந்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் அறிவியல் வல்லுனர்களுக்கும் எனது பாராட்டுகள். சந்திராயன் - I நல்ல படியாக விண்னிற்கு செல்ல எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் என்ன சொல்கிரீர்கள்? இந்தியாவுக்கு சந்திராயன் தேவைதானா?

Comments

Buddy, you should look at

Buddy, you should look at other perpective. We are fighting with pakistan in the border. But many of our politicians fail to understand the bigger threat is china. China is marching ahead of its space programs. Importantly, it has space war in mind. They tried to shoot down a sattelite in space by a missile from ground and they succeeded last year.
It is very important for India to be in the race. Otherwise, the same thing will happen as it happened in nuclear pact with US. India has to succumb to pressure from other countries.
Other notable point is this mission is not just focussed on moon alone. As usual, it is going to carry commercial satellites on the way to moon. As per data, it costs .01% of nasa's cost.

இந்தியாவுக்கு சந்திராயன் தேவைதானா?

முதலில் சந்திராயண் என்பது ஒரு விண்கலம் அல்ல. அது நிலவிற்கு விண்கலத்தை அனுப்பும் திட்டத்தின் பெயர். இத்திட்டத்தின் மூலம் 5 நாடுகளின் கூட்டு முயற்சியில் சுமார் 11 விண்கோள்கள் ஏவப்பட உள்ளன. அதில் ஒன்று நிலவில் ஹீலியம் உண்டா எனக் கண்டறியும் சோதனை. ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டு பூமிக்கு எடுத்து வர முடிந்தால் அநேக எரிபொருள் தேவைகள் நிறைவடையும்.

ஜப்பானும் சீனாவும் சென்ற ஆண்டுதான் நிலவுக்குக் கலங்களை அனுப்பின.

நாட்டின் வருவாயில் இத்திட்டத்திற்கு ஆகும் செலவு 0.1 சதவிகிதத்திற்கும் குறைவுதான்.

ஆம். என்னைப் பொருத்தவரையில், இம்மாதிரி திட்டங்கள் நமது நாட்டிற்குத் தேவைதான்.

பூ

பூ இதிலென்ன இருக்கு? இந்தியா இப்பவும் அடிமைகளை வெளி நாடுகளுக்கு அனுப்புது தானே?

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...