தீபாவளி பண்டிகையையெட்டி, பெங்களூரிலிருந்து சென்னைக்கு இரயிலில் வர, மூன்று மாதம் முன் IRCTC இணையத்தில் ரிசர்வ் செய்திருந்தேன். முன்னரே விரைவாக ரிசர்வ் செய்தால் பொதுவான படுக்கை(berth) கிடைக்கும் என்ற ஆசைதான். இடைபட்ட படுக்கை கிடைத்தது. எனது இருக்கையின் எண்: 32 ஆக இருந்தது. எனக்கு ஓரத்தில் இருக்கும் படுக்கையில்(side berth) காளை நீட்டி படுக்க முடியாது. படுக்கை சிறிதாக இருக்கும். அதில் மண்னை வாரி போட்டுவிட்டது நேற்று. அதாவது, நான் ரிசர்வ் செய்யும் பொழுது அந்த இரயில் பெட்டியில் சைடு இடைப்பட்ட படுக்கை இல்லை. அண்மையில் அதனை இணைத்ததால் தான் பிரச்சனை. என்னவென்றால், சைடு இடைப்பட்ட படுக்கை வந்ததால், இருக்கைகளின் எண்கள் மாறின. எனது இருக்கை எண் 32லிருந்து 36க்கு மாறியது. 36 என்பது சைடு மேலிருக்கும் படுக்கை. சரி கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து படுத்துக்கொள்ளலாம் என்று பார்த்தால், முடியவில்லை. கால் மேல் கால் கூட போட முடியாது. உட்காரவும் முடியாது. இரயிலின் மேல் பகுதி இடிக்கும்.
டி.டி.ஆரை கேட்டேன். எனக்கு எதாவது பொதுவான படுக்கைக்கு மாற்றி கொடுங்கள் என்று. ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவர் என்ன செய்வார் பாவம். எனக்கு இப்படித்தான் பயணம் செய்ய வேண்டும் என்று எழுதியிருந்தது போல...சரி அப்படியே படுத்து கொண்டு, எதாவது பொதுவான படுக்கை கிடைக்காதா என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். மணி இரவு 1 ஆனது. தூக்கம் வரவில்லை. சரியாக படுக்க முடியவில்லை. அப்பொழுது எனது கண்ணில் ஒரு பொதுவான மேல்படுக்கை தென்பட்டது. உடனே அங்கு இடம்பெயர்ந்து படுத்துவிட்டேன். யாராச்சும் வந்தால், எழுப்பினால் திரும்ப மாறிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் யாரும் வரவில்லை. நன்றாக காலை நீட்டிக்கொண்டு தூங்கினேன். சென்னை சென்டரல் வந்தது. வீட்டிற்கு, மாநகர குளிர் சாதன பேருந்தில் வந்து சேர்ந்தேன்.

சரி இந்த பதிவு எதற்காக... என்ன அநியாயம் செய்து விட்டது இந்திய இரயில்வே... என்று நீங்கள் கேட்கலாம். அதாவது எனக்கு ரிசர்வ் செய்த ஒன்றை எனக்கு அறிவிக்காமல் மாற்றிவிட்டனர். இது நானாக இருந்ததால் பரவாயில்லை. இது ஒரு முதியவருக்கு நேர்ந்திருந்தால்.... என்னவாகும். அவர்கள் மிகவும் அவதிப்படுவார்கள். தெற்கு இரயில்வே இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இது அநியாயம் இல்லையா...?
எப்படி பிரச்சனை உருவானது... அதாவது. சென்ற வருடமெல்லாம், சைடு படுக்கைகள் இரண்டு மட்டுமே இருக்கும். பொதுவான படுக்கைகள ஆறு இருக்கும். எந்த அறிவு ஜீவி கொடுத்த யோசனையோ தெரியல, ஒரு சைடு படுக்கையை புதிதாக அறிவித்திருக்கிறார்கள். இது கொஞ்சம் காலமாக நிலுவில் உள்ளது. அனைத்து இரயில் பெட்டியில் இதனை பொருத்திக்கொண்டு வருகிறார்கள். பொதுவான படுக்கைகள் மேல், இடை, கீழ் எனபது போல், சைடு படுக்கைகளும் மேல் இடை, கீழ் என மாற்றப்பட்டது. சில நேரத்தில் சைடு இடை படுக்கையினுள் போவது மிகவும் சிரமமாக இருக்கும். பெரியவர்களுக்கும், என்னை போல் கொழுப்பு நிறைந்த மனிதர்களுக்கும் இது மிகவும் கடினமாக இருக்கும். இதனை மாற்ற வேண்டும். முன்பு போல் மாற்றப்பட வேண்டும். சைடு இடை படுக்கையை நீக்கி, சைடு மேல் படுக்கையை கொஞ்சம் கீழ் இறக்கினால, மக்கள் அவதிப்பட மாட்டார்கள். இன்னொரு பிரச்சனை என்னவென்றால், நெரிசல் அதிகமாகி விட்டது. காற்று நுழைவது கூட கடினமாக இருக்கும்.
ஐயா, இந்திய இரயில்வே அதிகாரிகளே!,
உங்களை கேட்டுக்கொள்வது ஒன்று தான். பணம் அதிகமாக கிடைக்கிறது என்று சைடு இடை படுக்கையை நுழைத்தது சரியன்று. அதனால் நான் அவதிப்பட்டேன். மக்களும் அவதி படுகிறார்கள். மேலும் இருக்கைகள் மாற்றப்பட்டால், பயனர்களுக்கு தெரிவியுங்கள். இரண்டு மூன்று சார்ட்டுகள் ஒட்டி குழப்பத்தை உண்டாக்காதீர்கள். வயது முதிர்ந்த பயனிகளுக்கு எப்பொழுதுமே பொதுவான/சைடு கீழ் படுக்கையை கொடுக்குமாறு வேண்டுகிறேன்.
என்னைப்போல் நடுத்தர மக்கள் இரயில் பயனத்தை விரும்புகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் ஓரளவுக்கும் இருக்கும் குறைந்த கட்டணம் தான். பெங்களூரிலிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்தால், 250 முதல் 350 வரை கட்டணமாக உள்ளது. இது சாதரணப் பேருந்த்துக்கு மட்டும்தான். வோல்வோ போன்ற சொகுசுப் பேருந்தில் வந்தால் 500 முதல் 650 வரை கட்டணமாக உள்ளது. இதில் எல்லாம் படுக்கும் வசதி கிடையாது. ஆனால், இரயிலில் இரண்டாது வகுப்பு கட்டணம் 150 ரூபாய் மட்டுமே ஆகும். அதுவும் படுக்கையுடன் கூடியது. இத்தகைய குறைந்த கட்டணம்(மற்ற போக்குவரத்து கட்டணத்தை ஒப்பிடும்போது) கொடுத்த நீங்கள், ஏன் மக்கள் அவதிப்பட்டு பயணிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்? சற்று சிந்தியுங்கள்.
பதிவர்களே!,
நீங்கள் என்னை போல் அவதிப்பட்டுருந்தால், இது பற்றி உங்களது கருத்துக்களை பின்னூட்டமளியுங்கள். மேலும், இதன் தொடர் பதிவினையையும் எழுதுங்கள். எல்லோரும் குரல் கொடுத்தால் தான் இந்திய இரயில்வேவால் எதாவது செய்ய இயலும். இரயில்வேத்துறை அமைச்சர் லல்லுவுக்கும் கேட்கும். இந்த புகார் மனுவில் கையப்பம் இடுங்கள். மேலும் அதனை நண்பர்களுக்கு அனுப்புங்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
Comments
Need attention from Southern Railway
என்ன கொடுமை சார் இது?
ரயில்வே இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
தொலைதூர பயணிகள் நிலைமை மிகவும் பரிதாபம் தான்
ராஜ்
ஆதரிக்கிரேன்
அன்புடையீர்..
சைடு பெர்த்தில் மிடில் பெர்த்தா?? என்ன கொடுமை இது..
புகார்மனு லின்க் வேலை செய்யவில்லை...தயவுசெய்து சரி செய்து தகவல் தெரிவியுங்கள்
புகார்மனு தொடுப்பு
scssundar,
இது தான் அந்த தொடுப்பு
http://www.petitiononline.com/SN2SMB2/petition.html
பதிவிலும் திருத்தியுள்ளேன்.
தங்கள் ஆதரவுக்கு நன்றி.
HI while booking ur tickets
HI
while booking ur tickets in irctc uncheck the check box which is having the option of auto upgrade of booked tickets.
otherwise you will face the same problem
i always uncheck the auto upgradation
Dear guest,
I always uncheck the auto upgradation. mostly that feature is for upgrading your ticket from one class to another. i.e if you have Second Class sleeper, it might get upgrade to Third AC if there is no ticket in Second class sleeper. this is nothing to do with side middle berth.
thanks for your comment.
Post new comment