உலகம்.net   

ஏன் அஜித் மற்றும் அர்ஜுன் ஈழத்தமிழர்களுக்காக போராட வேண்டும்?

தமிழர்களுக்காக தமிழர்கள் தான் போராட வேண்டும். அதையையும் மீறி ஒருவர் வந்து போராடினால் அது அவரது மனிதாபிமானத்தை காட்டுகிறது. அப்படியென்றால் போராட்டத்திற்கு வராதவர்களுக்கு மனிதாபிமானம் இல்லையென்று அர்த்தம் இல்லை. போராட்டத்திற்கு வராதவர்களை திட்டுவது, வம்பிழுப்பது தேவையில்லாத வேலை. உதாரணத்துக்கு, தமிழ் திரையுலகம் இலங்கையில் நடக்கும் தமிழ் இணப்படுகொலையை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்கு தமிழ் நடிகர், நடிகைகள் பெரும்பாலும் வரவில்லை. அவர்கள் வராமல் போனது ஒரு பெரிய குற்றம், என்று கூறுகின்றனர். இது சரி என்று எனக்கு படவில்லை.

அதாவது, ஒருவர் தானாக எந்த ஒரு போராட்டத்திற்கும் கலந்துகொள்ள வேண்டும். ஒருவரை வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபட செய்வது சரியில்லை. அதைத்தான் செய்ய முயன்றார்களா? போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தமிழ் இண உணர்வால் தாங்களாகவே கலந்துகொண்டவர்கள் என்பது அவர்களது பேச்சிலேயே தெரிந்திருக்கும். உதாரணத்துக்கு சீமான், அமீர் போன்றவர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பேசினர். அவர்களுக்கு எனது பாராட்டுகள். பேச்சுக்காக இல்லை! என்னுள் தமிழ் இண உணர்வை ஊட்டியதர்க்காக! கோடி நன்றி நண்பர்களே!

சரி. பதிவின் தலைப்புக்கு வருவோம். அஜித் மற்றும் அர்ஜுன் ஆகியோர்கள் ஈழத்தமிழ்களுக்காக நடத்திய போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என்ற செய்தி வலையில் பரவலாக காணப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. அப்படியே அது உண்மையாக இருந்தாலும், அதில் என்ன தவறு இருக்கிறது...? அவர்கள் ஏன் தமிழர்களுக்காக போராட வேண்டும்? தமிழர்களுக்காக, தமிழ்ர்கள் தான் போராட வேண்டும். அவர்களை வைத்து தமிழர்கள் எவ்வளவோ சம்பாதித்துவிடுகிறார்கள். பின்பு பிரச்சனை வரும்பொழுது, அந்த பிரச்சனை எல்லாவற்றையும் அவர்களை போல் உள்ள நடிகர்கள், நடிகைகள் மீது சுமத்தி விடுகிறார்கள். இது என்ன நியாயம்? சிறிது காலம் கழித்து அவர்களுடன் கூடி தங்களது வேலையினை தொடர செய்வார்கள். அப்பொழுது இவர்களது தமிழிண உணர்வு எங்கு செல்கிறது என பார்போம்.

இன்னொரு விடயம் என்னவென்றால், வந்த இயக்குனர்கள் எல்லாம் தமிழ் திரைப்படம் இயக்குபவர்கள். அதில் சிலர் தமிழ் அல்லாத நடிகைகளை வைத்து திரைப்படம் இயக்குபவர். தமிழிண உணர்வுகள் கொண்ட அனைத்து இயக்குனர்களுக்கு ஒரு கேள்வி! நிங்கள் எல்லாம், திரைப்படம் இயக்குவதர்க்கு ஏன் தமிழ் நாட்டை சேர்ந்த பெண்களை தேர்வு செய்ய மறுக்கிறீர்கள்? படத்துக்கு மட்டும் பக்கத்து மாநிலத்தில் உள்ள நடிகைகள் தேவை. மும்பை கவர்ச்சி நடிகைகள் தேவை. பின்னர் அவர்கள் மீது குறை கூறுவது... அவர்கள் தமிழச்சிகளா என்று கேள்வி எழுப்புவது? இது என்ன நியாயம்...? உங்களுக்கு தேவைப்படும் பொழுது அவர்களை வைத்து பணத்தினை சம்பாதித்து விடுவீர்கள். பிறகு கழட்டிவிடுவீர்கள். அப்படியென்றால், நீங்கள் திரோகிகளா?

தமிழ் நாட்டில் பிறந்த தமிழ் நடிகர்கள்/நடிகைகள் எங்கு சென்றார்கள்? அதாவது கமலஹாசன், சத்தியராஜ், சினேகா, விஜய், தனுஷ், சிம்பு போன்ற நடிகர்கள்/நடிகைகள் ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள வில்லை? எங்கே சென்றார்கள் இவர்கள்? இதனை யாரும் கேட்க மாட்டார்கள். நானும் கேட்க வில்லை. ஏனென்றால் அது அவர்களது சொந்த விடயம்.

"வந்தோரை வாழவைக்கும் தமிழகம்" என்று கூறுவர். அப்படி, தமிழகத்தை நம்பி வந்தவர்களை இப்படியா அவமானப்படுத்துவது? இழிவுப்படுத்துவது? இதுவும் ஒரு விதத்தில் இணப்பிரச்சனை தானே! தமிழர்கள் அல்லாத பிறமொழி இணத்தவரை இழிவு படுத்துவது தமிழர்களுக்கு வழக்கமாகிவிட்டது. எப்பொழுது பார்த்தாலும், நம்ம ஊர் சேட்டிடம் கடன் வாங்கி அவர்களை போண்டியாக்குவது, ஒருவன் முன்னேறுகிறான் என்றால் அவனை அழிக்க படையெடுத்து வரும் தமிழர்களும் இருக்கிறார்கள்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக நாம் போராட வேண்டும். அதற்காக தமிழர்களை கட்டாயப்படுத்துங்கள். பிறமொழியை சேர்ந்தவர்களை வற்புறுத்தாதீர்கள். இராமேஸ்வரத்தில் போராடிய தமிழ் திரையுலக பிரமுகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களது அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அறிய ஆவல்.

ஒரு வரில சொல்லனும்னா, போராட்டத்திற்கு வருபவர்கள் வரட்டும். வந்தவர்களை வைத்து போராடுங்கள். வராதவர்களை வைத்து திரையுலக அரசியல் செய்யாதீர்கள்.

Comments

நன்றி கெட்டவராய் இருக்க கூடாது

அன்பு சகோதரா, நமக்கு அஜித் பிடிக்கும் என்பதற்க்காக உண்மையை திரித்து எழுத கூடாது. நடிகர் என்பவர் யாராக இருந்தாலும் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மக்கள் பணத்தில் வாழ்பவர்கள்.
இலங்கை தமிழர் பிரச்சனை என்பது அது தமிழகத்தில் வாழும் ஒவோருவனும் பேச வேண்டிய காரியம். இதில் மதமோ, ஜாதியோ. மொழிகளோ வித்தியாசம் இல்லை. வைகோ என்கிறவர் அடிப்படையில் தமிழர் அல்ல. ரஜினிகாந்த் தமிழர் அல்ல. ஆனால் தமிழ் நாட்டு மக்களின் உப்பை தின்றால் குரல் கொடுத்தே ஆகவேண்டும். சாதரணமாக இருந்த உன்னை அல்டிமட் ஸ்டார் ஆகவும், அக்ஸ்ன் கிங் ஆகவும் மாற்றின தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்க தெரிய வேண்டும்.
மரணத்தின் மதிப்பை தெரிந்தவர் எவரும் இப்படி இருக்க மாட்டர்கள்.யாரையும் கட்டாய படுத்தவில்லை. கட்டாயபடுத்தினால் வராமல் இருக்கவும் முடியாது.
இப்படி எனக்கென்ன என்று அஜித் இருந்தால், அஜித்துக்கு ஒன்று என்றால் நமகென்னவென்று தமிழகமும் இருந்துவிடும். புரிந்ததா நண்பரே.
உங்க பணி தொடரட்டும்

Well said Bala. I know Ajith

Well said Bala. I know Ajith and Arjun are there in the title only to create a sensation ;). But it applies to every actor out there. For e.g., Kamal does not like to get involved in politics. He would very well want to skip this agitation. But would someone dare to say he does not have respect to the language and the community? All these resignation, hunger strike and protest march are just political drama. I wish these movie people keep out of politics. Their popularity is bringing them so much votes not that people knew about them and that they will do nothing but good.

Please visit at the

Please visit at the following site to read the news.

http://www.defence.lk/new.asp?fname=20081027_06

??

கயிட்டப்பட்டு உழைக்கிற காசை குடுத்து உந்தப் பரதேசியளின்ட படத்தை பார்த்து பிறகு (தறு) தலை, அக்சன் கிங் ரசிகர்கள் எண்டு சொல்லிக்கொண்டு அவர்களை தங்கள் Role model ஆக நினைத்துக்கொண்டிருக்கும் பல புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு இது நல்ல படிப்பினை..
இப்படி நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அந்த நாய்யகர்களே உங்களைப்பற்றி நான் ஏன் கவலைப்பட வேணும் எண்டு கேட்டால் அவர்கள் மீது கோபம் வருவதிலும் அவர்களின் படங்களை புறக்கணிப்பதிலும் தவறில்லையே?
ஐரோப்பாவில் வணிகம் பாதிக்கப்படப்போகிறது என்ற கவலையில்தான் இந்த மறுப்புக்கள், தெளிவுபடுத்தல்கள் எல்லாம் வந்துகொண்டிருக்கின்றன.
அவர்கள் போராடாவிட்டால் இப்போது ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. ஆனால் அதே போன்று அவர்களின் படங்களும் இனிமேல் ஓடப்போவதில்லை.

//ஏன் அஜித் மற்றும் அர்ஜுன் ஈழத்தமிழர்களுக்காக போராட வேண்டும்?//
இவர்கள் வந்து போராடிவிட்டால் விடிவு வருமென்று நினைக்க நாங்கள் யாரும் மடையர்கள் அல்ல. ஆனால் வராமல் இருப்பதை விட ஏன் நான் வரவேண்டுமென்று கேட்பது அவர்களுக்கு காசை அழும் சாமானியர்களுக்கு சுடத்தானே செய்யும்???

இந்த பிரச்சினை இப்போது சூடாக இருப்பது இலங்கைத்தமிழர் பக்கத்தில், ஆனால் நீங்கள் தமிழக தமிழரை முன்னிலையாக வைத்து எழுதியிருப்பது குழப்புகிறது. அசித், அர்சுன் பிரச்சினை ராமேஸ்வர மாநாட்டில் நடிகர்கள் கலந்துகொள்ளாத பிரச்சினையிலிருந்து வேறுபட்டது என்பது எனது கருத்து..

இது சரியல......

தமிழகத்தில் புது இரத்தம் பாய்சப்பட்டது போன்று கோந்தளிப்பு. இதனால் பயனடைய போவது யார்? நிச்சயமாக ஈழத்தமிழர்கள் இல்லவே இல்லை. இவை எல்லாம் கண்துடைப்பு வேலையும், அரசியல் கபட நாடகங்கழுமேயாகும். திரு.அஜித்தும், திரு.விஜய்யும் வந்து கண்டனம் தெரிவித்தாலோ இல்லை திரு.வைகோ வும் திரு.கலைஞரும் அறிக்கைவிட்டாலோ நமக்கு தமிழீழம் கிடைத்துவிடாது .நாமகாத்தான் பேறவேண்டும்.
நம் வாழ்கையை வைத்து அரசியல் நடத்துபவர்களுக்கு எங்கள் வலி , வேதனை ஏதும் புரியாது. ஈழத்தழிழர்களை பகடைக்காய்களாக்கி ஆடப்படும் இந்த அரசியல் நாடகங்களுக்கான பதில் விரைவில்... வழங்கப்படும்

மதிப்புக்

மதிப்புக்குரிய இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்களுக்கு!

அன்புடையீர்!

தமிழ் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இராமேஸ்வரத்தில் நடாத்திய ஓர் பிரமாண்டமான கூட்டத்திற்கு தாங்கள் தலைமை தாங்கியுள்ளீர்கள். அக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உலகளாவிய தமிழ் மக்களின் வீரமிக்க தலைவன் என பிரகடனப்படுத்தியுள்ளீர்கள. அவரின் வீரச் செயல்கள் அனேகவற்றில் ஒரு சில, ஓர் ஜனாதிபதியையும்;, ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் உருக்குலைந்த நிலையில் சடலமாக்கியமை, இன்னோர் ஜனாதிபதியினுடைய கொலை முயற்சியில் அவரின் ஒரு கண் பார்வையை இழக்கச் செய்தமை, குண்டு வெடிப்புகள், கிளேமோர் குண்டுத்தாக்குதலகள்;, கைக்குண்டுத் தாக்குதல்கள் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பஸ் வணடிகளிலும், ரயில் வண்டிகளிலும் பறித்தமை, கிளேமோர் தாக்குதல் ஒன்றில், நோயாளிகள், பாடசாலை மாணவர்கள் போன்றோர் கிராமத்திலிருந்து பட்டினத்திற்கு சென்ற பஸ் வண்டியில் மட்டும் 65 பேர் கொல்லப்பட்டு; 65 பேர் படுகாயமுற்றமை, ஆயிரக்கணக்கான விதவைகளை, மனைவியை இழந்தவாகளை, அநாதைகளை உருவாக்கியதோடு பலரை அங்கவீனர்களாக்கி கண்பார்வையை இழக்கச் செய்தமை, 22,000 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை தற்கொலை குண்டுதாரிகளாகவும், யுத்த முனைக்கு அனுப்பியும் உயிர்ப்பலி கொடுத்தமை, கர்ப்பிணி பெண்களை இதற்கு பாவித்தமை, பல அறிஞர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு பொறுப்பான உயர் அரச அதிபர்கள், திறமைமிக்க வைத்திய காலாநிதிகள், பொறியிலாளர்கள், சட்ட வல்லுனர்கள், அரசியல்கட்சி தலைவர்கள், பல்வேறு தமிழ் குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோரை பலி கொண்டமை ஆகிய அத்தனைக்கும் முழு பொறுப்பேற்க வேண்டிய ஒரேயொரு நபர் பிரபாகரனே. வீரமிக்க உலகளாவிய தமிழராக தங்களால் கௌரவிக்கப்பட்டவரின் சாதனைகளை மேலும் குறி;ப்பிடின், வடஇலங்கையில் பல தலைமுறையாக ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறித்தெடுத்துவிட்டு வெறும் 500 ரூபா பணத்துடன் வெளியேற்றப்பட்ட மக்கள் 17 ஆண்டுகளின் பின் இன்றும் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் அகதி முகாம்களில் வாடி,வதங்க வைத்ததோடு எமது மாணவர்களின் கல்வியை சீர்குலைத்து வடக்கு கிழக்கு மகாணங்களில் வாழ்ந்த மக்களை ஓட்டாண்டியாக்கி பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்து எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் சிதைத்த இப் பெரு மகனாரை சினிமா உலகம் வீரமிக்க தமிழர் தலைவராக பிரகடனப்படுத்தி உள்ளது.

இயக்குனர் பாரதிராஜாவாகிய தாங்களும், இயக்குனர் சீமான் போன்ற சினிமாத் துறையில் ஈடுபட்டுள்ள அத்தனை பேரும் இப்போதும் பிரபாகரன் அவர்களை வீரம் நிறைந்த தலைவனாக ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தயவு செய்து இலங்கை வாழ் தமிழ் மக்களை விட்டு விடுங்கள். அவர்களுடைய கொடூர செயல்;களை வீரம் செறிந்த செயலாக தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களேயானால் திரு. பிரபாகரனை தமிழ் நாட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். முறைப்படி அவரை கௌரவிப்பின் ஸ்ரீபெரம்புத்தூரில் அமைந்துள்ள கௌரவ ராஜீவ்காந்தி அவர்களின் ஞாபகசின்னத்துக்கு அண்மையில் ஓர் சிலை எழுப்புவீர்களேயானால் அது இன்றைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எவ்வாறு மக்களின் பெரு மதிப்பை பெற்ற மிகச் சிறந்த ஓர் பிரமுகரை வெட்கப்படக் கூடிய வகையில் ஓர் முட்டாள் பெண்மணியின் உதவியோடு மற்றும பலருடன் தன்னையும் ராஜீவ்காந்தி அவர்களையும் சதை பிண்டமாக்கிய இம் மாவீரனின் சாதனையை ஞாபகப்படுத்தும். இலங்கைத் தமிழர்கள்தான் அது கூட விடுதலைப் பெற்றுத் தருவோம் என்று கூறிவந்த விடுதலைப் புலிகளால் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள். உண்மை நிலையை கண்டறிய மறுத்து இஷ்டம்; போல் செயல்படுவீர்களேயானால் விடுதலைப் புலிகளின் கொடூர பிடியில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்களால் என்ன செய்ய முடியும்? ஆகவேதான் தமிழ் நாட்டை நாம் வலிந்து கேட்பது என்னவெனில் இலங்கை தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுத்தர முடியாவிட்டால் அவர்களுக்கு புத்துயிர்; கொடுக்கின்ற முயற்சியல் ஈடுபடாது ஒதுங்கி இருக்குமாறு வேண்டுகிறேன். சிங்கள அரசு தமிழ் மக்களை இன அழிப்பு செய்கிறது என்ற கூற்று வெறும் பொய்யாகும். அதற்கு மாறாக இன்று தமிழ் மக்களை அழிக்கும் பணியில் முற்று முழுதாக ஈடுபட்டுள்ளவர்கள் விடுதலைப் புலிகளே.

யுத்தத்தால் தமிழ் மக்கள் சொல்லொணா கஸ்டங்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் கால் நூற்றாண்டு காலமாக விடுதலைப் புலிகளின் அடக்குமுறை ஆட்சியில் அவர்கள் பட்ட துன்பத்தோடு ஒப்பிடும் போது இப்போது படும் துன்பம் பெரிதல்ல. தமிழ் நாடு விடுதலைப் புலிகளை வற்புறுத்தி பலாத்காரமாக பிடித்திருக்கும் மக்களை விடுவிக்க செய்வதே பெரும் உதவியாக இருக்கும்.

தாங்கள் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்துக்கு விடுத்த கோரிக்கை நியாயமானதல்ல. சினிமாத் துறையில் ஈடுபட்டவர்கள் தற்போதைய முயற்சி வெறும் பயனற்றதென்றும் அதற்குப் பதிலாக நிலைமையை அறிவதற்காக ஒரு குழுவினர் இலங்கைக்கு சென்று உண்மையை அறிற்துவர வேண்டுமென வேண்டுவதே நியாயமானதாகும். திருமதி இந்திரா காந்தியை சீக்கியர்தான் கொலை செய்தவர் என்றபடியால் ஒரு சீக்கியர் முதலமைச்சராக வர முடியாது என்பது விதண்டாவாதமாகும். அதேபோலவே மகாத்மா காந்தியை கொன்றவர் பற்றியும் ராஜீவ் காந்தியை கொலை செய்ததை பற்றியும் ஒப்பிட்டு பேசுவது விதண்டாவாதமாகும்.

ஒரு சிலர் தாம் நன்மை பெறுவதற்காக அல்லது தான் பிரபல்யமாவதற்காக முழு தமிழ் நாட்டுக்கும் களங்கத்தை உருவாக்குவது ஒரு தேச துரோக செயலாகும்.

நன்றி

இப்படிக்கு
தங்கள் அன்புள்ள

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

ஏன் அஜித் மற்றும் அர்ஜுன் ஈழத்தமிழர்களுக்காக போராட வேண்டும்?

நியாயமான வாதம். அஜீத்தும் அர்ஜுனும் உறுமினால் இலங்கையில் பிரச்சினை தீர்ந்து விடும் போலவும் அவர்கள் வராததால் பிரச்சினை இழுப்பது போலவும்.. பொதுவாகவே தமிழ் திரைப்பட உலகினர் ஒரு சர்வாதிகாரத்தையே கைக்கொள்கிறார்கள்! ஒகேனக்கல் ஆகட்டும் இதுவாகட்டும்.. வராதவர்களைக் கேள்வி கேட்பது கருத்து சுதந்திரத்தைக் கேள்வி கேட்பதாகாதா?

இதில் படத்தைப் புறக்கணிப்பு செய்கிறார்களாம். இது நியாயமான வழிமுறைதான், ஆட்சேபிக்க ஏதும் இல்லைதான். ஆனால் இவர்கள் உபயோகிக்கும் எல்லாப்பொருட்களின் தயாரிப்பாளர்களும் ஈழத்துக்கு முழு ஆதரவா? கோபால் பல்போடியிலிருந்து சுடர்மணி ஜட்டி தயாரிப்பாளர்கள் வரை?

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

To combat spam, please enter the code in the image.

அமேசானில் வாங்க...