அனைவரும் ஒளவையார் எழுதிய ஆத்திசூடி அறிவீர். சிறு வயதில் படித்திருப்பீர்கள். தமிழ் விக்கிபீடியாவிலிருந்து...
"ஆத்திசூடி என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி"
அதன் முதல் 13ஐ வைத்து, ஒரு jpg படத்தினை உருவாக்கியுள்ளேன். இதனை படிக்க நீங்கள உங்களது தலையினை வலது புறம் அல்லது இடது புறம் சாய்க்க வேண்டும். ஒவ்வொரு சாய்வுக்கும் மூன்று ஆத்திசூடியில் உள்ளன. முதல் மூன்றை படிக்க இடது புறம் தலையை சாய்த்து ஆரம்பிக்க வேண்டும். பிறகு தலையை வலது புறம் சாய்க்க வேண்டும். இவ்வாறு பதிமூன்றையும் படியுங்கள்.
இதனால் என்ன பயன்?
1. அதிக நேரம் கணினியில் அமர்பவர்கள் ஒரு அசைவும் இல்லாமல் வேலை செய்வர். அதனால் கழுத்து வலி வரும். இதனை தவிர்க்க, ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கு ஆத்திசூடி படியுங்கள்.
2. ஆத்திசூடி படிப்பதனால் ஒன்றும் வலி போய்விடாது. அதனை படிக்க, உங்களது தலை அசையும். அந்த அசைவு, உங்களது கழுத்து வலி ஓரளவுக்கு வராமல் தடுக்கலாம்.
3. ஆத்திசுடி, ஒளவையார் இயற்றிய நீதி நூலாகும். அதனை படிக்கும் பொழுது, சமுதாய நல்லொழுக்க உணர்வை நம் மனிதில் ஏற்படுத்தும். நம்முடைய மனதில் உள்ள வலியும் சிறிது குறையும்.

இதனை எவ்வாறு சேமிப்பது?
வலது கிளிக் செய்து, “Save Image as” என்ற வற்றை அழுத்தினால், படத்தினை உங்களது கணினியில் சேமிக்கலாம்.
பி.கு: நணபர்கள் அனுப்பிய ஆங்கில மின்னஞ்சலில் ஆங்கில வாக்கியத்துடன் வந்தது. இந்த யோசனையை வைத்துக்கொண்டு தமிழில் ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னி, ஆத்திசூடியை வைத்து அதனை செய்துள்ளேன். இது பற்றிய உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக அளியுங்கள்.
Comments
அடடே
நல்ல யோசனையாதான் தெரியுது,
ஆத்திச்சூடி வேற ஔவையார் பாட்டி எழுதியது அவர்களை பகைத்துக்கொள்ளவும் முடியாது.....
அதனால...... 'ஆமாங்க எசமான், சரீங்க எசமான், அப்படியே ஆகட்டும் சாமி'...முயற்ச்சிக்கலாம்.
எப்படியோ கழுத்துக்கு சு(ழு,ளு,லு) க்கு வராமல் இருந்தால் சரி. (எந்த ழு,ளு.லு னு தெரியவில்லை தயவு செய்து சமாளிக்கவும்)
பதிவுக்கு மிக்க நன்றி.
- ஓவியா
நல்ல
நல்ல யோசனை.
இதுக்கெல்லாம் என்ன ரூம் போட்டு யோசிப்பீங்களோ??? ;)
ha ha ஆத்திசூடிய வச்சு காமெடியா..??
நல்லாயிருக்கு ..
வாழ்த்துககள்
சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com
Good
Good Exercise.
வலி
கழுத்தை பல முறை திருப்பியதில், கழுத்து வலி கூடியதுதான் மிச்சம். இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிங்கப்பா?
Post new comment