பாராக் ஒபாமா, அமெரிக்க சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது உலக வரலாற்று செய்தியானது. வில்லியம் என்பவர் ”எஸ் வீ கேன் ” என்ற விழியை உருவாக்கியிருக்கிறார். அதனை கீழே காணலாம். இந்த விழியில் ஒபாமா பேச்சுக்களும், பல இசை கலைஞர்களின் உணர்வும் இடம் பெற்றுள்ளது.
வில்லியத்தின் புதிய விழியாகிய “இட்ஸ நியு டே”(It’s a New Day) ஆப்பிரெ நிகழ்ச்சியில் இடம் பெற்றது. அதன் விழியை கீழே காணலாம்.
ஒபாமா வெற்றியை பலரும் அராய்ந்து வருகின்றனர். சிலர் அவரது வெற்றிக்கு காரணம், அவர் அதிக படியாக இணையத்தை பயண்படுத்தி அதில் உள்ள சமுக வலை தளங்களில் அவரது கருத்துக்களை நேரடியாக மக்களிடம் பகிர்ந்தது தான். அவரது தளம் www.barackobama.com பல லட்சம் பயனர்களை கொண்டது என்பது குறிப்பிடதக்கது. பயனர்கள் ஒன்று கூடி அங்காங்கே குழுமத்தினை உருவாக்கி, கொள்கைகளை பரப்பி, ஒபாமா வெற்றிக்கு வழி வகுத்தனர்.
ஒரு புதிய தளத்தினை ஒபாமா உருவாக்கியுள்ளா. அது change.gov என்பதாகும். தான் விரும்பும் மாற்றத்தினை கொண்டுவர, அதன் செயல் பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த இந்த தளம் உதவும். மேலும் அமெரிக்க அரசு வேலைகளுக்காக விண்ணபிக்கவும் அந்த தளம் பயன்படுகிறது. அமெரிக்க பொருளாதார சீர்செய்வது, ஈராக்கில் போர் நிறுத்தம், அனைவருக்கும் மருத்துவ வசதி, அமெரிக்க பாதுகாப்பு போன்றவை ஒபாமா-பாய்டென் ஆட்சியில் உள்ள முதன்மையான கோரிக்கைகளாகும். மேலும் தளத்தின் வழியாக ஒபாமா அரசு என்னவெல்லாம் செய்யலாம் என்று அமெரிக்கர்கள் யோசனைகள் சொல்லவும் வசதி செய்துதரப்பட்டுள்ளது.
மாற்றம் என்று ஒபாமா சொன்னதை அமெரிக்க மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் நினைவில் வைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். என்ன மாற்றம் செய்வார் என்று நாம் பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஒபாமா என்ன மாற்றம் கொண்டுவருவார் என்று நீங்கள் நினைத்ததை பின்னூட்டமளியுங்கள்.
Comments
Post new comment