நீதி எங்கே? மனிதாபிமானம் எங்கே?

இன்று தான் சட்டக்கல்லூரியில் நடந்த கொடூர செயலை விழி வழியாக பார்த்தேன். மாணவர்களுக்குள் நடந்த இந்த மோதலை தடுக்கக் கூட முடியாத கல்லூரி முதல்வர், கொடூர செயலை கண்டும் ஒன்றும் செய்யாமல் விட்ட காவல் துறையினர். இவர்களிடமா நீதி கிடைக்கப்போகிறது? இவர்களிடமா நியாயம் கிடைக்கப்போகிறது? அய்யகோ! நாடு எங்கே போகிறது? இவர்கள் தான் நாளைய இந்தியாவின் தூண்களா? தலைவர்களா இல்லை தலைவலிகளா!

ஒரு சட்டக்கல்லூரி வளாகத்தில் நடந்த சட்டஒழுங்கை காக்க முடியாத சட்டம் தேவையா? ஒரு மாணவனை வெறித்தனமாக் அடிப்பதை பார்த்த காவல் துறையே! நீங்கள் மனிதர்களா? உங்களுக்கு மனசாட்சி இல்லையா? உங்களுடைய மனிதாபிமானம் எங்கு போனது? எங்கே பார்த்தாலும் சட்ட ஒழுங்கு பற்றி பேசும் நீங்கள், அது உங்கள் கண் முன் கெடும் போது என்ன செய்தீர்கள்? தமிழர்களா நீங்கள்? மனிதர்களா நீங்கள்? இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக போராடும் தமிழர்களே! தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் போராடுங்களேன். கெட்ட தமிழர்களிடமிருந்து நல்ல தமிழர்களை காக்க உதவுங்கள்.

காவல்த்துறைக்கு ஒரு வேண்டுகோள். கலவரத்தில் ஈடுபடுட்ட மாணவர்களை இழத்து போட்டு பெண்டு நிமித்துங்கள். எவன் தவறு செய்திருந்தாலும் அவனை சிறையில் போடுங்கள்.
தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். காயமடைந்த மாணவனுக்கு உரிய (நிவாரணம் இல்லை) நீதி கிடைக்க வேண்டும். இனிமேல் சட்டக்கல்லூரியில் எந்த வித கலவரமும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுவே கடைசி முறையாக இருத்தல் வேண்டும்.

சட்டக்கல்லூரி மாணவர்களே! உங்களுக்கு கோடானு கோடி வேண்டுகோள்!
கல்லூரி பருவத்தில் நன்கு சட்டம் பயின்று, இந்த நாட்டில் சட்டஒழுங்கினை நிலைநிறுத்த வேண்டாம். அதற்கு மாறாக, சக மாணவர்களை துன்புறுத்தாதீர்கள். அவர்களும் உங்களை போன்று மாணவர்கள் தானே. என்ன பிரச்சனை இருந்தாலும், பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். வன்முறை தீர்வாகாது. நீங்களே சட்டத்தை உங்களது கையில் எடுத்தால், மற்றவர்கள் எப்படி சட்டத்தை மதிப்பார்கள்? நீங்களும் மனிதர்கள் தானே? மிருகங்கள் இல்லையே? உங்களுக்கும் மனிதாபிமானம் இருக்கிறதா? நீங்கள் அடித்துப்போட்டீர்களே அவர்கள் யார்? உங்களுடைய சொந்தம். நம்முடைய சொந்தம். நாமெல்லாம் ஒரு சமுகம். தமிழ் சமுகம்.

சினம்தாழ்த்தி உங்களை ஒன்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன். வன்முறை வேண்டாம். இரத்த வெறி வேண்டாம். நீயும் வாழு. மற்றவர்களையும் வாழ விடு.

Comments

என்ன தேசமோ.. இது என்ன தேசமோ..???????

இந்த உருட்டுக் கட்டை அடி, என் மேல் விழுந்தது போல உணர்கிறேன்! இந்த தாக்குதல் நம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்! இந்த தாக்குதல் நாகரீக சமுதாயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். நம் மனசாட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

இந்த நிலமை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

நாம் அனைவரும் வெட்க பட வேண்டிய செயல்..

என்ன தேசமோ... இது என்ன தேசமோ...???????????

நாளைய தலைவர்கள்

இவர்கள் நாளைய தலைவர்கள் அல்ல. நாளைய அரசியல்வாதிகள். இன்று பயிற்சி எடுக்கும் நாளைய அரசியல்வாதிகள். பயிற்சியே இந்நிலையில் இருந்தால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு எப்படி இருக்கும். இது சிறிய முன்னோட்டம். முழுப்படம் இன்னும் வெளிவரவில்லை. பொருத்திருந்து பாருங்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காக போராடுகிறார்களா ? யார் ??

இந்த பதிவில் " இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக போராடும் தமிழர்களே! " இந்த வரியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பெங்களூரில் இருப்பதால் என்னவோ இங்கு தமிழ் நாட்டில் ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சனையை திசைத்திருப்ப எடுக்கப்பட்ட இந்த அரசின் முயற்சிதான் இலங்கை தமிழர் பிரச்சனை என்பதனை நீங்கள் அறியவில்லை என நினைக்கிறேன்... இந்த கூத்தில் போதாதற்கு சினிமா உலகம் வேறு ஒரு நாள் தங்களுடைய கூத்தையும் நடத்தி காண்பித்துவிட்டர்கள்.

ம்ம்ம்ம்.... இப்போ இந்த சட்டக்கல்லூரி பிரச்சனையா..... இனி இலங்கை பிரச்சனை அவ்வளவுதான்.. தொடரும் போட்டு நிறுத்திவிட்டு சட்டக்கல்லூரிப் பிரச்சனையை ஆரம்பித்துவிடுவார்கள்... அடுத்து என்னவோ ??????

வெட்க பட வேண்டிய விஷயம்

நான் மிகவும் வெட்க புடுகிறேன் ஏன் என்றால் நான் இந்த கல்லூரி மாணவி. எப்பொழுது எங்கள் கல்லூரியில் சண்டை நடந்தாலும் இந்த காவலர்கள் நின்று வேடிக்கை பார்பார்கள்.கல்லூரி முதல்வரும் அப்பிடித்தான்.இப்பொழுது அட்டித்துகொல்வர்கள் பிறகு சேர்ந்து விடுவார்கள் என்று முதல்வர் சொல்லி வேடிக்கை பார்த்து தூண் மாறி நிப்பார்.
இப்பிடி பட்ட மாணவர்களோடு நான் படிப்பதை நினைத்தால் மிகவும் வெட்க படுகிறேன்.மனிதாபிமானமா அந்த பேச்சுக்கே இடம் இல்லை எங்கள் கல்லூரி மாணவர்கள் இடையே.காட்டு பசங்க.

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...