உலகம்.net   

நெஞ்சு பொறுக்கு தில்லையே இந்த நிலை கெட்ட மாணவர்களை பார்த்தால்!

நெஞ்சு பொறுக்கு தில்லையே --இந்த
நிலை கெட்ட மாணவர்களை பார்த்தால்,
மேல் சாதி, கீழ் சாதி என்பார் --இதை
மறந்தவர்கள் யாருமில்லை அவனியிலே;

கொஞ்ச நேரமா அடித்தார்கள்? --ஒரு
நிமிடம் வரை வெறியேடு அடித்தார்கள்;
சாதிவெறி பிடித்த மாணவர்களே --நீங்கள்
நாளைய இந்தியாவின் தலைவர்களா
இல்லை தலைவலிகளா? --இதை
நினைந்து நினைந்து மனம் வெறுக்குதிலையே!

காக்க மறந்த காவலர்களே! --உங்கள்
மனிதாபிமானம் எங்கு போனது! காற்றிலா?
அஞ்சி யஞ்சிக் கடமையை மறந்தீர்கள் --ஒரு
நிமிடம் நீங்கள் நினைத்திருந்தால் எல்லாம்
தலை கீழாகி மாறியிருக்குமே! --மாணவன்
கட்டையின் முன் உங்களது லத்தி செல்லுமா!
நெஞ்சு பொறுக்கு தில்லையே --கடமை
செய்ய தவறிய காவலர்களை நினைந்துவிட்டால்.

விழியில் பார்த்தேன். நெஞ்சம் பதரியது --ஒரு
நொடி, இருந்தாலும் என்ன பயன்? பயந்து
நடுங்கி வேடிக்கை பார்த்தவர்களும் --இந்த
சமுதாயத்தில் இருக்கின்றனரே! அஞ்சி யஞ்சி
வாழ்பவர். வாழ்ந்து கொண்டே இருப்பர்.
அதர்மம் தலைவிரித்து ஆடட்டும் -- தமிழ்
நாட்டில் சாதி என்று ஒழியோமோ?...தமிழர்
கண் துடைக்க பாரதியே நீ மீண்டும் பிறப்பாயாக!

அன்று பாரத சனங்களின் நிலைமையை நொண்டிச் சிந்து பாடலில் பாரதி எழுதியிருந்தான். இன்றைய தமிழ்நாட்டின் அவலத்தை பாரதி பாட்டோடு எழுதியுள்ளேன்.

Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

To combat spam, please enter the code in the image.

அமேசானில் வாங்க...