வேண்டும். எனக்கு புதிதாய் ஒரு பூமி!
இருப்பது போதாதா? போதும்
இருந்தாலும் புதிதாய் ஒரு பூமி வேண்டும்.
எதற்காக வேண்டும்? தமிழ் அமுதை
அங்கும் கொஞ்சி விளையாட
விளையாடினால் போதுமா? போதாது என்
மக்களை அங்கு கூட்டிச்செல்ல வேண்டும்!
வேண்டாம். எனக்கு புதிதாய் ஒரு பூமி!
சாதி, இன, மத வெறியர்கள்
இங்கிருப்பது போல் இருந்தால்!
மனிதாபிமானம் என்றால் என்ன?
என்று கேட்கும் மக்களிருந்தால்!
குறிப்பு: தமிழ்மன்ற கவிதைப்போட்டிக்காக மேலே உள்ள கிறுக்கல்கள்
வாசகரே! உங்களுடைய கருத்துக்களை அனுப்புங்கள்.
Comments
Post new comment