தமிழ் திரைப்படங்கள் 2008 - ஒரு அலசல்

சுமார் 62 திரைப்படங்கள் 2008ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளன. என்ன தான் திருட்டு விசிடிக்களையும், இணைய கீழ் இறக்கியையும் ஒழிக்க முடியவில்லையென்றாலும், சில படங்கள் மக்களை தியேட்டருக்குள் சுண்டி இழுக்க தான் செய்கின்றன. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களும், குறைவான செலவில் உருவாக்கப்பட்ட படங்களும் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. உதாரனத்துக்கு தசாவதாரம் சுமார் 100 கோடி செலவில் உருவாக்கினர். ஓரளவுக்கு ஓடின. சுப்பிரமணியபுரம் சில கோடிகளே செலவுசெய்து உருவாக்கப்பட்டது. அது மாபெரும் வெற்றியை பெற்றது.

இப்படி பார்க்கும் பொழுது மக்கள் பெரிய/மூத்த நடிகர்கள் சிறிய/இளைய நடிகர்கள் என்று பிரித்து பார்த்து படம் பார்க்க வருவதில்லை என்று தெரிகிறது. நல்ல கதை அல்லது புரியும் படியான கதை, அதனுடன் சூப்பரான திரைக்கதை இருந்தால் படம் ஹிட் தான். சில படங்களில் ஓரிரு பாடல்கள் ஹிட்டாகும். பாடல்களை வைத்து திரைப்படம் ஹிட் என்று சொல்ல முடியாது.

எப்படி பட்ட திரைப்படங்கள் 2008ல் ஹிட் ஆகியுள்ளன?
1. கொலைவெறி பிதித்தவைகள்
2. காவல்துறை சம்மந்தபட்டவை
3. இயல்பானவைகள்

எப்படி பட்ட திரைப்படங்கள் 2008ல் ஹிட் ஆகவில்லை?
1. ஓவர் சீன்
2. ஓவர் டையலாக்
3. ஓவர் ஆக்‌ஷன்
4. எல்லாமே ஓவாரா இருக்கும்....

ஒரு படம் ஹிட்டாக பெரிய ஸ்டார்கள் தேவையில்லை என்று 2008ல் மக்கள் நிருபித்துவிட்டன்ர். படு மொக்கையாக இருந்தாலும் சரி, ஓவர் சீரியசாக இருந்தாலும் சரி, ஓவர் அட்வைஸ் கொடுத்தாலும் அந்த படம் ஓடாது. நல்ல படங்கள் என்று யோசிக்கும் பொழுது அவை என்ன கருத்துகள் கூறுகின்றன என்று நாம் பார்க்க வேண்டும். ஆனால், அட்வைஸ் கொடுத்தால் படம் வேலைக்கு ஆகாது என்று 2008ல் மக்கள் நிருபித்துவிட்டன்ர்.

வர வர மக்கள் உலகலாவிய திரைப்படங்களை தங்களது கணினியில் அல்லது டிடிஎச்சில் பார்த்து விடுகின்றனர். ஆகையால் ஒரு தமிழ் படம் பார்க்கும் பொழுது அதனுடம் ஒப்பிட ஆரம்பித்துவிட்டனர். சில பேர் இந்த படம் அந்த ஆங்கில படத்தின் காபி என்றும் கூட சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆகையால், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். படம் இயக்க வேண்டும் என்று எண்ணி இயக்கக்கூடாது. உலகாலாவிய சினிமாக்களை பாருங்கள். நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். நல்ல கதையை உருவாக்குங்கள். அதற்கு சுவரஸ்சியமான திரைக்கதையை உண்டாக்குங்கள். படம் ஹிட்டாகும் என்று நம்பி உழைப்பை போடுங்கள். நிச்சயம் வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

(தொடரும்)

Comments

நல்ல அலசலா

நல்ல அலசலா இருக்கு.

//. கொளைவெறி பிதித்தவைகள்//

கொலைவெறி பிடித்தவைகள்

word verification NO please

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...