அட்ட பிளாப் ஆன தமிழ் திரைப்படங்கள் 2008

தமிழ் திரைப்படங்கள் 2008 தொடர்ச்சியாக முதலில் நாம் அட்ட பிளாப் ஆன படங்களை பற்றி பேசுவோம். அட்ட பிளாப் என்றால படம் தியேட்டரில் வெளியான ஓரிரு வாரத்துக்குள் தியேட்டரை விட்டு ஓடி விடும் படங்களாகும். ஏன் தியேட்டரை விட்டு ஓடுகிறது என்று நாம் நினைத்துப்பார்க்க முடியாது. சில திரைப்படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும். ஆனால், கதை,திரைக்கதை படு கேவலமாக இருக்கும். பட்டு ஒன்றினை மட்டுமே நம்பி படம் எடுத்த காலம் போய்விட்டது. மக்களின் இரசனை மாறிவிட்டது என்பது தான் உண்மை.

அட்ட பிளாப் ஆன திரைப்படங்களின் பட்டியல் கீழே
1. சக்கரகட்டி
2. தாம் தூம்
3. சத்யம்
4. குசேலன்
5. வேதா
6. தரகு
7. இன்பா
8. சிங்கக்குட்டி
9. வைத்தீஸ்வரன்
10. வெள்ளித்திரை
11. தோட்டா
12. தூண்டில்
13. இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
14. பிரிவோம் சந்திப்போம்
15. அரை என் 305ல் கடவுள்
16. தோழா

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் குசேலன். இதில் ரஜினிகாந்த், பசுபதி, மீனா, நயந்தாரா நடித்தருந்தனர். வழக்கம்போல் ஒரு நடிகர் நடிகை பட்டாலமே இருந்தது. நானும் ஒரு ரஜினி ரசிகன் தான். என்னை பொருத்தவரை படம் நன்றாக இருந்தது. ஆனால் அதனை ரஜினி பெயர் சொல்லி விற்றது தேவையில்லாத மார்கெட்டிங்கு. அதனாலேயே இந்த படம் அட்ட பிளாப் ஆனது.

சக்கரகட்டி, தாம் தூம் போன்ற படங்களில் படல்கள் ஹிடோ ஹிட். அதுவும் சக்கரகட்டியில் டாக்ஸி டாக்ஸி செம ஹிட். தாம் தூமில் அனைத்து பாடலகளுமே சூப்பர். ஆனால் இது இரண்டும் பிளாப் ஆகின. தாம் தூம் ஒரு ஆங்கில படத்தின் அட்ட காபி. சக்கரகட்டி - ஒன்றும் சொல்வதுக்கில்லை.

சத்யம், வெள்ளித்திரை - ஓவர் சீன். விசால் பாடி பிள்டப் வேலைக்கு ஆகல. பிராகாஷ் ராஜ் அதிக நடிப்பு. வேதா, தரகு, இன்பா, சிங்கக்குட்டி - இந்த மாதிரி படம் ரிலிஸ் ஆச்சா? என கேள்வி எழுது.

வைத்தீஸ்வரன், தோட்டா, தூண்டில் - மேக்னா நாயுடு கிளாமர் ஓகே. மற்றதெல்லாம் வேஸ்ட்; பருத்திவிரனுக்கு பிறகு கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியாமணி; தூண்டில் படத்தில் குத்து ரம்யா கலக்கியிருப்பாங்க.

பிரிவோம் சந்திப்போம் - குடும்ப படம். படு ஸ்லோ. ஆனால், இந்த படத்தில் தமிழ் நாட்டு திருமணத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் படமாக்கியிருப்பது குறிப்பிட தக்கது.

இந்திரலோகத்தில் நா. அழகப்பன் - இவரு ரொம்ப நல்லவரு. ஓவர் டைலாக். பேச்சை குறைக்கனும்; அரை என் 305ல் கடவுள் - பாராட்டுக்குறிய புதிய முயற்சி. ஆனால் அட்வைஸ் செய்கிறார்கள். சந்தானம், கஞ்சா கறுப்பு ஓ.கே காமெடி; தோழா - சென்னை 600028 நடித்த நண்பர்கள். அவ்வுளவுதான். அதுக்கு மேல கேட்காதீங்க.

(தொடரும்)

Comments

குசேலன்

குசேலன் பிளாப் படம் அல்ல பிளாப் ஆக்கப்பட்ட படம்

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...