போன பதிவில் அட்ட பிளாப் ஆன படங்களை பார்த்தோம். நிறைய திரைப்படங்கள் நல்ல மார்கெட்டிங்கு இல்லாததால், அவைகள் வெளிவந்தாலும் சரியாக ஓடுவதில்லை. சேது போன்ற படங்கள் வாய் வழியாக மக்கள் செய்த மார்கெட்டிங்கினால் பெரும் வெற்றியை பெற்றது. எல்லா திரைப்படங்களும் அவ்வாறு வெற்றி பெருவதில்லை. காணாமல் போன படங்கள் இன்னும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. சரி, இந்த பதிவில், ”இந்த படங்களும் ரிலிஸ் ஆச்சா” என்று கேள்வி எழுப்பும் படங்களை பார்ப்போம்.
படங்களின் பட்டியல் கீழே
1. வம்புச்சண்டை
2. கண்ணும் கண்ணும்
3. சில நேரங்களில்
4. அக்கு
5. தங்கம்
6. பிடிச்சிருக்கு
7. பாண்டி
8. வேள்வி
9. அலிபாபா
இந்த படங்கள் எல்லாம் வெளியாகினவா என்று என் மனதில் கேள்வி எழும்புகிறது. யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இதனை எழுதவில்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன். படம் இயக்குவது, அதனை வெளியிடுவது என்பது எவ்வுளவு கடினம் என்று நான் அறிவேன். இருந்தலாம் சில விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
சிவாஜி படத்தின் வெள்ளி விழாவன்று, ரஜினி அவர்கள் இயக்குனர் சங்கரை பற்றி பேசினார். அப்போது கூறுகையில், ”சங்கர், எதனை செய்ய வேண்டும் என்று யோசித்து வைத்து கொள்வார். பின்னர் அதனை செய்ய யாரை அனுக வேண்டும், எப்படி அனுக வேண்டும் என்று தெரிந்து, அனுகி, பின்னர் தான் நினைத்தை முடித்துவிடுவார்” இதனை ஒரு யோகி முனிவர் சில 1000 வருடங்களுக்கு முன்பு கூறியதை சங்கர் தன்னை அறியாமலே செய்து வருகிறார். இதனை ஏன் இங்கு நான் சொல்கிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
டிப்ஸ்: ஆகையால், இம்மாதிரியான படங்களை எடுத்திருக்கும் இயக்குனர்களே!, இனிமேல் நீங்கள் எடுக்கு படங்களை, நன்கு சிந்தித்து, இயக்கி, அதனை வெற்றிப்படமாக திரையில் ஓட வைப்பதர்க்கு எனது வாழ்த்துக்கள்
Comments
comment
வம்புசண்டை ரிலீஸ் ஆகி ஊத்திகிச்சு
கண்ணும் கண்ணும் ரிலீஸ் ஆகி ரொம்ப சுமாரா ஒரளவுக்கு படு சுமாரா ஊத்திகிச்சு
சிலநேரங்களில், அக்கு, தங்கம், அலிபாபா ஆகியவை சூப்பர் டுப்பர் ப்ளாப்..
பிடிச்சிருக்கு..ப்ளாப்தான் ஆனாலும் மரியாதையான படம்..
வேள்வி.. ரிலீஸ் ஆயிருச்சு..
நன்றி
கேபிள் சங்கர், உங்களது தகவலுக்கு நன்றி.
- பாலச்சந்தர் முருகானந்தம்
Post new comment