இந்த படங்கள் ரிலிஸ் ஆச்சா? என்பதை பார்த்தோம். இனி வித்தியாசமான படங்களை பார்ப்போம். வித்தியாசமான படம் என்று நாம் கூறுவது இயல்பை மீறி இருக்கும் படங்கலாகும். அப்படி பட்ட படங்களும் தமிழில் இயக்கப்படுகின்றன. இயல்பு என்று நான் கூறுவது படத்தின் டிரென்டாகும். ரவுடி படங்கள் வந்தால் அதே மாதிரியான படங்கள் நிறைய வெளியாகும். அதே போல் காதல், போலீஸ் என்று பல தர பட்ட டிரெண்டுகளை நாம் பார்த்திருப்போம். சில திரைப்படங்களின் பெயர் வித்தியாசமாக இருக்கும். சில படங்களின் கதை அல்லது திரைக்கதை வித்தியாசமாக இருக்கும்.
அப்படி பட்ட படங்களின் பட்டியல் கீழே
1. மகேஷ் சரண்யா மற்றும் பலர்
2. வல்லமை தாராயோ
3. ஆயிதம் செய்வோம்
4. காத்தவராயன்
5. சிலந்தி
6. வல்லுவன் வாசுகி
7. நெஞ்சத்தை கிள்ளாதே
நெஞ்சத்தை கிள்ளாதே - இப்படியெல்லாமும் சிந்தித்து ஒரு காதல் திரைப்படம் எடுக்கலாம் என்று உணர்த்தும் படம். கொஞ்சம் குழப்பமாக இருக்கும். சில காட்சிகள் இயல்பை மீறி இருக்கும்
சிலந்தி - மோனிக்க நடித்த திகில் படம். மோனிக்க படு சூப்பர். அவ்வுளவுதான்பா.
வல்லமை தாராயோ, வல்லுவன் வாசுகி, மகேஷ் சரண்யா மற்றும் பலர் - வித்தியாசமான பெயர் மட்டும் தான். வேற எடுவும் இல்லை
ஆயிதம் செய்வோம் - சுந்தர்.சி விவேக் பன்னும் லூட்டி சூப்பர். முதலில் காமெடியாக, பின்னர் சீரியஸாக, காந்தியின் கொள்கைகளை எடுத்துரைக்கும் படம்.
டிப்ஸ்: வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு, பெயர் மற்றும் கதை மட்டும் வித்தியாசமாக இருத்தல் போதாது. அதனுடன் கமர்ஷியல் மசாலாவையும் சேருங்கள்.
Comments
Post new comment