சென்ற பதிவில் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த வித்தியாசமான தமிழ் திரைப்படங்களை பார்த்தோம். இந்த பதிவில், ஓடாத படங்களை பார்ப்போம். ஓடாத தமிழ் படங்கள் ஒன்று உண்டா என்ற கேள்விக்கு உண்டு என்று பதில் கூறலாம். தியேட்டர்களில் பிலிம் ஓடாமல் எப்படி படம் ஓடும்? சாரி பாஸ். மொக்கை காமெடியை செய்ய முயன்றேன். சரி. தலைப்புக்கு வருவோம்.
ஓடாத அல்லது தியேட்டரை விட்டு ஓடிய படங்களின் பட்டியல் கீழே
1. பந்தயம்
2. துரை
3. பொய் சொல்ல போரோம்
4. தனம்
5. முனியாண்டி விளங்கியல் மூன்றாமாண்டு
6. காளை
7. வாழ்த்துக்கள்
8. அரசாங்கம்
துரை, அரசாங்கம் - அர்ஜுன் மற்றும் கேப்டேன் விசயகாந்த் தான் போலீஸ் படத்துக்கு சரியான ஹீரோக்கள் என்று மீண்டும் நிருபித்துள்ளனர்.
காளை - சிம்பு கொஞ்சம் ஓவரா பேசுரத நிருத்துப்பா! மன்மதன் படத்தில் மொட்டையாக கொஞ்சமாக பேசிய உன் கதாபாத்திரம் அதிகமாக உலகில் பேசப்பட்டது. சீன் எல்லாம் வேண்டாம்பா!
பந்தயம் - விஜய் ரசிகரின் கதை. சொல்ல வேண்டுமா?
பொய் சொல்ல போரோம் - காமெடி நாடகம்
தனம் - ஒரு விபச்சாரி மாமியாகிறாள் என்பது தான் கதை
முனியாண்டி விளங்கியல் மூன்றாமாண்டு, வாழ்த்துக்கள் - பரத்துக்காக பார்க்கலாம்; மாதவனும் சீமானுக்காகவும் பார்க்கலாம்.
டிப்ஸ்: ஓடாத படங்களை எடுத்திருக்கும் இயக்குனர்களுக்கு, வரும் 2009 ஆண்டில் ஓடும் படமாக இயக்க எனது வாழ்த்துக்கள். நன்றாக திரையில் ஓடவைக்கும் படமாக இயக்குங்கள்.
Comments
Post new comment