போன பதிவில் ஓடாத திரைப்படங்களை பற்றி பார்த்தோம். இந்த இடுகையில் ஓட்டப்பட்ட திரைப்படங்களை பார்ப்போம். நிறைய பணம் வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் படத்தினை தியேட்டர்களில் ஓடவைக்க பணத்தினை வாரி இறைப்பார்கள்.
அப்படி ஓட்டப்பட்ட படங்களின் பட்டியல் கீழே காணலாம்
1. காதலில் விழுந்தேன்
2. தெனாவட்டு
3. திண்டுக்கள் சாரதி
4. நாயகன்
5. உளியின் ஓசை
6. குருவி
2008 ஆம் ஆண்டில், சன் டிவியின் நிர்வாகியான கலாநிதி மாறன் அவர்கள் சன் பிக்ச்சர்ஸ் நிருவணத்தை ஆரம்ப்பித்து அதன் மூலம் திரைப்படங்களை வாங்கி விநியோக உரிமையையும், சன் டிவியில் ஒளி பரப்பவும் முழு உரிமம் பெற்றார். சன் பிக்ச்சர்ஸ் வழியாக வந்த படங்கள் காதலில் விழுந்தேன், தெனாவட்டு, திண்டுக்கள் சாரதி(சென்ற வாரம் வெளியானது). காதல், அதிரடி அக்ஷன், காமெடி என்று பல தரப்புகளில் படத்தினை தேர்வு செய்து விநியோகம் செய்கிறது சன் பிக்ச்சர்ஸ். சன் நெட்வர்க்கில் உள்ள அனைத்து தமிழ் சார்ந்த அலைவரிசைகளில், சன் பிக்ச்சர்ஸ் விளம்பரம் தான் போங்க. இந்த படங்கள் எவ்வாறு ஓடியது என்று தெரியவில்லை. ஆனால் பிளாப் இல்லை நான் கூறுவேன்.
உளியின் ஓசை - கலைஞருக்காக ஒலித்தது
குருவி - இந்த படம் தரணியோட படம்னு நான் சொல்லவே மாட்டேன். தரணி இயக்கியதில் படு கேவலமான படம். விஜய் ஓவர் சீன். விஜய் சார், நீங்க கமர்ஷியல் ஹீரோ தான். அதுக்குனு இப்படியா? இந்த மாதிரி படம் பன்னாதீங்க சார்.
நாயகன் - ஒன்றும் சொல்வதற்கில்லை.
Comments
//இதிலும்
//இதிலும் குசேலன் படத்தை சேர்காததை வன்மையாக கண்டிக்கிறேன்//
கண்ணை மூடி கொண்டு ரஜினியை எதிர்க்கும் கோவி கண்ணனை வன்மையாக கண்டிக்கிறேன் :-)
தலைப்பை படியுங்கள் முதலில் ..குசேலன் படம் தொடர்ந்து மற்ற படங்களை போல ஒட்டப்படவில்லை தோல்வி அடைந்தும்.
காலம்
நல்ல அவதனிப்பு :)))))) இதிலும் குசேலன் படத்தை சேர்காததை வன்மையாக கண்டிக்கிறேன்
நன்றி
நன்றி கோவி.கண்ணன். குசேலன் படம் அட்ட பிளாப் ஆன தமிழ் திரைப்படங்களில் ஒன்று. அங்கு அதனை சேர்த்துள்ளேன்.
Post new comment