சுமார ஓடினப் தமிழ் திரைப்படங்கள் 2008

இதுவரைக்கும் நாம் 2008ல் வெளிவந்து அட்ட பிளாப் ஆன படங்கள், அட இந்த படங்களும் ரிலீஸ் ஆச்சா, வித்தியாசமான படங்கள்,ஓடாத படங்கள், ஓட்டப்பட்ட படங்கள் என பல திரைப்படங்களை பற்றி எழுதியிருந்தேன். இனி வரும் பதிவுகளில் கொஞ்சம் சுவரியமான படங்களை பற்றி பார்ப்போம். அதன் முன்னோடியாக சுமாராக ஓடிய படங்களை பற்றி பார்போம்.

2008ல் வெளிவந்து சுமாரா ஓடிய படங்களின் பட்டியல்
1. ஏகன்
2. சேவல்
3. வாரணம் ஆயிரம்
4. இராமன் தேடிய சீதை
5. சரோஜா
6. சண்டை
7. சாது மிரண்டா
8. பீமா
9. பழனி

நம்ம தல அஜித் சார், பில்லா சூப்பர் ஹிட்க்கு அப்புரம் ஒரு பெரிய ஹிட் கொடுக்கனும்னு நினைச்சார்.ஆனா அது நிறைவேறாம போய்விட்டது. ஏகன் என்ற படத்தில் நடித்தார். நடன இயக்குனர் ராஜு சுந்தரம் இயக்கினார். பிரபு தேவா தற்போது இயக்கத்தில் கொடி கட்டி பறக்கிறார். அதனை பார்த்துவிட்டு ராஜு சுந்தரத்திற்கு ஆசைவந்துவிட்டது போல தெரிகிறது. ஒரு ஹிட்டான ஹிந்தி படத்தினை தமிழில் திரும்ப எடுத்திருக்கின்றனர். இதில் நயந்தாரா மீண்டும் அஜித்துடன் ஜோடியாக இணைந்தார். அஜித், நயனுக்காக சகித்துக்கொண்டு பார்க்கலாம்.

சேவல் - பரத், சிம்ரன் போன்றோர் நடித்தனர். ஹரி இயக்கினார். வழக்கம் போல் கிராமத்துக்கதை. எனக்கு மிகவும் பிடித்துருந்தது. ஒரு பெண்னின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் திசை மாறுகிறது என்று நன்கு காட்டியுள்ளனர். ஹீரோயின் சூப்பர். ஆனா பாவும். அவங்களுக்கு மொட்டை அடிச்சிட்டாங்க. படம் ஓ.கே.

வாரணம் ஆயிரம் - எனக்கு தெரிஞ்சு ஓவரா ஹைப் பன்னின படம் இது தான். பாடல்கள் எல்லாம் நல்ல இருக்கும். தவமாய் தவமிருந்து படத்தில் சூரியா நடத்தால் எப்படி இருக்கும். அதுபோல தான் இந்த படம். இப்படத்தில் சப்ப பிகர் சமீரா, குத்து ரம்யா என இரண்டு ஹீரோயின்கள். இதில் வரும் கதை கவுதம் மேனனின் உண்மைக்கதை என கூறப்படுகிறது. கவுதம் சார், செம ஜாலியா இருந்திருக்கீங்க போலிருக்கிறது.

இராமன் தேடிய சீதை - ஐந்து நல்ல பிகர்கள வேஸ்ட் பண்ணிடாங்க. படம் ஓ.கே. சரோஜா - சரியான மொக்கை. திரில்லர் காமெடி. ஆங்கில படத்தின் அட்ட காப்பி. சென்னை 600028 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு எடுத்த சுமார ஓடிய படம். ஜெயராம் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பு பரவாயில்லை. சண்டை- சுந்தர்.சி யின் ஆக்‌ஷன் படம். சூமார ஓடியது. சாது மிரண்டா - பிரசன்னா நடித்த கமெடி கலந்த திகில்

பீமா - விக்ரமின் படம். இரண்டு வருடங்கள் கழித்து வெளிவந்தது. இந்த படம் வருமா என்று நொந்து போனது தான் மிச்சம். படத்தின் பாடல்கள் நன்றாக இருந்தது. திரிஷா சூப்பர். சாமி படத்துக்கு பிறகு விக்ரமும் திரிஷாவும் இணைந்து நடித்தப்படம். சுமார ஓடிச்சு. ஒரு ரவுடியை பார்த்து ஒரு ரவுடி உருவான கதை.

பழனி - கமர்ஷியல் பஞ்சாமிர்தம். நம்ம பேரரசுவின் படம். பரத் முதன் முறையாக கமெர்ஷியல் ஆக்‌ஷன் படத்தில் நடித்தார். காஜல் அகர்வால் அழகு. பேரரசு இதில் அக்கா - தம்பி பாசத்தினை வைத்து படத்தினை இயக்கியுள்ளார். அவரே எழுதிய ஒரு காதல் பாட்டும் இதில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிட தக்கது.

(தொடரும்)

Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...