நல்லா ஓடின தமிழ் திரைப்படங்கள் 2008

சுமார ஓடின தமிழ் திரைப்படங்களை பாத்தோம் போன பதிவில் பார்த்தோம். அதற்கு அடுத்தபடியாக் இந்த இடுகையில் நல்லா ஒடினப்படங்களை பார்போம். நல்லா ஓடின படம் என்றால் ஓரளவுக்கு வசூலை குவித்தது என்று நாம் கூறலாம்.

அதன் பட்டியல் கீழே
1. தசாவதாரம்
2. சந்தோஷ் சுப்பிரமணியம்
3. நேபாளி
4. ஜெயம் கொண்டான்

தசாவதாரம் - கமல் அடம்பிடிச்சு 10 வேடங்களில் நடித்தருந்தார் என்பதை தவிர வேறு எதுவும் சிறப்பில்லை. பட்டாம்பூச்சி எஃபக்ட் / கையாஸ் தியொரியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். 100 கோடி செலவு. 12ஆம் நூற்றாண்டு கிராப்பிக்ஸ் சூப்பர். கவர்ச்சியான மல்லிகா. அழகான அசின். பத்து கதாப்பாத்திரத்தில், சில கதாப்பாத்திரங்களை கமல் நல்லா செஞ்சிருப்பார். அவை பலராம் நாயுடு, இரங்கராஜா நம்பி, வின்செண்ட் பூவராகன் ஆகும். படம் நஷ்டம் இல்லை. ஆஸ்கர் பிலிம்சை கமல்- கே.எஸ். ரவிக்குமார் காப்பாற்றினார்

சந்தோஷ் சுப்பிரமணியம் - தெலுங்கு படமான பொம்மரிள்ளு படத்தின் ரீமேக். விஜய்க்கு பிறகு ஜெயம் ரவி மூழு ரீமேக் ஹீரோவாக மாறிவிருகிறார். ஹரினி என்ற ஜெனீலியா டி சோசா மிகவும் குழந்தைத்தனமாக நடித்துள்ளார். பொம்மரிள்ளுவையும் பார்த்தேன். இரண்டு படத்திற்கும் நடிகர்கள் தான் வித்தியாசம். ஆனால் பொம்மரிள்ளுதான் எனக்கு பிடித்திருக்கிறது.

நேபாளி - தன் மனைவியை கொண்ற கயவர்களை பழி தீர்க்கும் ஒரு இளைஞனின் கதை. மீரா ஜாஸ்மின், பரத் நடித்தனர். பரத்தின் நேபாளி நடிப்பு நல்லா இருக்கும். படம் பார்க்கும் பொழுது பரத் இதில் மூன்று வேடத்தில் நடித்திருப்பதுபோல் தெரியும். அந்த விடயத்தில் இயக்குனரை பாராட்ட வேண்டும். மீரா ஜாஸ்மின் அழகு. ஓரிரு பாடல்கள் ஹிட். சில ரோமேண்டிக் காட்சிகள் சூப்பராக இருக்கும். இளசுகளுக்கு பிடிக்கும். அதுவும் புதிதாக திருமணமானவர்களுக்கு பிடிக்கும்.

ஜெயம் கொண்டான் - அண்ணன் தங்கை போடும் சண்டையின் விலைவாக நடக்கும் சம்பவங்கள் தான் கதை. ஆரவாரமில்லாமல் நகரும் படம். இப்படத்தின் விமர்சணத்தினை இங்கே பார்க்கலாம். லேகா வாஷிங்டனும், பாவனாவும் அடிக்கும் லூட்டி சூப்பர். எனக்கு பிடித்த படம்.

(தொடரும்)

Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...