போனப்பதிவில் நல்லா ஓடின படங்களை பார்த்தோம். நீங்கள் ஆவளோடு எதிர்பார்த்து கொண்டிருந்த 2008ஆம் ஆண்டில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படங்களை பற்றி பேசுவோம். இதில் மூன்று படங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த மூன்று படங்களுக்கும் தனித்தன்மை உடையவை. ஒன்று 1980ல் போல் எடுக்கப்பட்ட படம். ஒன்று முழுக்க முழுக்க போலீஸ் கதை. ஒன்று சிம்பிலான காதல் கதை.
முதல் மூன்று தமிழ் திரைப்படங்கள்
1. சுப்பிரமணியபுரம்
2. அஞ்சாதே
3. யாரடி நீ மோகினி

இயக்குனர் சசி ஒரு ஓ போடுங்கப்பா. முதல் படத்திலேயே பிச்சு உதரிட்டார். தான் ஒரு சிறந்த இயக்குனர் என்றும், சிறந்த நடிகன் மற்றும் தயாரிப்பாளர் என்றும் நிருபித்துள்ளார். இந்த படம் வெளிவந்தபோது இதுவும் பருத்திவீரன் போல் இருக்கும் என நினைத்து குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். ஆனால் படம் பார்த்த பிறகு தான் தெரிகிறது அப்படி இல்லையென்று. சசி அவர்கள் 1980களில் எப்படி ஒரு கிராமம் இருந்திருக்கு என்று அழகாக காட்டியுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தனின் கனவு மெய்யானது. இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராகத்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் தனது கனவு “இசையமைப்பாளர்” ஆவது தான் என்று கூறினார். சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார் அவர். அவரது ”கண்கள் இரண்டால்” பாட்டு உலகில் உள்ள காதலர்களுக்கு விருந்தாக அமைந்தது. என்ன ஒரு பின்னனி இசை. அதுமட்டுமல்ல, ஒரு மேற்கத்திய இசையில் அமைந்திருக்கும் பாடலும் உண்டு. மதுர குலுங்க குலுங்க என மதுரையை குலுங்க வைக்கும் பாடலும் சரி. சூப்பரோ சூப்பர்.

ஜெய் - சென்னை 600028க்கு பிறகு இவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். தனது சிரிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். இயக்குனர் சசிக்கு நன்றாக ஒத்துழைத்திருக்கிறார் போல் தெரிகிறது. ஜெய், உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
சுவாதி - அழகான, அம்சமான ஒரு தமிழ் பெணாக நடித்திருக்கறார். கிராமத்தில் ஒரு பெண் எவ்வாறு இருப்பாள் என்று அழகாக நடித்துள்ளார். தனது சிரிப்பின் மூலம் அனைவரது ஈர்ப்பையும் ஈர்த்துள்ளார்.
கஞ்சா கருப்பு - எப்போதுமே கமெடியில் கலக்கும் இவர், இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் கிளைமேக்ஸின் ஹீரோ இவர் தான். சூப்பரப்பு.
சமுத்திரக்கனி - சின்னத்திரையில் இயக்குனராக இருந்த இவர் வெள்ளித்திரைக்கு நடிகராக சென்று தான் ஒரு சிறந்த வில்லன் என்று நிருபித்துள்ளார். இதார்த்தமான வில்லன் நடிப்பு. பாராட்டுக்கள் சமுத்திரக்கனி.

படத்தின் விவரம்
கதை: சசிக்குமார்
நடிப்பு: ஜெய், சுவாதி, சசிக்குமார், கஞ்சா கறுப்பு, சமுத்திரக்கனி
இசையமைப்பு: ஜேம்ஸ் வசந்தன்
இணையத்தில் கிடைத்த விமர்சனங்கள்:

நரேன் - பொருக்கியாக இருந்து போலீஸாக் மாறுவார். நல்ல நடிப்பு. அதுவும் ஒரு காட்சியில், ஒருவன் தன் மனைவியின் தலையை வெட்டி காவல் நிலையத்துக்கு பையில் கொண்டுவருவான். அதனை பார்த்து நரேன் பயந்து போய்விடுவார். சபாஷ் நரேன்!
அஜ்மல் - போலீஸ் கனவு கண்டு பொருக்கியாக மாறுவார். நல்ல நடிப்பு. என்ன தான் பொருக்கியாக மாறினாலும் அவனுல் ஈரம் இருக்கதான் செய்கிறது. சில காட்சிகளில் தான் ஏன் எப்படி மாறிவிட்டான் என்று என்னுவான். இந்த மாதிரியான சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது. பணம் பத்தும் பேசும். வேலையையும் வாங்கித்தரும்
விஜயலட்சுமி - ஓ.கே. நரேன் காதலி.
பிரெஸன்னா, பாண்டியராஜன் - சூப்பர் வில்லன்கள். பிரெஸன்னா கீழ்தனமான வில்லன். பாண்டியராஜன் காமெடியான வில்லன்.
மிஷ்கின் படத்தில் வால மீன் பாடலுக்கு அப்புறம் ”கத்தாழ கண்னால” பாடல் ஹிடோ ஹிட்.

படத்தின் விவரம்
கதை: மிஷ்கின்
நடிப்பு: நரேன், பிரெஸன்னா, விஜயலட்சுமி, அஜ்மல், பாண்டியராஜன்
இணையத்தில் கிடைத்த விமர்சனங்கள்:

செல்வராகவனது ”ஆடவரி மாட்லகு அர்த்தலே வேருலே” தெலுங்கு படத்தின் ரீமேக். தமிழிலும் ஹிட்.
தனுஷ் ஜாலியா வந்து போய்ட்டார். முக்கியமாக ரகுவரனுடன் அடிக்கும் லூட்டி படு கலாட்டா. தனுஷ் கம்புயூட்டர் பிரோகிரம்லாம் பன்றார்பா. அதுவும் ஒரே நாளில் கற்றுக்கொண்டு.
நயந்தாரா - அழகாக பாவாடை தாவனியில் நடித்துள்ளார். ஆடை குறைப்பு அவ்வளவாக இல்லை.
கார்த்திக் - வழக்கம்போல் தனக்கு நிச்சியமான் பெண்னை விட்டுகொடுக்கும் ஏமாளி.
அது என்னமோ தெரியல, நிறைய திரைப்படங்களில் சரியாக ஹீரோ தான் ஹீரோயினை கைப்பிடிக்கிறார்.
மொத்ததில் காமெடியான படம். பாடல்கலும் ஹிட் தான்.
படத்தின் விவரம்
கதை: செல்வராகவன்(தெலுங்கு), ஜவஹர்(தமிழ்)
நடிப்பு: தனுஷ், நயன்தாரா, கார்த்திக், ரகுவரன்.
இணையத்தில் கிடைத்த விமர்சனங்கள்:
----
இத்துடன் இந்த தமிழ் திரைப்படங்கள் 2008க்கான தொடர் பதிவு முடிவடைகிறது. இது பற்றிய உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.
Comments
தசாவதாரம்
தசாவதாரம் எங்கப்பா ???
தசாவதாரம் இங்க இருக்குப்பா
2008ல் நல்லா ஓடின தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் இருக்கிறது
Post new comment