அறிவை வாங்கினேன். குருதியை கொடுத்தேன்

ஆம். அறிவை வாங்கினேன். நேற்று நான் சென்னையில் இருந்த போது, 32வது சென்னை புத்தகக்காட்சிக்கு சென்றேன். அங்கு ரூ500வரை மதிப்புள்ள புத்தகங்களை வாங்கினேன். இது வரை காசு கொடுத்து நான் படிப்புத்தவற எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் வாங்கியதில்லை. எனக்கும் புத்தகம் படிக்கும் பழக்கமும் இது வரை இருந்ததில்லை. ஆனால் தமிழ் பதிவுகள் எழுத தொடங்கிய நாளில்லி்ருந்தே, தமிழை நன்றாக எழுத, படிக்க ஆசை வந்தது. அதனை விலைவாக நிறை வலைப்பதிவுகள படிக்க ஆரம்பித்தேன். ஓரளவுக்கு தமிழில் எழுத கற்றுக்கொண்டேன். வயது ஆக் ஆக மணதில் சில மாற்றங்கள் நடப்பது இயற்கை. அது போல், எனக்கும் புத்தகம் படிக்கு ஆசை பிறந்தது. அதனால் தான் புத்தககாட்சிக்கு சென்றேன்.

கண்ணதாசன் அவர்கள் எழுதிய ”அர்த்தமுள்ள இந்து மதம்” புத்தகத்தினை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். நேற்று அதனை கண்ணதாசன் பதிப்பகத்தில் வாங்கியுள்ளேன். இன்னும் படிக்க தொடங்க வில்லை. கிழக்கு பதிப்பகத்தின் அல்ல அல்ல பணம் 1-2-3, சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் போன்ற புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். பிடித்த வலைப்பதிவர்களில் லக்கியும் ஒன்று என்பதால் அவர் எழுதிய ”சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்” புத்தகத்தினை படிக்க தொடங்கியுள்ளேன். அப்துல் கலாமின் அக்னி சிறகுகள், காந்தியின் சத்திய சோதனை எல்லம் வாங்கினேன். என்ன தான் காந்தி தாதா சொல்றாருன்னு பார்க்கலாம்னு தான். பிறகு பழங்களை உண்டு, ஒரு காப்பிகை குடித்து வெளியே வந்தேன்.

புத்தகங்களின் விலை பட்டியல்
அர்த்தமுள்ள இந்து மதம் - 10 பாகம் ரூ 122
அள்ள அள்ள பணம் 1-2-3 ரூ 300
சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் ரூ 70
அக்னி சிறகுகள், காந்தியின் சத்திய சோதனை ரூ 100

10% வரைதான் தள்ளுபடி செய்தார்கள் :( சாதரனமாக கடைக்கு சென்று வாங்கினாலே அவ்வுளவு தள்ளுபடி தருவார்கள். புத்தக காட்சியில் 15%முதல் 20% வரை தள்ளுபடி தந்திருபார்களேயானால், இன்னும் சில புத்தகங்களை வாங்கியிருபேன்.

மேலும், புத்தககாட்சியில் அதிகமாக தென்பட்டவை குழந்தைகளை படிக்க வைக்கும் விழிகள் தான். எல்லோரும் ஒரு தொலைக்காட்சிப்பெட்டியை வைத்து, குறுந்தகடு போட்டு விடுகிறார்கள். அது தானாக குழந்தைகளுக்கு பாட்டுகள், வாய்ப்பாடுகள், கணக்குகள் போன்ற வற்றை சொல்லிக்கொடுக்கின்றன. நான் எல்லாம் சிறு வயதில் தலையில் கொட்டு வாங்கி வாய்ப்பாடு படித்திருகிறேன். இப்போ என்னாடானா, எல்லாம் டிவியில் இருந்து வருகிறது.

லயன்ஸ் பிளெட் பேங்கின் இரத்ததான வேன் ஒன்று நின்றது. தானாக எனது மனம் இரத்ததானம் கொடுக்க முற்பட்டது. எனது வாழ்க்கையில் இரண்டாவது முறையாக இரத்ததானம் செய்தேன். ஃபுரூட்டியும், பார்லிஜி பிஸ்கோட்டும் கொடுத்தார்கள் :) அதனை உண்டு மகிழ்ந்து வீடு திரும்பினேன்.

நீங்கள் புத்தககாட்சிக்கு வந்திருந்தீர்களா? நீங்கள் என்ன புத்தகங்கள் வாங்குனீர்கள்? உங்களது அனுபவங்களை பின்னூட்டமளியுங்கள்

Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...