நேற்று பெற்றோருடன் ஐனாக்சில் ”யாவரும் நலம்” படம் பார்க்க சென்றேன். படத்திற்கு செல்வதற்கு முன்பு இணையத்தில் அதன் விமர்சனத்தினை பார்த்தேன். படத்தின் மீது ஆர்வம் அதிகரிக்க, இணையத்தில் முன்பதிவு செய்து பெற்றோரை அழைத்துச் சென்றேன். 13பி என்று இதே படம் ஹிந்தி மொழியிலும் வெளியாகியுள்ளது.

இதில் மாதவன், நீத்து சந்திரா, வித்யா பாலன், சரண்யா, சம்பத் போன்றோர் நடித்துள்ளனர். படம் ஆரம்பத்திலேயே திகில் ஆரம்பித்தது. 13பி என்ற ஃபிளாட்டில் மாதவன் மற்றும் அவரது குடும்பத்தினர் குடிபுகுந்தனர். அவருக்கு மட்டும் அந்த பிளாட்டில் உள்ள லிப்ட் வேலைசெய்யாது. மற்றவர்களுக்கு எல்லாம் வேலை செய்யும். இங்கேயே ஆரம்பிக்கிறது திகில். மேலும், மாதவன் குடும்பத்தில் இருக்கும் பெண்கள், சின்னத்திரையில் நாடகம் பார்க்கும் பழக்கம் உண்டு. அவர்களது டிவியில் மட்டும் 13வது அலைவரிசையில், eyeடிவியில் ஒரு நாடகம் வருகிறது. அந்த நாடகத்தின் பெயர் “யாவரும் நலம்”. அந்த நாடகத்தினை கூர்ந்து கவனியிங்கள். நாடகம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு பாடல், அதில் வேலை பார்த்தவர்களின் பெயர்கள் போடப்படும். அதனை இங்கே நான் கூறமாட்டேன். பார்த்தால் உங்களுக்கே புரியும். அந்த நாடகம் ஆரம்பிக்கு நேரம் 13:00 மணி.

அந்த நாடகத்தில் நடப்பது போல், மாதவன் குடும்பத்தில் நிகழ்வுகள் நடக்கின்றன. இயக்குனர் இங்கேயே திகிலை ஊட்டியுள்ளார். நாம் அனைவரும் எவ்வாறு நாடகம் பார்த்து, அதன் முடிவு என்னவாயிற்று என்று நினைத்துக்கொண்டு இருப்போமோ அதே மாதிரியான எண்ணங்கள் படம் பார்க்கும் பொழுது ஏற்படும். அடுத்து என்ன அசம்பாவிதம் நடக்கவிருக்குமோ என்ற எண்ணம் ஏற்படும். இதில் நடுவில், ஆவி, பேய் போன்றவற்றை சேர்த்திருக்கின்றனர். மேலும் ஒரு தேவையில்லாத டுயட்(கதாநாயகியின் கவர்ச்சியுடன்). படம் விறுவிறுப்பாக செல்கிறது. நாடகத்தின் இறுதி காட்சியில் இரத்தத்துடன் மாதவனே தோன்றுகிறார். இதனை பார்த்த மாதவன் நொந்து விடுகிறார். தானே தனது குடும்பத்தாரை கொண்றுவிடப்போவதாக எண்ணி தனது குடும்ப மருத்துவரிடம் செல்கிறார். கடைசியில் மாதவன் தனது குடும்பத்தினை அழிக்கவரும் அந்த மர்ம ஆசாமியை யார்?, அதன் பூர்வீகம் என்ன, எப்படி தன் குடும்பத்தினை அழிவிலிருந்து காக்கின்றார் என்பதை பயமூட்டும் விதத்தில் படத்தினை கொடுத்துருக்கின்றார் இயக்குனர். படம் ரொம்ப லாஜிக்கலா எடுத்திருக்கின்றனர். மேலும் சங்கர்-ஏசன்-ராய் அவர்களின் இசை ஒரு திகில் படத்திற்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இசையமைத்திருக்கின்றனர். பிக் பிக்ச்சர்ஸும், விக்ரம்.கே.குமாரும் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு திகில் படத்தினை தந்துள்ளனர்.
படத்தினை பார்த்து வெளியில் வரும்பொழுது சிலர் ஜெய்சங்கர் நடித்த ”பதிமூன்றாம் நம்பர் வீடு” படம் மாதிரி இருக்குப்பா...என்றனர். நான் அதனை பார்த்ததில்லை. சிறு வயதில் நான் பார்க்க விரும்பாத படம் அது. எங்க பாட்டி கூட சொன்னாங்க. ”பதிமூன்றாம் நம்பர் வீடு” படம் ரொம்ப பயமாக இருக்குமாம. அதனை இப்பொழுது பார்க்க ஆர்வம் அதிகரிக்கிறது.
சரி. தலைப்புக்கு வருவோம். இது அனைவரும் பார்க்ககூடிய குடும்பப்பாங்கான திகிலூட்டும் படம் தான். இருதயம் பாதிக்கப்பட்டவர்கள், இரத்த கொதிப்பு உள்ளவர்கள் பார்க்க வேண்டாம். படத்தில் கோரமான திகில் காட்சி அதிகமாக இல்லையென்றாலும், படத்தின் இசை ஏற்கனவே இருக்கும் பயத்தினை அதிகரித்துவிடும். இனிமேல் 13பி பிளாட் அல்லது தனிவீடு முகவரியில் இருக்கும் வீடுகளை மக்கள் வாங்குவார்களா என்று தோன்றுகிறது.படம் முடிந்தவுடன் நான் சிந்தித்து பார்த்த இன்னொரு திகிலான விடயம் என்னை மேலும் பயத்திற்குள்ளாக்கியது. அது என்னவென்றால், எங்களது வீட்டு முகவரி பற்றி தான். அது 13/1, வசந்தா பிறஸ் ரோடு. எனக்கு ஒரே ஷாக்க்க்க்க்க்க்க்க்..........................
Comments
இந்த
இந்த படத்தின் கதை " The Ring " என்ற ஆங்கில படத்தில் இருந்து சுடப்பட்டது .
;)
i saw the film, but did not
i saw the film, but did not keep an eye on the title card of the serial...whats so special about that? send that info to my mail id
Hi bala
My first post on your blog. Me too watched the hindhi version of this movie. I like the second half of the movie much and madhavan's acting a lot.
Also i watched a recently released thriller in telugu called "Arundhathi", after watching that movie, my expectation for a thriller movie got increased. As a matter of fact that movie collected more that 45crores as of now.
Post new comment