புஷ் முதல் எடியூரப்பா வரை....

கடந்த சில மாதங்களில் பொது மக்கள் எவ்வாறு கொதித்துள்ளனர் என்பதை நாம் நன்கு அறிவோம். இது ஒரு மக்கள் புரட்சிக்கு ஒரு ஆரம்பம் என நான் நினைக்கிறேன். சில சமயங்களில் இது அரசியல் ஸ்டண்டாக கூட இருக்கலாம்.

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷின் மேல் எறியப்பட்ட ஷூவில் தொடங்கி, இன்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா மீது எறியப்பட்ட செருப்பு வரை, கடந்த சில நாட்களில் இது மாதிரியான சம்பவங்கள் நிறைய நடக்கிறது. இன்னமும் நாம் எதிர்பார்க்கலாம்.

யார் யார் மீது ஷூ/செருப்பு வீசப்பட்டது

பெயர் எறியப்பட்ட பொருள் (ஷூ / செருப்பு) யார் இவர்
ஜார்ஜ் புஷ் ஷூ முன்னாள் அமெரிக்க அதிபர்
வென் ஜியாபவு ஷூ சீனா பிரதமர்
மன்மோகன் சிங் ஷூ இந்திய பிரதமர்
அத்வானி செருப்பு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்
பா. சிதம்பரம் ஷூ இந்திய உள்துறை அமைச்சர்
எடியூரப்பா செருப்பு கர்நாடக முதல்வர்

ஷூ எறியும் கலாச்சாரம்...
பத்திரிக்கையாளர்கள் கூடியிருக்கும் பொழுது, தனக்கு பிடிக்காத அரசியல்வாதி மீது ஷூ / செருப்பு எறிவது தான் ஷூ எறியும் கலாச்சாரம். எறியப்படுவது பழையதாகவும்/புதிதாகவும் இருக்கலாம்.

எங்கெல்லாம் இது நடக்கிறது?
இந்த கலாச்சாரத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பின்படுத்த தொடங்கியுள்ளனர். முக்கியமாக பத்திரிக்கையாளர்களின் கூட்டம், அரசியல் பொதுக்கூட்டம் போன்ற இடங்களில் இச்சமபவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

இதனால் யாருக்கு லாபம்?
வேற யாருக்கு. எல்லாம் பத்திரிக்கையாளர்களுக்கும், செய்தி தொலைக்காட்சி நிருவணங்களுக்கும் தான். உடனுக்குடன், அடிக்கடி இம்மாதிரியான சம்பவங்களை படம் பிடித்து, உடனே போட்டு விடுக்கிறார்கள். நாடு முழுவதும், உலகம் முழுவது இப்பொழுது எல்லம் வெட்ட வெளிச்சமாகிறது. இனையத்திலும், இது பற்றி மக்கள் பதிவுகளை எழுத தொடங்கியுள்ளனர். புஷ் ஷு என்ற புதிய பிராண்ட் உருவானது. ஒரு கம்பேனியே உருவாகியுள்ளது. இதெல்லாம் ஒரு முன்னேற்றம் தானே!

இது சரியா தவறா?
தெர்லியே பா...

அடுத்து யார்?
.....

தமிழகத்தில் இது நடந்திருக்கா..?
இன்னும் இல்லை. மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் என்று நான் நினைக்கிறேன்.

இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்....?

Comments

பா.

பா. சிதம்பரம் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ???

பா.

பா. சிதம்பரம் - இந்திய உள்துறை அமைச்சர். பதிவினை திருத்திவிட்டேன்.

//இன்னும்

//இன்னும் இல்லை. மக்கள் மீகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் என்று நான் நினைக்கிறேன்.//
:-)

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

Mollom CAPTCHA (play audio CAPTCHA)
Type the characters you see in the picture above; if you can't read them, submit the form and a new image will be generated.

அமேசானில் வாங்க...