நல்லப்படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம். சுவரஸ்யமான திரைக்கதையுடன் சுவரஸ்யமான இரு காதல் ஜோடிகளின் வாழ்க்கையோடு ஒன்ற செய்த இயக்குனருக்கு எனது பாரட்டுக்கள்.
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுவது, அதில் பயணம் செய்த மக்களின் வாழ்க்கை பற்றி சிறு சிறு காட்சியமைபில் இயக்குணர் சரியாகவே காட்டியுள்ளார். சுவரஸ்யத்திற்காக இரு காதல் ஜொடிகள். அனைவரும் நன்றாகவே நடித்துள்ளனர்.
இதனை ஒரு படமாக பார்க்க கூடாது. ஒரு பாடமாக பார்க்க வேண்டும். நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது மெதுவாகவும், பார்த்து ஒழுங்காகவும் பயணிக்க வேண்டும். அடுத்தவர்க்கு தொந்தரவு கொடுக்கும் அளவுக்கு எதனையும் செய்யக்கூடாது. அது பெரிய விபத்தினை ஏற்படுத்தும்.
அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக்கொள்ளவது போல் காட்சியமைக்கபட்டுள்ளது. இது உண்மையாக நடந்துள்ளது. bus accident in tamilnadu அல்லது செய்தியாக தேடினால் கூட, உங்களுக்கு அன்மையில் நடந்த விபத்துப்பற்றிய செய்தியை படிக்கலாம்.
அரசு பேருந்துகள் யாரையும் மதிப்பதில்லை என்பது தான் கசப்பான உண்மை. அவர்கள் ஓட்டும் விதம் கண்டிக்கதக்கவை. நான் நிரையதடவை SETCயில் சென்றுள்ளேன். போய் சேர்ந்தால் போதும் என்று தான் இருக்கும். நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இஷ்டதுக்கு தான் வண்டி செல்லும். பொதுமக்களை பற்றி கவலைப்படும் ஓட்டுனர் - நடத்துனர் மிக குறைவே.
தனியார் பேருந்து நடத்தும் விதம் கண்டிக்கதக்கவை. அண்மையில் நடந்த KPN VOLVO Sleeper பேருந்து விபத்து பற்றி கேட்டிருப்போம். அது மிக கோரமான விபத்து. அனைவரும் தீயில் கருகி இரந்தனர். தப்பிக்க வழியில்லாமல் தீயிற்கு பலியானார்கள்.
படம் பார்த்த எனக்கு கண்ணீரில் நீர் வந்தது. அந்த அளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியது. நானே பயணிக்கும்போது, இது மாதிரியான விபத்தில் சிக்கியிருக்க நேர்ந்திருக்க கூடும்.
ஒரு தடவை, KSRTC Rajahamsa பேருந்தின் முன் கண்ணாடி, விழுந்தது. சாலையின் நடுவில் உள்ள கற்கலின் மீது மோதியது. அங்கிருந்த TATA Sumo மீது மோதியது. ஒரு வழியாக யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. நாங்கள் மாற்றுப்பேருந்துக்கு அந்த நள்ளிரவில், இருளில் பயந்து நின்று கொண்டிருந்தோம். தீடீர்னு, ஒரு Maruthi OMNI வேன் எங்களது பஸ் பின்புறம் மோதியது. அப்போது நெடுஞ்சாலை சீரமைப்பு வேலை நடந்துக்கொண்டிருந்ததால் பாதை மாறி மாறி செல்லவேண்டும். இதுவும் ஒரு வித காரணம் விபத்து நடப்பதற்க்கு. இப்படி பட்ட விபத்தினை தவிர்க்க NHAI ஏதாவது செய்ய வேண்டும்.
மற்றும் ஒருமுறை, ஓசூரில் இருந்து சென்னை வரும் சாதா Express பேருந்தில் ஏறினேன். ஓட்டுனர், பான்பராக் போட்டு ஓட்டினார். இரவு 2 இருக்கும். சென்னையை அடுத்துள்ள சிட்கோ அருகில் சிக்-சாக் ஆக ஓட்டுனர் பேருந்தினை ஓட்டினார். ஏதோ நினைவில் எழுந்த நான், ஓட்டுனர் இவ்வாறு ஓட்டுவதை பார்த்து கத்தினேன். ஓட்டுனர் மயங்கிவிட்டார். நான் குறல் கொடுத்ததால் எங்களுக்கு முன் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதல் தவிர்க்கப்பட்டது. அதிலும், அவர் எந்த ஒரு வண்டியின் பின் சென்றாலும், 10மீ இடைவேளை விடுவதே இல்லை. பின்பு, காவல் அதிகாரி மிரட்டிய பின்பு, பேருந்து நிறுத்தப்பட்டது. பின் வந்துகொண்டிருந்த பேருந்தில் மக்கள் அனைவரும் பயணித்தோம். நின்றுக்கொண்டே....ஆனால் உயிருடன்...
ஓட்டுனர்கள் மெதுவாக செல்ல வேண்டும். ஓட்டுனர்களை சீக்கரம் பயணிக்கச்சொல்லி தொந்தரவு செய்யக்கூடாது. அரசு மற்றும் தனியார் நிருவணம் இதுபோல் நிகழவிர்க்கும் விபத்தினை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும்.
Comments
Post new comment