ஓ போடு: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறபோவது

ஒபாமா
60% (21 votes)
மெக்கெயின்
9% (3 votes)
வேறு வேலை இருந்தா பாரு
31% (11 votes)
Total votes: 35

ஆத்திசூடி படித்தால் கழுத்து வலி மறையுமா?

அனைவரும் ஒளவையார் எழுதிய ஆத்திசூடி அறிவீர். சிறு வயதில் படித்திருப்பீர்கள். தமிழ் விக்கிபீடியாவிலிருந்து...
"ஆத்திசூடி என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி"

சிறப்பு இடுகை: இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளியை முன்னிட்டு இந்த சிறப்பு இடுகை. அதில் என்ன சிறப்பு என்று நீங்கள் எண்ணலாம்..? சன் டிவி, ஸ்டார் டிவி, கலைஞர் டிவி போன்ற அலைவரிசைகளில் தீபாவளியை முன்னிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள். அதே போல், தான் இந்த சிறப்பு இடுகை. எப்படி....? நீங்களும், ஒரு தீபாவளி சிறப்பு இடுகை இடுங்களேன்!

ஏன் அஜித் மற்றும் அர்ஜுன் ஈழத்தமிழர்களுக்காக போராட வேண்டும்?

தமிழர்களுக்காக தமிழர்கள் தான் போராட வேண்டும். அதையையும் மீறி ஒருவர் வந்து போராடினால் அது அவரது மனிதாபிமானத்தை காட்டுகிறது. அப்படியென்றால் போராட்டத்திற்கு வராதவர்களுக்கு மனிதாபிமானம் இல்லையென்று அர்த்தம் இல்லை. போராட்டத்திற்கு வராதவர்களை திட்டுவது, வம்பிழுப்பது தேவையில்லாத வேலை. உதாரணத்துக்கு, தமிழ் திரையுலகம் இலங்கையில் நடக்கும் தமிழ் இணப்படுகொலையை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்கு தமிழ் நடிகர், நடிகைகள் பெரும்பாலும் வரவில்லை. அவர்கள் வராமல் போனது ஒரு பெரிய குற்றம், என்று கூறுகின்றனர். இது சரி என்று எனக்கு படவில்லை.

இந்திய இரயில்வே, இது நியாயமா?

தீபாவளி பண்டிகையையெட்டி, பெங்களூரிலிருந்து சென்னைக்கு இரயிலில் வர, மூன்று மாதம் முன் IRCTC இணையத்தில் ரிசர்வ் செய்திருந்தேன். முன்னரே விரைவாக ரிசர்வ் செய்தால் பொதுவான படுக்கை(berth) கிடைக்கும் என்ற ஆசைதான். இடைபட்ட படுக்கை கிடைத்தது. எனது இருக்கையின் எண்: 32 ஆக இருந்தது. எனக்கு ஓரத்தில் இருக்கும் படுக்கையில்(side berth) காளை நீட்டி படுக்க முடியாது. படுக்கை சிறிதாக இருக்கும். அதில் மண்னை வாரி போட்டுவிட்டது நேற்று. அதாவது, நான் ரிசர்வ் செய்யும் பொழுது அந்த இரயில் பெட்டியில் சைடு இடைப்பட்ட படுக்கை இல்லை. அண்மையில் அதனை இணைத்ததால் தான் பிரச்சனை. என்னவென்றால், சைடு இடைப்பட்ட படுக்கை வந்ததால், இருக்கைகளின் எண்கள் மாறின. எனது இருக்கை எண் 32லிருந்து 36க்கு மாறியது. 36 என்பது சைடு மேலிருக்கும் படுக்கை. சரி கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து படுத்துக்கொள்ளலாம் என்று பார்த்தால், முடியவில்லை. கால் மேல் கால் கூட போட முடியாது. உட்காரவும் முடியாது. இரயிலின் மேல் பகுதி இடிக்கும்.

இந்தியாவுக்கு சந்திராயன் தேவைதானா?

நிலவு எப்படி உருவானது என்பது பற்றி ஆராய்ச்சி செய்ய, சந்திராயன்-I என்னும் விண்கலத்தை இந்திய விண்வெளி அராய்ச்சிக் கழகம் நிலவுக்கு அனுப்ப இருக்கிறது. இது வருகின்ற அக்டோபர் மாதம் 22 - 26 இடை பட்ட நாட்களில் அனுப்பபடும். இதன் பொருட்செலவு 386 கோடிகள் ஆகும். மேலும் இந்த விண்கலத்தால் எந்த ஒரு வர்த்தக ரீதியிலான லாபம் கிடையாது. ஏன் இதனை நாம் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நிலவு பற்றி தெரிந்து நாம் என்ன செய்ய போகிறோம்? அதற்கு பூமி சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் நமது பூமிக்கு புண்ணியமாய் போகும்.

முதலீட்டுற்கான யோசனைகள்!

Delta Airlinesக்கான பங்குகளை ஒரு வருடத்திற்கு முன், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்கியிருந்தால், அதன் மதிப்பு இப்பொழுது ரூபாய் 4,900 மட்டுமே!
AIGக்கான பங்குகளை ஒரு வருடத்திற்கு முன், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்கியிருந்தால், அதன் மதிப்பு இப்பொழுது ரூபாய் 3,300 மட்டுமே!
Lehman Brothersக்கான பங்குகளை ஒரு வருடத்திற்கு முன், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்கியிருந்தால், அதன் மதிப்பு இப்பொழுது ரூபாய் 0 மட்டுமே!

ஓ போடு: மக்களுக்கு நல்லது செய்ய ஆட்சி, பதவி தேவையா?

சரோஜா - ஆங்கில படத்தின் அட்ட காப்பி


அதிக ஹைப்புடன் வெளிவந்துள்ள வெங்கட் பிரபுவின் படம் ”சரோஜா”. சென்னை 600028 படம் எதிர்பாராத பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றி நியாயமானது தான். ஏன்னென்றால், அது ஒரு வித்தியாசமான படம். எந்த படத்தினையும் காப்பியடிக்கப்படாத படம் அது. சாதாரணமான கதை, கிரிக்கெட், நண்பர்கள், மொக்கை, காதல், தோரகம் போன்வை அமைந்தவை. அதனால் தான் அது மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. ஆனால் அவர் அதை வைத்துக்கொண்டு சரோஜா என்ற ஒரு மொக்கை படத்தை எடுத்திருக்கிறார். இது ஒரு ஆங்கில படத்தின் அட்டை காப்பியாகும். அந்த படத்தின் பெயர் ஜட்ஜ்மெண்ட் நைட்(Judgement Night) ஆகும்.

அமேசானில் வாங்க...

Syndicate content