என் அப்பா சொன்ன வாக்கியம் தான் அது. எனக்கு விவரம் தெரிந்தவரை அவரது வாழ்வில் சோர்ந்து போய் நான் பார்த்தது கிடையாது. ஆனால், இப்பொழுது வயது ஆக ஆக கை, கழுத்து வலிகள் அவரை தாக்குகிறது. என்ன செய்வது...சோர்ந்து போய் விட்டார். எப்பொழுதுமே அவர் சோர்ந்து போக மாட்டார். எந்த வித கடினத்தையும் எளிதில் எடுத்துக்கொள்வார். அதனை சரிவர செய்துவிடுவார். எந்த வித பிரச்சனைகளையும் சமாளித்துவிடுவார். ஆனால் இப்பொழுது உடல் நல பிரச்சனையில் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது வரைக்கும் எந்த வித நோய்க்கும் மாத்திரை மருந்துகள் சாப்பிட்டதில்லை. எப்ப்பொழுதாவது தலை வலித்தால், ஒரு சூடா டீ அடிப்பார். நன்றாக தூங்குவார். அது சரியாகிவிடும்.
அடேங்கப்பா... நமது இந்தியாவில் என்ன அதிசயம். 2008-2009 வது ஆண்டின் மொத்த வருமான வரி வசூல் கடந்த நிதி ஆண்டை விட 32.54 சதவிதமாக உயர்ந்துள்ளது. மக்கள் அனைவரும் வரியை கட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்று இதன் மூலம் நாம் அறியலாம். வரியினை கட்டும் மக்கள் அவர்களுக்குரிய வசதிகளை இந்திய அரசு செய்து தருகிறதா என்பது கேள்விக்குறி(எனக்குத் தெரிந்தவரை).
பெரும் எதிர்ப்பார்புகளோடு சென்றேன். சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலையில் சந்திப்பு நடந்தது. பொட்டீக்கடையார் வருவார் வருவார் என்று சொல்லிகொண்டு ஒரு பக்கம் இருக்கையில், பொது இடங்களில் புகைப்பது சரியா தவறா என்ற வாதத்திலிருந்து தொடங்கியது சென்னை வலைப்பதிவர் சந்திப்பு. பொது இடங்கள் என்றால் அது என்ன. பூங்காவில் புகைக்கலாம் ஆனால் ஓட்டல்கள், நடைபாதைகள், பார்கள் போன்ற இடங்களில் புகைக்க கூடாத என்ற வாதம் அனல் பறக்க நடந்தது. எழுத்தாளர் ஞாநியும் வந்திருந்தார். சில வினாடிகள் கழித்துவிட்டுச் சென்றார். அவர் எதுவும் பேசவில்லை.
நீங்க ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சங்கரின் எந்திரன் - தி ரொபோ படத்தின் அறிமுக பாட்டு. இந்த பாட்டு அனைவருக்கும் பிடிக்கும் என நான் நம்புகிறேன்.

இன்று முதல் நமது நாட்டில் புகைப்பதற்கு தடை. அதாவது, தம் அடிக்கக்கூடாது. அப்படி பொது இடங்களில் அடித்தால், ரூ.200 அபராதம் கட்ட வேண்டியது வரும். இது உணவகங்கள், பார்கள், அலுவலகங்கள் மற்றும் விமான நிலையம் போன்ற பொது இடங்களில் இன்று முதல அமலுக்கு வருகிறது. இதனை அமல் படுத்தியது இந்திய சுகாதாரத் துறை.

தம் அடிப்போர்க்கு இனி சுதந்திரம் இல்லையப்பா. எனக்கு தம் அடிக்கிற பழக்கம் கிடையாது. ஆனால் ஒரு தடவை சிறு வயதில் முயன்று இருக்கிறேன். நாட்காட்டிய்ன் காகிதத்தை வைத்துக்கொண்டு சுருட்டி, வாயில் வைத்து பத்த வைத்தேன். அவ்வுளவு தான், டமால்னு
பத்திகிச்சு...வாயிலேயும் சுட்டுக்கிடேன். அன்றைக்கு முடிவு பன்னதது தான். இன்னும் செம வலுவாக உள்ளேன்.
நானும் எதாச்சும் பன்னி நம்ம தமிழ் வலைபதிவர்களில் பிரபலமாகனும்னு நினைக்கிறன். ஒன்னும் வேலைக்கு ஆக மாட்டேங்கறது. நம்ம வலைப்பதிவர்களில் பிரபலமானவர்கள்(எனக்கு தெரிந்த) இட்லி வடை, லக்கிலுக், பத்ரி எண்ணங்கள், பாஸ்டன் பாலா, , அதிஷா, டோண்டு, வால்பையன் ஆவர்கள். இன்னும் நிறைய பேர் இருக்கின்றார்கள். இவர்களுக்கெல்லாம் எப்படித்தான் பதிவு எழுத தோனுதோ.... ரூம் போட்டு யோசிப்பாங்களோ...
என்னவென்று சொல்வேன். படம் படு சூப்பர். எதார்த்தமானப் படம். அண்ணன் தங்கைக்கு இடையே நடக்கும் சண்டை. சொத்து விவகாரத்தால் இந்த அவர்களது சண்டையின் விலைவால், ஒரு ரவுடியிடம் பிரச்சனையாகி விடுகிறது. அந்த ரவுடியிடம் எதிர்த்து சண்டை போடாமல் ஒதுங்கிப்போகும் ஹீரோ. இது ரொம்பவும் எதார்த்தமான கதைதான். ஏனென்றால், ஹீரோ பிரச்சனையை சந்திக்க மாட்டார். சுழந்து சுழந்து சண்டை போடமாட்டார்(கிளைமேக்ஸில் மட்டும் கொஞ்சம் இருக்கு).

அண்ணன் அர்ஜுன்(வினய்), தங்கை பூரணி (லெகா வாசிங்டன்), காதலி கொடைமுளகாய்(பாவனா), அர்ஜுனின் நண்பர்கள் (விவேக் மற்றும் சிலர்). அர்ஜுன் லண்டனில் வேலை பார்த்துக்கொணடு இந்தியாவில் இருக்கும் தனது அப்பாவுக்கு பணம் அனுப்புவார். அப்பா இறந்துவிடுகிறார். ஆகையால், லண்டனிலிருந்து மீண்டும் இந்தியாவுக்கு வருகிறார் நம்ம அர்ஜுன். தான் அனுப்பிய பணத்தினை வைத்து கட்டிட தொழிலை ஆரம்பிக்க ஆசை. அதர்க்காக தி.நகரில் இடமெல்லாம் பார்க்கிறார். ஒரு இடம் அமைய, அதனை வாங்க வங்கியிலிருந்து பணம் எடுக்கச்சென்றால், வங்கியில் வெறும் பதினைந்து ஆயிரத்தி சொச்சம் தான் உள்ளது. அதிர்ச்சியடைந்த அர்ஜுன் அப்பாவின் நண்பர்களிடம் சொத்து பற்றி கேட்கிறார். யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்கின்றனர்.
ஆனால் ஒருவர் மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால், அவருக்கு மட்டும் தெரிந்த விசயம். அது என்னவென்றால், அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் உள்ளதாகவும், குடும்பத்தில் ஒரு பெண் உள்ளதாகவும் அர்ஜுனுக்கு தெரிய வந்தது. மேலும் அதிர்ச்சியடைந்து விட்டன் அர்ஜுன். தனக்கும் தனது அம்மாவுக்கும் அப்பா திரோகம் செய்து விட்டதாக என்னி கவலையடைந்தார். அனைத்து சொத்துகளும் இரண்டாவது மனைவிடம் உள்ளது என்று தெரியவந்தது. இதர்கிடையில் ஒரு காட்சியில், அர்ஜுன், பூரனிக்கு லிப்ட் கொடுப்பார். பேனாவும் கொடுத்து உதவி புரிவார். அப்பொழுது தான் பூரனியின் கணவு(அமேரிக்கா சென்று MIT யில் படிக்க வேண்டும் என்பது) அவருக்கும் தெரியவரும். இந்த சம்பவத்தில் பூரனி தனது தங்கை என அவருக்கு தெரியாது.
தென்பாண்டிச் சீமையிலே என்ற பாடலை நான் பாடி மியூசிபோ இணையதளத்தில் வெளியிட்டுள்ளேன். இது எனது சங்கீத பயணத்தில் முதற்கட்ட முயர்ச்சி. எனக்கு பாட்டு பாடனும்னு ஆசை. அதாங்க, நான் முதல்தடவையாக முயன்றிருக்கிறேன். எனக்கு சங்கீதம்லாம் தெரியாது. பிழையிருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.
Recent comments
51 weeks 1 day ago
51 weeks 3 days ago
1 year 2 weeks ago
1 year 2 weeks ago
1 year 3 weeks ago
1 year 3 weeks ago
1 year 4 weeks ago
1 year 7 weeks ago
1 year 8 weeks ago
1 year 9 weeks ago