என்னவென்று சொல்வேன். படம் படு சூப்பர். எதார்த்தமானப் படம். அண்ணன் தங்கைக்கு இடையே நடக்கும் சண்டை. சொத்து விவகாரத்தால் இந்த அவர்களது சண்டையின் விலைவால், ஒரு ரவுடியிடம் பிரச்சனையாகி விடுகிறது. அந்த ரவுடியிடம் எதிர்த்து சண்டை போடாமல் ஒதுங்கிப்போகும் ஹீரோ. இது ரொம்பவும் எதார்த்தமான கதைதான். ஏனென்றால், ஹீரோ பிரச்சனையை சந்திக்க மாட்டார். சுழந்து சுழந்து சண்டை போடமாட்டார்(கிளைமேக்ஸில் மட்டும் கொஞ்சம் இருக்கு).

அண்ணன் அர்ஜுன்(வினய்), தங்கை பூரணி (லெகா வாசிங்டன்), காதலி கொடைமுளகாய்(பாவனா), அர்ஜுனின் நண்பர்கள் (விவேக் மற்றும் சிலர்). அர்ஜுன் லண்டனில் வேலை பார்த்துக்கொணடு இந்தியாவில் இருக்கும் தனது அப்பாவுக்கு பணம் அனுப்புவார். அப்பா இறந்துவிடுகிறார். ஆகையால், லண்டனிலிருந்து மீண்டும் இந்தியாவுக்கு வருகிறார் நம்ம அர்ஜுன். தான் அனுப்பிய பணத்தினை வைத்து கட்டிட தொழிலை ஆரம்பிக்க ஆசை. அதர்க்காக தி.நகரில் இடமெல்லாம் பார்க்கிறார். ஒரு இடம் அமைய, அதனை வாங்க வங்கியிலிருந்து பணம் எடுக்கச்சென்றால், வங்கியில் வெறும் பதினைந்து ஆயிரத்தி சொச்சம் தான் உள்ளது. அதிர்ச்சியடைந்த அர்ஜுன் அப்பாவின் நண்பர்களிடம் சொத்து பற்றி கேட்கிறார். யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்கின்றனர்.
ஆனால் ஒருவர் மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால், அவருக்கு மட்டும் தெரிந்த விசயம். அது என்னவென்றால், அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் உள்ளதாகவும், குடும்பத்தில் ஒரு பெண் உள்ளதாகவும் அர்ஜுனுக்கு தெரிய வந்தது. மேலும் அதிர்ச்சியடைந்து விட்டன் அர்ஜுன். தனக்கும் தனது அம்மாவுக்கும் அப்பா திரோகம் செய்து விட்டதாக என்னி கவலையடைந்தார். அனைத்து சொத்துகளும் இரண்டாவது மனைவிடம் உள்ளது என்று தெரியவந்தது. இதர்கிடையில் ஒரு காட்சியில், அர்ஜுன், பூரனிக்கு லிப்ட் கொடுப்பார். பேனாவும் கொடுத்து உதவி புரிவார். அப்பொழுது தான் பூரனியின் கணவு(அமேரிக்கா சென்று MIT யில் படிக்க வேண்டும் என்பது) அவருக்கும் தெரியவரும். இந்த சம்பவத்தில் பூரனி தனது தங்கை என அவருக்கு தெரியாது.
Recent comments
20 weeks 1 day ago
33 weeks 5 days ago
37 weeks 3 days ago
46 weeks 6 days ago
50 weeks 48 min ago
51 weeks 6 hours ago
1 year 1 week ago
1 year 1 week ago
1 year 2 weeks ago
1 year 2 weeks ago