சக்கரை

கடன் இருக்கும்வரை நோயில்லை. கடன் அடைத்தபின் நோய் வந்தது.

என் அப்பா சொன்ன வாக்கியம் தான் அது. எனக்கு விவரம் தெரிந்தவரை அவரது வாழ்வில் சோர்ந்து போய் நான் பார்த்தது கிடையாது. ஆனால், இப்பொழுது வயது ஆக ஆக கை, கழுத்து வலிகள் அவரை தாக்குகிறது. என்ன செய்வது...சோர்ந்து போய் விட்டார். எப்பொழுதுமே அவர் சோர்ந்து போக மாட்டார். எந்த வித கடினத்தையும் எளிதில் எடுத்துக்கொள்வார். அதனை சரிவர செய்துவிடுவார். எந்த வித பிரச்சனைகளையும் சமாளித்துவிடுவார். ஆனால் இப்பொழுது உடல் நல பிரச்சனையில் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது வரைக்கும் எந்த வித நோய்க்கும் மாத்திரை மருந்துகள் சாப்பிட்டதில்லை. எப்ப்பொழுதாவது தலை வலித்தால், ஒரு சூடா டீ அடிப்பார். நன்றாக தூங்குவார். அது சரியாகிவிடும்.

அமேசானில் வாங்க...

Syndicate content