தமிழ்ப்பதிவு எழுத ஆரம்பித்து 2 வருடம் 3 மாதங்கள் ஆகின்றது. ஆரம்பத்தில் எனக்கு தமிழ் எழுத வரவே வராது. ஆனால் இப்பொழுது ஓரளவுக்கு எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் இலக்கணம் மற்றும் சந்திப்பிழைகள் இல்லாமல் எழுத முயற்சித்து வருகிறேன். கடந்த 27 மாதங்களாக நானும் வலைத்தளங்களில் உலா வந்துக்கொண்டிருக்கிறேன். என்னையும் ஊக்கப்படித்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை இந்த இடுகையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
சுமார் 62 திரைப்படங்கள் 2008ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளன. என்ன தான் திருட்டு விசிடிக்களையும், இணைய கீழ் இறக்கியையும் ஒழிக்க முடியவில்லையென்றாலும், சில படங்கள் மக்களை தியேட்டருக்குள் சுண்டி இழுக்க தான் செய்கின்றன. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களும், குறைவான செலவில் உருவாக்கப்பட்ட படங்களும் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. உதாரனத்துக்கு தசாவதாரம் சுமார் 100 கோடி செலவில் உருவாக்கினர். ஓரளவுக்கு ஓடின. சுப்பிரமணியபுரம் சில கோடிகளே செலவுசெய்து உருவாக்கப்பட்டது. அது மாபெரும் வெற்றியை பெற்றது.
Recent comments
20 weeks 1 day ago
33 weeks 5 days ago
37 weeks 3 days ago
46 weeks 6 days ago
50 weeks 48 min ago
51 weeks 6 hours ago
1 year 1 week ago
1 year 1 week ago
1 year 2 weeks ago
1 year 2 weeks ago