ஆம். அறிவை வாங்கினேன். நேற்று நான் சென்னையில் இருந்த போது, 32வது சென்னை புத்தகக்காட்சிக்கு சென்றேன். அங்கு ரூ500வரை மதிப்புள்ள புத்தகங்களை வாங்கினேன். இது வரை காசு கொடுத்து நான் படிப்புத்தவற எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் வாங்கியதில்லை. எனக்கும் புத்தகம் படிக்கும் பழக்கமும் இது வரை இருந்ததில்லை. ஆனால் தமிழ் பதிவுகள் எழுத தொடங்கிய நாளில்லி்ருந்தே, தமிழை நன்றாக எழுத, படிக்க ஆசை வந்தது. அதனை விலைவாக நிறை வலைப்பதிவுகள படிக்க ஆரம்பித்தேன். ஓரளவுக்கு தமிழில் எழுத கற்றுக்கொண்டேன். வயது ஆக் ஆக மணதில் சில மாற்றங்கள் நடப்பது இயற்கை. அது போல், எனக்கும் புத்தகம் படிக்கு ஆசை பிறந்தது. அதனால் தான் புத்தககாட்சிக்கு சென்றேன்.
பெரும் எதிர்ப்பார்புகளோடு சென்றேன். சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலையில் சந்திப்பு நடந்தது. பொட்டீக்கடையார் வருவார் வருவார் என்று சொல்லிகொண்டு ஒரு பக்கம் இருக்கையில், பொது இடங்களில் புகைப்பது சரியா தவறா என்ற வாதத்திலிருந்து தொடங்கியது சென்னை வலைப்பதிவர் சந்திப்பு. பொது இடங்கள் என்றால் அது என்ன. பூங்காவில் புகைக்கலாம் ஆனால் ஓட்டல்கள், நடைபாதைகள், பார்கள் போன்ற இடங்களில் புகைக்க கூடாத என்ற வாதம் அனல் பறக்க நடந்தது. எழுத்தாளர் ஞாநியும் வந்திருந்தார். சில வினாடிகள் கழித்துவிட்டுச் சென்றார். அவர் எதுவும் பேசவில்லை.
கடந்த வெள்ளியன்று நான் சென்னைக்கு செல்ல யோசித்தேன். கையில் 150 ரூபாய் மற்றும் சில சில்லரை தான் இருந்தது. இதனை மட்டும் வைத்துக்கொண்டு சென்னைக்கு செல்ல ஆசைப்பட்டேன். போய் தான் பார்க்கலாமே என்று என்னினேன்.
சென்னை செல்லும் வழியில் சித்தூரில் உள்ள உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டன. அங்கு பசியார உணவை உண்டேன். ஒரு மசாலா தோசை மற்றும் சப்பாட்டி. 27 ரூபாய் ஆனது. மசாலா தோசை மட்டும் 17 ரூபாயாம். வாயடைத்து போனேன். பின்னர் ஒரு இளநீர் அருந்தினேன். பின்னர் கேட்பரீஸ் பைட்ஸ் மற்றும் டைகர் பிஸ்கேட் ஆகியவை வாங்கி பேருந்தில் ஏறினேன்.
நான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரிலிருந்து 13ஆம் தேதி அன்று சென்னைக்கு பிறப்பட்டேன். எந்த வித முன் பதிவும் செய்யவில்லை. நான் சரியாக மதியம் 1.30 மணியளவில் பயணத்தை தொடர்ந்தேன்.
பெங்களூர் கெம்பகவுடா பஸ் நிலையத்திற்கு 3 மணிக்கு சென்றேன். சென்னைக்கு போவதற்க்காக காத்திருந்தேன். காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை. பசி தாங்க முடியலைன்னு இரண்டு முட்டை புப் சாப்பிட்டேன்.
நான் எதோ ஒன்றை தேடும் பொழுது, எனது கண்னில் சென்னையின் புகைப்படங்கள் யாகு ஃபிளிக்கர் இணையத்தில் தென்பட்டது. திரு.சத்திஷ் என்பவர் எடுத்திருகிறார்.
இந்த தொடுப்பில் காணலாம் - http://www.flickr.com/photos/sathishc/
இதனை இங்கேயும் காணலாம். ஃபிளிக்கரின் சிலைடுஷொவை கீழே பதித்துள்ளேன்
Recent comments
50 weeks 23 hours ago
50 weeks 3 days ago
1 year 1 week ago
1 year 1 week ago
1 year 1 week ago
1 year 2 weeks ago
1 year 3 weeks ago
1 year 6 weeks ago
1 year 7 weeks ago
1 year 8 weeks ago