பெங்களூர் நடைப்பாதை மக்கள் நடப்பதர்க்காக இல்லை. இரு வாகண ஓட்டுபவர்களுக்கான தனி பாதை. (நானும் சில நேரத்தில டயம் ஆகிடுச்சினா, நடைப்பாதைல ஓட்டி போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிவிடுவேன்.) போக்குவரத்துக் காவலர்களை அதிகம் காண இயலாது. நிறைய காவலர்கள் அரசு உழியர்கள் அல்ல. டெம்பரவரியாக(தற்காலிகமாக) ஆட்களை சேர்த்து சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துகிறார்கள்.
இது மாதிரியான பதிவினை பார்த்திருப்பீர்கள். நானும் கூட்டத்தில ஐக்கியமாகிவிட்டேன். நானும் பெங்களூரை பற்றி சொல்லபோரேன்.
கடந்த வெள்ளியன்று நான் சென்னைக்கு செல்ல யோசித்தேன். கையில் 150 ரூபாய் மற்றும் சில சில்லரை தான் இருந்தது. இதனை மட்டும் வைத்துக்கொண்டு சென்னைக்கு செல்ல ஆசைப்பட்டேன். போய் தான் பார்க்கலாமே என்று என்னினேன்.
சென்னை செல்லும் வழியில் சித்தூரில் உள்ள உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டன. அங்கு பசியார உணவை உண்டேன். ஒரு மசாலா தோசை மற்றும் சப்பாட்டி. 27 ரூபாய் ஆனது. மசாலா தோசை மட்டும் 17 ரூபாயாம். வாயடைத்து போனேன். பின்னர் ஒரு இளநீர் அருந்தினேன். பின்னர் கேட்பரீஸ் பைட்ஸ் மற்றும் டைகர் பிஸ்கேட் ஆகியவை வாங்கி பேருந்தில் ஏறினேன்.
நான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரிலிருந்து 13ஆம் தேதி அன்று சென்னைக்கு பிறப்பட்டேன். எந்த வித முன் பதிவும் செய்யவில்லை. நான் சரியாக மதியம் 1.30 மணியளவில் பயணத்தை தொடர்ந்தேன்.
பெங்களூர் கெம்பகவுடா பஸ் நிலையத்திற்கு 3 மணிக்கு சென்றேன். சென்னைக்கு போவதற்க்காக காத்திருந்தேன். காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை. பசி தாங்க முடியலைன்னு இரண்டு முட்டை புப் சாப்பிட்டேன்.
பெங்களூர் என்றாலே நமக்கு ஒரு காலத்தில் தோட்டம் மற்றும் குளூரான ஊர் என்று நம் மனதுக்கு தோன்றும். கடந்த சில ஆண்டுகளில், பெங்களூர் என்றாலே தகவல் தொழில் நுட்ப நகரம் என்று மாறிவிட்டது. சிறிது காலமாக, பெங்களூர் என்றாலே அதிகம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரமாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் சிலிக்கான் வேலி எனக்கூறப்படும் பெங்களூர். அந்த ஊரில் நடக்கும் அநியாயங்கள் ஏராலம். அவை என்னவென்றால் திருட்டு,கொலை, கொள்ளை, வீட்டு வாடகைப் பிரச்சனை. சமிபத்தில் நாங்கள்(நான், எனது மாமா குடும்பத்தினர்) வீட்டு வாடகைப் பிரச்சனையை சந்தித்தோம்.
Recent comments
21 weeks 18 hours ago
21 weeks 18 hours ago
25 weeks 2 days ago
25 weeks 4 days ago
28 weeks 5 days ago
29 weeks 19 hours ago
29 weeks 2 days ago
29 weeks 5 days ago
31 weeks 22 hours ago
33 weeks 6 days ago